நாசா, இஸ்ரோவை பின்னுக்கு தள்ளும் சீனா.!

|

சமீபத்தில், இஸ்ரோவின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திர கனவை (நிலாவில் தரை இறங்கும் கனவு) சத்தம் போடாமல் சாதித்து காட்டிய சீனா, தற்போது அடுத்தகட்டமாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிற்கும், அமெரிக்கவை முந்தி விட வேண்டும் என்று போட்டா போட்டி போடும் ரஷ்யாவிற்கும் ஒரு "ஆப்பு" ஒன்றை வைத்து உள்ளது.

 நாசா, இஸ்ரோவை பின்னுக்கு தள்ளும் சீனா.!

அது என்ன ஆப்பு? இஸ்ரோவின் கனவில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டியதை போன்றே அமேரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கும் "சிறப்பான சம்பவம்" அத நடக்குமா? அல்லது "சப்ப மேட்டர்" தானா? என்பதை விரிவாக காண்போம்.

செவ்வாய் கிரக பயணம்:

செவ்வாய் கிரக பயணம்:

சீனாவின் உயர்மட்ட விஞ்ஞானி வெளியிட்டுள்ள தகவலின் படி, அடுத்த ஆண்டு சீனா அதன் செவ்வாய் கிரக பயணத்தை நிகழ்ந்த உள்ளது. சீனா அதன் வெற்றிகரமான சந்திர கிரக பயணத்தை (தரை இறக்கத்தை) தொடர்ந்து தொடர்ச்சியான விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது போல் தெரிகிறது.

பெய்ஜிங்கில் நடந்த மிகப்பெரிய அரசியல் நிகழ்வான சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (சிபிபிசிசி) முதல் நாளில் பேசுகையில், சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரான வு வேயர்ன், சீனாவின் அடுத்த இலக்கு சிவப்பு கிரகம் (செவ்வாய் கிரகம்) தான் என்று கூறினார்.

 60 ஆண்டுகளில் சாதனை:

60 ஆண்டுகளில் சாதனை:

மேலும் பேசிய அவர் "கடந்த 60 ஆண்டுகளில், நாம் நிறைய சாதனைகளை செய்துள்ளோம், ஆனால் உலக விண்வெளி சக்திகளிடம் ஒப்பிடும் போது நாம் தொலைவில் உள்ளோம், நாம் நமது வேகத்தை இன்னும் வேகப்படுத்த வேண்டும்" என்றும் கூறினார். "அடுத்த வருடம், நாம் ஒரு செவ்வாய் விண்கலத்தை விண்வெளிக்குள் செலுத்த உள்ளோம். அது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்து பின் அதன் நிலப்பகுதியில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்" என்றும் வு வேயர்ன் கூறினார்.

3 வது நாடு சீனா:

3 வது நாடு சீனா:

சீனா நிலவிற்கு கூடுதல் விண்கலங்களை அனுப்பும் திட்டங்களையும் கொண்டு உள்ளது, அது நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு திரும்பும். இந்த திட்டம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், நிலவு மாதிரிகளை சேகரித்த மூன்றாவது நாடு என்கிற பெருமையை சீனா அடையும். முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் உள்ளன.

"இந்த ஆய்விற்காக மேற்கு சீனாவின் மிக உயர்ந்த வறண்ட நிலப்பகுதியான, பூமியின் மிக உயர்ந்த பாலைவனமாகவும், நமது சொந்த கிரகத்தில் உள்ள செவ்வாய் கிரக மேற்பரப்பிற்கு சமமாகவும் கருதப்படும் - க்விங்காஸ் க்வைடம் பேசினில் ஒரு மார்ஸ் சிமுலேஷன் (செவ்வாய் உருவகப்படுத்தல் தளம்) அமைக்கப்பட உள்ளது" என்றும் வூ கூறினார்.

100 கணக்கான டென்ட்கள்:

100 கணக்கான டென்ட்கள்:

சீன அரசு நடத்தும் க்ளோபல் டைம்ஸின் படி, இந்த புதிய மார்ஸ் சிமுலேஷன் ஆனது சுமார் 53.330 சதுர மீட்டர் பரப்பளவிலும், சுமார் 22.3 மில்லியன் டாலர்கள் செலவிலும் அமைக்கப்பட்ட உள்ளது. அமைக்கப்படவுள்ள கேப்சூல்கள் ஆனது சுமார் 60 ஆட்களை உள்ளடக்கும் திறனையும், வெளியே நூற்றுக்கணக்கான டென்ட்களை உருவாக்கும் அளவையும் கொண்டு இருக்குமாம்.

கூறப்படும் சீனாவின் நிலப்பகுதி ஆனது பரப்பளவில் செவ்வாய் கிரகத்தோடு ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருந்தாலும், பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் விண்வெளி விஞ்ஞான பேராசிரியரான ஜியோ வெய்சின் படி, "அதன் சிறப்பு இயற்கை அம்சங்கள் மற்றும் விரோதமான சுற்றுச்சூழல் காரணமாக செவ்வாயை உருவகப்படுத்துவது மிகவும் கடினமானது, அதாவது அதன் குறைந்த காற்று அழுத்தம், வலுவான கதிர்வீச்சு மற்றும் அடிக்கடி ஏற்படும் மணல் புயல்கள் போன்ற புவியியலின் பரந்த வேறுபாடுகளை பற்றி பேசுகிறேன்" என்று கூறி உள்ளார்.

 விண்வெளி பந்தயம்:

விண்வெளி பந்தயம்:

சீனாவின் இந்த "திடீர் திடீர்" விண்வெளிப் பந்தயம் சற்று தாமதமான ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்.இன்னும் சொல்லப்போனால் சீனா 1970 ஆம் ஆண்டு வரை அதன் முதல் செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்குள் அனுப்பவில்லை, அந்த நேரத்தில் அமெரிக்கா (யுனைடெட் ஸ்டேட்ஸ்) ஏற்கனவே நிலவில் ஒரு விண்வெளி வீரரை தரையிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தீயா வேலை செய்கின்றது:

தீயா வேலை செய்கின்றது:

சீனா லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விண்வெளி பந்தயத்தில் சற்று வேகமாகவே முன்னேறுகிறது. குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டில் ஆறு குழுக்களை விண்வெளிக்கு அனுப்பியது மற்றும் இரண்டு விண்வெளி ஆய்வகங்களை பூமியின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தியது தொடங்கி தீயாக வேலை செய்து வருகிறது.

ரோவர் ஆன யூடு 2 ஐ:

ரோவர் ஆன யூடு 2 ஐ:

கடந்த 2013 ஆம் ஆண்டில் சீனா ரோவர் - யூடு 1 ஐ வெற்றிகரமாக நிலவில் தரை இறக்கியது. ,மற்றும் சமீபத்தில், அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் இது மற்றொரு ஆய்வு கலம் மற்றும் ஒரு ரோவர் ஆன யூடு 2 ஐ நிலவின் இருந்த பகுதில் (நிலவின் முதுகில்) தரை இறக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறிப்பிட்ட பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு சீனா தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் என்ன என்ன சாதனைகளையும், விண்வெளி மைல்கல்களையும் சீனா எட்ட போகிறதோ என்கிற பீதியில் உறைந்துள்ள உலகின் உயர்மட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
China plans to send a rover to explore Mars next year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X