நிலவில் ஜெல் போன்ற பொருளை கண்டுபிடித்த சீனாவின் சேன்ஜ் 4 லேண்டர்!

|

சீனாவின் சேன்ஜ் 4 மிஷன் தற்போது நிலவின் தொலைதூர பகுதியை ஆராய்ந்து வருகிறது. எப்போதும் பூமியை நோக்கி இருக்காத நமது நிலவின் ஒருபகுதியான இதைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை.ஆனால் தற்போது அங்கு உலவி வரும் ரோவர் உண்மையிலேயே விசித்திரமான பொருளை கண்டுபிடித்துள்ளது.

நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நிலவில் தரையிறங்கிய சேன்ஜ்5, உடனடியாக அங்குள்ள வித்தியாசமான நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியதுடன், சோதனையின் ஒரு பகுதியாக அங்கு நிலவில் மைக்ரோ கிராவிடி-ல் பருத்தியை விளைவிக்க முயற்சித்தது. தற்போது இந்த லேண்டர் நிலவின் பரப்பில் ஜெல் போன்ற விசித்திரமான பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.

விசித்திர பொருளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்

விசித்திர பொருளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்

இந்த மிஷனின் யூடு-2 ரோவர் இந்த மர்மத்தை நிலவில் அதன் 8 வது நாளில், அதாவது பூமியில் ஜூலை 25ஆம் தேதி உள்ளபோது கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பானது மிகப்பெரிய மர்மத்திற்கு வழிவகுத்துள்ளதால், இந்த மிஷனுக்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகள் ஏற்கனவே இந்த ரோவருக்கு திட்டமிட்ட மற்ற அனைத்து ஆய்வுப்பணிகளையும் தவிர்த்துவிட்டு, விசித்திர பொருளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடிய அதிரவிட்ட சீனா.!அமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடிய அதிரவிட்ட சீனா.!

தனித்த நிறம் மற்றும் அமைப்பு

சீனமொழி பத்திரிக்கையான Our Space வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த ஜெல் நிலவு பள்ளதாக்கில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தனித்த நிறம் மற்றும் அமைப்பு அதனை சுற்றுப்புறத்தில் இருந்து வேறுபடுத்தி காண்பிப்பதால் ரோவர் மூலம் கவனிக்கப்பட்டுள்ளது. இது ஜெல் போன்றது மற்றும் தனித்துவமான நிறத்தை கொண்டுள்ளது போன்ற தகவல்களை தவிர்த்து, அந்த பொருள் எந்தமாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளது போன்ற எந்தவொரு தகவல்களையும் விஞ்ஞானிகள் இதுவரை வெளியிடவில்லை. இது உருகிய கண்ணாடியாக இருக்கலாம் எனவும், நிலவின் பரப்பை விண்கல் தாக்கியபோது உருவாகியிருக்கலாம் எனவும் சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

பூமியில் 14 நாட்கள்

இந்த மர்ம கண்டுபிடிப்பை தவிர, சேன்ஞ்4 ரோவர் மற்ற அறிவியல் பரிசோதனைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேல்ஓட்டின் சேர்மங்களை ஆய்வு செய்வதற்காக இந்த ரோவர் அதன் நியூட்ரான் ரேடியோ டிடெக்டர் மற்றும் லோ-ப்ரீக்வென்சி ரேடியோ டிக்டரை பயன்படுத்த வேண்டும். லூனார் டே எனப்படும் நிலவு நாளின்(பூமியில் 14 நாட்கள்) போது மட்டுமே ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை செய்யும் இந்த லேண்டர்,ஆற்றலை சேமிப்பதற்காக லூனார் நைட் நேரத்தில் ஓய்வு எடுக்கும்.

வைரல் வீடியோ: சிக்கியது அரிய வகை இரட்டை தலை நாகம்.!வைரல் வீடியோ: சிக்கியது அரிய வகை இரட்டை தலை நாகம்.!

 பதில் கிடைக்கும்

எனவே இந்த ஜெல் போன்ற பொருளை தொலைதூரத்தில் இருந்து கண்டறிய சில காலம் ஆகும். ஆனால் இந்த முயற்சியில் நாம் வெற்றியடைந்தால், எப்படி நிலவு உருவானது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
China's Change 4 lander found gel-like substance on the moon!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X