நிலவின் மறுபக்கத்தில் கால்பதித்த சீனா- இஸ்ரோ அடுத்த திட்டம்.!

ஆனால் நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலங்களை அனுப்புவது மிகவும் சவாலான ஒன்று, ஏனென்றால் அந்த விண்கலனிற்கும் நமக்கும் இடையே நிலவு இருப்பதால், நம்மால் விண்கலனை நேரடியாக ரேடியோ சமிக்கைகளை உபயோகித்து தொடர்ப

|

நிலவானது பூமியின் அச்சைப்பற்றி சுழல்வதால், நம்மால் பூமியில் இருந்து நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடியம். இந்த பகுதிக்கு மட்டுமே ஏராளமான ஆய்வு விண்கலன்களை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அனுப்பியுள்ளன.

நிலவின் மறுபக்கத்தில் கால்பதித்த சீனா- இஸ்ரோ அடுத்த திட்டம்.!

ஆனால் நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலங்களை அனுப்புவது மிகவும் சவாலான ஒன்று, ஏனென்றால் அந்த விண்கலனிற்கும் நமக்கும் இடையே நிலவு இருப்பதால், நம்மால் விண்கலனை நேரடியாக ரேடியோ சமிக்கைகளை உபயோகித்து தொடர்பு கொள்ள முடியாது.

வெற்றி பெற்ற சீனா:

வெற்றி பெற்ற சீனா:

நிலவின் மறுபக்கத்தில் விண்கலனை இறக்க மற்ற நாடுகள் செய்த சோதனைகள் பெருபாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சியாங்கே 4 திட்டத்தை சீனா செயல்படுத்தியது. இத்திட்டப்படி, சீனாவானது ஜனவரி 3 , 2019 அன்று வெற்றிகரமாக தனது ஆய்வு விண்கலனை நிலவின் மறுபக்கத்தில் தரை இறக்கியது.

 சியாங்கே 4 :

சியாங்கே 4 :

முன்னே கூறியுள்ளது போல் நம்மால் நேரடியாக நிலவின் மறுபக்கத்தில் இருக்கும் விண்கலனை தொடர்பு கொள்ள முடியாது. ஆகவே இதற்காக, சீனாவானது முதலில் யூக்கிளியோ (Queqiao) என்ற விண்கலனை நிலவு சுற்றுவட்ட பாதையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் செலுத்தியது.

பின்பு ஒரு தானியங்கி இறங்கு வாகனம் மற்றும் Yutu-2 என்ற நிலவு ஊர்தியை நிலவின் சுற்று வட்டப்பாதையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் நிலை நிறுத்தியது. இறுதியாக, 2019 ஜனவரி 3 ஆம் நாள் வெற்றிகரமாக மற்றும் நிலவு ஊர்தி மற்றும் தானியங்கு இறங்கு வாகனத்தை நிலவின் மறுபக்கத்தில் தரை இறங்கியது. இந்த தானியங்கு இறங்கு வாகனம் மற்றும் ஊர்தி போன்றவை நிலவின் மறுபக்கத்தில் இருந்தாலும், யூக்கிளியோ விண்கலனின் உதவியுடன் ஆய்வாளர்களால் அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

 ஆய்வு உபகரணங்கள் :

ஆய்வு உபகரணங்கள் :

சியாங்கே 4 திட்டத்தில் 6 முக்கிய அறிவியல் ஆய்வு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இறங்குதலை படம்பிடிக்கும் புகைப்பட கருவி (Landing Camera), நிலப்பரப்பை படம்பிடிக்கும் கருவி (Terrain Camera), குறைந்த அதிர்வெண் ஸ்பெக்ட்ரோமீட்டர் (LFS), அகல புகைப்படக்கருவி (Panoramic Camera), நிலவு ஊடுருவி ராடார்( Lunar Penetrating Radar) மற்றும் அகச்சிவப்பு இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (Visible and Near-Infrared Imaging Spectrometer). இதில் LFS கருவி மட்டும் சியாங்கே 4 திட்டத்திற்காக புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஏனைய அனைத்து கருவிகளும் சியாங்கே 3 திட்டத்திலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டவை.

சர்வதேச நாடுகளின்பங்களிப்பு:

சர்வதேச நாடுகளின்பங்களிப்பு:

* ஜெர்மனி நாட்டின் லூனார் லாண்டர் நியூட்ரான்ஸ் மற்றும் டோசிமெட்ரி (LND), தரையிறக்க கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.

* ஸ்வீடன் நாட்டின் மேம்பட்ட சிறு அனலைசர் ஃபார் நியூட்ரல்ஸ் (ASAN), ரோவர் மீது நிறுவப்பட்டுள்ளது.

