செவ்வாய் கிரகத்திற்கு கீழே.. 80மீ ஆழத்தில்.. திகிலை கிளப்பும் புது ஆதாரம்!

|

செவ்வாய் கிரகம் (Mars) தொடர்பான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும்.. சில நேரங்களில்.. நகம் கடிக்க வைக்கும் 'சஸ்பென்ஸ் திரில்லர்' திரைப்படங்களுக்கு இணையாக இருக்கும் என்று கூறினால் - அது மிகையாகாது!

அப்படியான ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

இது நாசா போட்ட ஓட்டையை விட பெரிய மேட்டர்!

இது நாசா போட்ட ஓட்டையை விட பெரிய மேட்டர்!

சமீபத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகமான நாசாவின் (NASA) பெர்சவரென்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரக பாறையில் ஓட்டை ஒன்றை போட்டது.

அந்த ஓட்டைக்குள் ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது! அது என்னவென்றால் பெர்சவரென்ஸ் ரோவர் துளையிட்ட செவ்வாய் கிரக பாறைக்குள் ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் (organic-rich material) கிடைத்தது.

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

அதனை தொடர்ந்து தற்போது 80மீ ஆழத்தில்?

அதனை தொடர்ந்து தற்போது 80மீ ஆழத்தில்?

செவ்வாய் கிரகத்தில் கிடைத்த ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் ஆனது அங்கே நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படும் நேரத்தில்...

செவ்வாய் கிரகத்தின் கீழே.. 80 மீட்டர் ஆழத்தில்.. திகிலை கிளப்பும் புது ஆதாரம் ஒன்று சிக்கி உள்ளது. ஆனால் அதை கண்டுபிடித்துள்ளது அமெரிக்காவின் நாசா அல்ல; சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் ஆகும்!

என்னது? சீனாவும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டதா?

என்னது? சீனாவும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டதா?

ஆம்! ஜுரோங் (Zhurong) என்று அழைக்கப்படும் சீனாவின் மார்ஸ் ரோவர் (Mars Rover) ஒன்று, செவ்வாய் கிரகத்தை மிகவும் சுறுசுறுப்பாக ஆய்வு செய்து வருகிறது.

வேறொரு கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் முதல் ரோவர் ஆன ஜுரோங், சீனாவின் மார்ஸ் மிஷன் ஆன தியான்வென்-1 மிஷனின் (Tianwen-1 mission) ஒரு பகுதியாகும்!

ஜுரோங்கிடம் சிக்கிய

ஜுரோங்கிடம் சிக்கிய "அந்த" ஆதாரம்!

சீனாவின் ஜுரோங் ரோவரிடம் மிகவும் முக்கியமான ஒரு திறமை இருக்கிறது. ஜுரோங்கின் ரேடார் இமேஜரால் (Radar imager) மேற்பரப்பில் இருந்து 100 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்ய முடியும்!

அப்படியாக, இந்த மார்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யும் போது.. செவ்வாய் கிரகத்தில் "பேரழிவுகளை ஏற்படுத்திய" இரண்டு பெரிய வெள்ளங்களின் (Catastrophic floods) ஆதாரங்களை கண்டறிந்துள்ளது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

ஆம்! நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்! செவ்வாய் கிரகத்தில் - வெள்ளம்!

ஆம்! நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்! செவ்வாய் கிரகத்தில் - வெள்ளம்!

அறியாதோர்களுக்கு, ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் -ஒரு காலத்தில் - தண்ணீர் இருந்துள்ளது.

ஆனால் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாயின் மையப்பகுதி குளிர்ந்து போக, அதன் விளைவாக செவ்வாய் கிரகம் அதன் காந்தப்புலத்தை "இழக்க".. அதன் விளைவாக செவ்வாய் கிரகம் சூரியக் காற்றுக்கு இரையாகத் தொடங்கியது.

அதன் பிறகு என்ன? செவ்வாய் - மெல்ல மெல்ல செத்து போனது!

அதன் பிறகு என்ன? செவ்வாய் - மெல்ல மெல்ல செத்து போனது!

நேரடியான சூரியக்காற்று, செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை நசுக்கியது. அங்கிருந்த நீர் வளம் "அடையாளங்களை மட்டும் விட்டுவிட்டு" காணாமல் போனது!

இப்படித்தான் - புவியியல் அடிப்படையில் - நீண்ட காலத்திற்கு முன்பே இந்த கிரகம் ஒரு பாலைவனமாக மாறியது. ஆனாலும் செவ்வாய்க்குள் புதைந்து கிடக்கும் அடையாளங்கள் மாறவே இல்லை!

செவ்வாய் கிரகத்தில் ஓடிய வெள்ளம் - கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

செவ்வாய் கிரகத்தில் ஓடிய வெள்ளம் - கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

சீனாவின் மார்ஸ் ரோவர் ஆன ஜுரோங்கின் ரேடார் ஆனது - அது ஆய்வு செய்யும் Utopia Planitia-வின் தெற்கு பகுதியில் - 80 மீட்டர் ஆழம் வரையிலாக திரவ நீர் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் அது சுவாரஸ்யமான வடிவங்களுடன் இரண்டு கிடைமட்ட அடுக்குகளை கண்டறிந்தது!

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு!

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு!

அந்த அடுக்குகள், செவ்வாய் கிரகத்தில் நிறைய நீர் (செயல்பாடு) இருந்தபோது, அதாவது ​​​​மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு வண்டல்களை எடுத்து சென்ற மிகவும் விரைவான வெள்ளத்தின் விளைவாக உருவாகி இருக்கலாம் என்று சீன புவியியல் ஆராய்ச்சியாளர் ஆன சென் லிங் கூறுகிறார்!

ஆகமொத்தம், ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது; பூமியில் தற்போது நிகழ்வதை போலவே!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
China Mars Rover Zhurong Found Evidence of Two Catastrophic Floods

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X