Home
Scitech

நிலவின் தென்துருவத்தில் தளம் அமைக்கும் சீனா! எதற்கு தெரியுமா?

சீன விண்வெளி நிறுவனம் மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய, நிரந்தரமான விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சீனா நிலவில் அடுத்த "10 ஆண்டுகளுக்குள்" ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது என சீனாவின் செய்தி நிறுவனமான ஜிங்காவ் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தளம் அமைக்கும் சீனா! எதற்கு தெரியுமா?

சீன தேசிய விண்வெளி ஆணையம் (CSNA) சந்திரனின் தென்துருவ பிராந்தியத்தில் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க விரும்புவதாக அந்த ஆணையத்தின் தலைவர் ஜாங் கேஜியன் அறிவித்துள்ளதாக செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. இது 1969 மற்றும் 1972 க்கு இடைப்பட்ட காலத்தில் சந்திரனின் நிலநடுக்கோட்டிற்கு அருகில், ஆறுமுறை வெற்றிகரமான நாசாவின் அப்பல்லோ மூன் லேண்டிங் நடைபெற்ற பகுதி ஆகும்.

சீன தேசிய விண்வெளி ஆணையம்

சீன தேசிய விண்வெளி ஆணையம்

சீனாவின் நீண்ட கால நிலவு திட்டங்களின் விவரங்கள் இன்னமும் மேலோட்டமாகவே இருக்கின்றன, ஆனால் சந்திரன் தொடர்பான ஆராய்ச்சிக்கு சீன தேசிய விண்வெளி ஆணையம் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், சீனா நிலவு தொலைதூர பக்கத்தில் ஆளில்லா சேன்ஜ் 4 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கியது. மேலும் இரண்டு தற்காலிக விண்வெளி நிலையங்களான டியான்காங்-1 மற்றும் டியான்காங்-2 ஆகியவற்றிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது.

 நிரந்தரமான விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது

நிரந்தரமான விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது

சீன விண்வெளி நிறுவனம் மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய, நிரந்தரமான விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.அந்த நிரந்தர விண்வெளி நிலையத்தின் முதல்கட்ட பகுதிகள், 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அந்நாட்டின் புதிய லாங் மார்ச் 5 பி ராக்கெட் மூலம் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தொடர்புடையதாக இருக்காது

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தொடர்புடையதாக இருக்காது

இந்த மிஷன் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தொடர்புடையதாக இருக்காது. சர்வதேச விண்வெளி மையம் அதன் செயல்பாட்டு வாழ்நாள் முடிவடையும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது மற்றும் அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே விண்வெளிப்பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை.

கேஜியன்

கேஜியன்

2017ல் விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஆளில்லா லூனார் லேண்டரான சேன்ஜ்5, 2019ல் நிலவை அடைய முயற்சித்து மாதிரிகளுடன் திரும்பும் என கேஜியன் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

சீனா தற்போது அமெரிக்காவை தவிர மற்ற எல்லா நாடுகளையும் விட விண்கலன்களில் அதிகமாக செலவழிக்கிறது. தற்போது ரஷ்ய ராக்கெட் மீது சவாரி செய்யாமல், அமெரிக்காவால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியாது; எனவே ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான ப்ராபிட் இராக்கெட்களை பயன்படுத்தும் வகையில் செயல்முறையை மாற்ற திட்டமிடுகிறது.

 நீண்டகாலம்

நீண்டகாலம்

இன்னும், அமெரிக்க அதிகாரிகள் சந்திரனுக்கு திரும்ப செல்லவும் மற்றும் எதிர்காலத்தில் நீண்டகாலம் அந்த கிரகத்தில் தங்குவதற்கான திட்டங்களும் உள்ளன என்று கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
China Plans to Build a Base near the Moon's South Pole: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X