* நெதர்லாந்த்-சீனா குறைந்த-அதிர்வெண் எக்ஸ்ப்ளோரர் (NCLE),நிலவை சுற்றி வரும் விண்கலனில் நிறுவப்பட்டுள்ளது.

 அறிவியல் நோக்கங்கள் மற்றும் சோதனைகள்:

அறிவியல் நோக்கங்கள் மற்றும் சோதனைகள்:

கீழ்கண்ட முக்கியமான சோதனைகள் சியாங்கே 4 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன.

* குறைந்த அதிர்வெண் கொண்ட வானியல் ரேடியோ அலைகள் பற்றிய ஆய்வு.

* நிலவின் மறுபக்கத்தில் இருக்கும் மேற்புற அமைப்புகள் பற்றிய ஆய்வு.

* நிலவின் மறுபக்கத்தில் கிடைக்கும் கனிமங்கள் பற்றிய ஆராய்ச்சி.


இவற்றில் குறிப்பாக விண்வெளி ஆய்வாளர்கள், குறைந்த அதிர்வெண் கொண்ட வானியல் ரேடியோ அலைகள் பற்றிய ஆய்வு முடிவை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நிலவின் மறுபக்கத்தில் பூமியில் இருந்து உருவாகும் ரேடியோ அலைகள் இருப்பதில்லை. ஆகவே, அங்கு ஏதுனும் ரேடியோ அலைகள் கிடைக்குமானால், அது கண்டிப்பாக நம் அண்டவெளியின் வேற்று கிரககங்களில் இருந்து உருவானதாகவே இருக்கும். இதன் மூலம் வேற்று கிரக உயிரினங்கள் பற்றிய ஆய்வு மேலும் சூடு பிடிக்கும்.

கதிர்வீச்சு மற்றும் உயிர் வாழ்வதற்கான ஆய்வு:

கதிர்வீச்சு மற்றும் உயிர் வாழ்வதற்கான ஆய்வு:

ஜெர்மனி நாட்டின் LND கருவியானது கெய்ல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. இது நிலவின் கதிர்வீச்சு மற்றும் நிலவின் தண்ணீர் சாத்தியக்கூறு பற்றியும் ஆய்வு நடத்தும். இந்த ஆய்வு முடிவுகள் எதிர் காலத்தில் மனிதனின் விண்வெளி பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அதுமட்மில்லாமல், 28 சீன பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்ட நிலவு உயிர்கோளமானது (lunar mini biosphere), அதே விண்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது ஒரு 3 கிலோகிராம் எடை உள்ள அலுமினியத்தால் செய்யப்பட்ட உருளை வடிவ பெட்டி. இதனுள் பட்டுப்புழு முட்டைகள், தக்காளி விதைகள் மற்றும் சுவரொட்டிக் கொடி விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலவில் விதைகள் எவ்வாறு முளைக்கின்றன என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

நிலவு ஊர்தியில் பொருத்தப்பட்டுள்ள LPR கருவியின் மூலம் நிலவினுடைய தரையின் அடிப்பகுதியை ஆய்வுசெய்ய முடியும். இந்த ஆய்வின் மூலம் நிலவினுடைய தரையின் தடிமனை துல்லியமாக கணக்கிட முடியும்

சீனாவின் எதிர்கால திட்டம்:

சீனாவின் எதிர்கால திட்டம்:

சீனா, தனது அடுத்த திட்டமான சியாங்கே 5 - க்கு தயாராகி வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், நிலவிலிருந்து ஆய்வு மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து, பின்பு பூமியில் ஆராய்ச்சி செய்வது. சியாங்கே 1 , சியாங்கே 2 மற்றும் சியாங்கே 3 திட்டத்தின் செயல்திறன்களை ஒருங்கே பெற்றதாக சியாங்கே 5 திட்டம் இருக்கும்.

ஜாங் கேஜிங், சீனாவின் கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர், சீனா மாற்று நாடுகளுடன் விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்ற விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அணைத்து நாடுகளும் ஒன்று சேர்த்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டால், கூடிய விரைவில் நிலவில் மனிதர்கள் காலனி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியாவின் சுகன்யான் திட்டம்:

இந்தியாவின் சுகன்யான் திட்டம்:

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ அடுத்த கட்டமாக சந்திராயன்-2 திட்டத்தையும் வெற்றிகரமாகவும் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்தடுத்து பணிகளை செயல்படுத்தி வருகின்றது.

Best Mobiles in India

English summary
china preps landing moon far side : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X