சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!

|

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.. கடந்த சில மாதங்களாக.. கால் வைத்த இடமெல்லாம் வெற்றியை காண்கிறது - சீனா!

அப்படி எங்கே கால் வைத்தது? என்று கேட்டால்.. ஒற்றை வார்த்தையில் மிகவும் எளிமையாக "விண்வெளியில்!" என்று பதில் கூறி விடலாம்!

ஆனால் சீனாவின் மாஸ்டர் பிளான் பற்றி கேட்டால்?

ஆனால் சீனாவின் மாஸ்டர் பிளான் பற்றி கேட்டால்?

விண்வெளியில் சீனா அப்படி என்ன வெற்றிகளை கண்டது? சீனாவின் அந்த "மாஸ்டர் பிளான்" என்ன? என்றெல்லாம் கேட்டால்.. அதற்கு எளிமையாக பதில் கூறிவிட முடியாது!

ஏனென்றால்.. சீனாவுடையது வெறும் 'மாஸ்டர் பிளான்' மட்டும் அல்ல.. ஒரு பெர்மனென்ட் பிளானும் கூட.. அதாவது ஒரு நிரந்தரமான திட்டமும் கூட!

உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!

அதென்ன திட்டம்?

அதென்ன திட்டம்?

மேலோட்டமாக சொல்ல வேண்டும் என்றால் - சீனா, சந்திரனில் நிரந்தரமான தளங்களை (Permanent Lunar Bases) கட்டமைக்க உள்ளது!

விளக்கமாக பேச வேண்டும் என்றால் - சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (China National Space Administration - CNSA) சமீபத்திய நடவடிக்கையில் இருந்து நாம் தொடங்க வேண்டும்!

அதென்ன நடவடிக்கை?

அதென்ன நடவடிக்கை?

தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின்படி, சீன விண்வெளி ஆராய்ச்சி நிருவாகமானது அடுத்த ஒரு தசாப்தத்திற்குள் (அதாவது 10 ஆண்டுக்குள்) மேலும் மூன்று சந்திர பயணங்களை நிகழ்த்த சீன அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கிய சேங்கே மூன் மிஷனின் (Chang'e Moon Mission) 4 ஆம் கட்டத்தை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

ஆக.. நிலவை ஆராய்ச்சி செய்யப்போறோம்னு சொல்லிட்டு?

ஆக.. நிலவை ஆராய்ச்சி செய்யப்போறோம்னு சொல்லிட்டு?

அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள சீனாவின் இந்த நிலவு பயணங்கள் - சேங்கே 6, சேங்கே 7 மற்றும் சேங்கே 8 என்று அழைக்கப்படும்!

இந்த மூன்று சந்திர பயணங்களுமே, வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டிருக்கலாம், ஆனால் இந்த மூன்றுமே ஒரு முக்கியமான பொதுவான குறிக்கோளை கொண்டுள்ளது.

அதென்ன குறிக்கோள்?

அதென்ன குறிக்கோள்?

அது வேறு ஒன்றும் இல்லை - வெவ்வேறு விண்கலங்களை அனுப்பி, நிலவில் நிரந்தரமான சந்திர தளங்களை கட்டமைப்பதற்கான அடித்தளத்தை போட வேண்டும் என்பதே ஆகும்!

இந்த இடத்தில், சர்வதேச நிலவு ஆராய்ச்சி மையத்தை (International Lunar Research Center - ILRS) உருவாக்குவதில் ரஷ்யாவுடன் சீனா கூட்டு சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் கட்டுமானம் 2030-இல் தொடங்க உள்ளது!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

முதலில் மாதிரிகளை சேகரிக்கும்! பிறகு நிலவின் வளங்களை சுரண்டும்?

முதலில் மாதிரிகளை சேகரிக்கும்! பிறகு நிலவின் வளங்களை சுரண்டும்?

சினாவின் Chang'e-6 மூன் மிஷன் ஆனது, சந்திர கிரகத்தின் Far Side-இல் இருக்கும் மாதிரிகளை சேகரிக்கப் பயன்படுத்தப்படும்.

பின்னர் Chang'e-6 ஆனது, சந்திரனின் தென் துருவத்திற்கு அனுப்பப்படும். அது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், ரிலே சாட்டிலைட் மற்றும் பள்ளங்களில் உள்ள தண்ணீரை கண்டறிய ஒரு சிறிய டிடெக்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்!

கடைசியாக Chang'e-8 ஆனது, 3D பிரிண்டிங்கிற்கான தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் நிலவில் உள்ள வளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும்!

சும்மா சொல்லக்கூடாது.. சீனா கெத்து காட்டுது தான்!

சும்மா சொல்லக்கூடாது.. சீனா கெத்து காட்டுது தான்!

பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் மற்றொரு பக்கத்தில் (நிலவின் முதுகில்) தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றுள்ள சீனா, கடந்த சில மாதங்களாகவே, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான சில முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது.

சமீபத்தில் அதன் சாங்-5 மிஷன் (Chang'e-5 Mission) மூலம், சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த போது, முற்றிலும் புதிய சந்திர கனிமத்தை (Lunar Mineral) கண்டுபிடித்ததாக சீனா அறிவித்தது. இந்த சாதனையை செய்யும் மூன்றாவது நாடு - சீனா ஆகும்!

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

நாசாவையே வம்புக்கு இழுக்கும் அளவு வளர்ச்சி!

நாசாவையே வம்புக்கு இழுக்கும் அளவு வளர்ச்சி!

ஒருபக்கம் - சாதனைகளாக வந்து குவிந்தாலும் கூட, மறுகையில் சீனா, அவ்வப்போது அதன் "வேலைகளையும்" காட்டி வருகிறது!

சீனாவை போலவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், அதன் நிலவு பயணங்களை திட்டமிட்டுள்ளது. அதற்காக, நிலவில் தரை இறங்க சாத்தியமான சில இடங்களையும் பார்த்து வைத்துள்ளது.

அந்த இடங்களில் சிலவற்றை சீனாவும் தேர்வு செய்துள்ளது!

அந்த இடங்களில் சிலவற்றை சீனாவும் தேர்வு செய்துள்ளது!

ஆம்! நிலாவில் தரை இறங்க, சீனா மொத்தம் 10 இடங்களை தேர்வு செய்துள்ளது, அந்த பத்து இடங்களில் நாசா ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள 3 இடங்கள் இருக்கிறது.

சீனாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடி உள்ள நாசா, "எங்களை போலவே வெளிப்படையாக இருக்கவும்" என்றும் கூறி உள்ளது!

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

ஆக..  அமெரிக்காவும் நிலாவிற்கு செல்கிறதா?

ஆக.. அமெரிக்காவும் நிலாவிற்கு செல்கிறதா?

ஆம்! அது ஆர்ட்டெமிஸ் 1 (Artemis 1) ஆகும். ஆர்ட்டெமிஸ் 1 என்பது, விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் சந்திரனை சுற்றிவரும் ஒரு அமெரிக்க மூன் மிஷன் ஆகும்.

உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். நாசாவின் இந்த நிலவு பயணம் (வெவ்வேறு காரணங்களால்) மொத்தம் 2 முறை தடைப்பட்டு, தற்போது செப்டம்பர் 27 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதுவும் "சொதப்பினால்" ஆர்ட்டெமிஸ் 1 ஆனது அக்டோபர் 2 ஆம் தேதி அன்று விண்ணில் பாயும்!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
China Next Master Plan To Send 3 More Moon Missions and Build Permanent Bases in Lunar Soil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X