நிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்?

சீனாவின் பொருளாதார எதிரியான அமெரிக்கவிற்கு புதிய விண்வெளி போட்டி கிளம்பி உள்ளது என்கிற குரல்களையும் கேட்க முடிகிறது.

|

சீனாவிற்கு இந்த 2019 ஆம் ஆண்டு மிக அற்புதமாக ஆரம்பித்தது. சரியாக ஜனவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நிலவில் ஆய்வு விண்கலத்தை தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை அடைந்தது. சுவாரசியம் என்னவெனில், சீனா வழக்கமான நிலவில் பகுதியை எட்டாமல் அதன் முதுகில், அதாவது சந்திரனின் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படும் பகுதியில் தரை இறங்கி உள்ளது. இந்த பகுதியை நாசா உட்பட எந்தவொரு நாடும் தொட்டது இல்லை. இதுவே முதல் முறை என்பதும், இது ஒரு தொழில்நுட்ப சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்?

நிலவில் தரை இறங்கிய சேன்ஜ் 4 விண்கலம் ஆனது சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. சீனாவின் பொருளாதார எதிரியான அமெரிக்கவிற்கு புதிய விண்வெளி போட்டி கிளம்பி உள்ளது என்கிற குரல்களையும் கேட்க முடிகிறது. அமெரிக்காவிற்கு மட்டும் இன்றி, எதிர்காலத்தில் சீனா உலகளாவிய போட்டியை உண்டாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பனிப்போர் காலத்தில் இருந்து ரஷ்யாவுடன் முட்டிமோதி கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவினால் அழுத்தம் கொடுக்க முடியுமா? - முடியும்.

இதுவரை விண்வெளியில் சீனா நிகழ்த்தி உள்ள சாதனைகள் என்னென்ன?

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போலவே, மக்கள் சீன குடியரசானது 1950 களில் பல்லிஸ்டிக் ஏவுகணைகளை (கண்டம் விட்டு கண்டம் தாண்டும்) உருவாக்கும் போது விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சோவியத் யூனியனின் சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், சீனா தனது விண்வெளித் திட்டத்தை பெரும்பாலும் அதன் சொந்த திட்டத்தில் தான் அபிவிருத்தி செய்தது.

வணிகரீதியான செயற்கைக்கோள்

வணிகரீதியான செயற்கைக்கோள்

1970 ஆம் ஆண்டில் சீனா அதன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக, மனிதர்களை விண்வெளிக்குள் அனுப்பும் திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வணிகரீதியான செயற்கைக்கோள் பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியது.

 ரிமோட் சென்சிங்

ரிமோட் சென்சிங்

அதை உலகிற்கு வெளிப்படுத்தும் படி, 1978 ஆம் ஆண்டில், டெங் ஜியாவோபிங் சீனாவின் விண்வெளிக் கொள்கையை வெளிப்படுத்தினார், ஒரு வளரும் நாடாக, சீனா நிகழ்ந்து கொண்டிருக்கும் விண்வெளி போட்டியில் பங்கேற்காது என்று குறிப்பிடுகிறார். அதற்கு பதிலாக சீனா, விண்வெளி வெளியீட்டு வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் - தகவல்தொடர்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் வானியற்பியல் - கவனம் செலுத்தும் என்றார்.

ஷென்ஷா

ஷென்ஷா

அதற்காக சீனா ஒன்றுமே செய்யவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். 1992 ஆம் ஆண்டில், சீன அதன் விண்வெளி நிலையத்தை செலுத்தியது. அது 21 ஆம் நூற்றாண்டின் சீன கௌரவத்தின் பிரதான அடையாளமாகவும் மூல ஆதாரமாகவும் திகழ்ந்தது. அது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வழிவகுத்தது, அதாவது ஷென்ஷா விண்கலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

சீனர்

சீனர்

2003 ஆம் ஆண்டில், விண்வெளிக்கு சென்ற முதல் சீனர் என்கிற பெருமையை விண்வெளி வீரரான யங் லிவ்வி பெற்றார். மொத்தம் ஆறு ஷென்சோ மிஷன்களின் கீழ், 12 விண்வெளி வீரர்கள் பூமியின் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டனர், அதில் இரண்டு மிஷன்கள், சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாகாங்-1 க்கு சென்றது.


அது தொடங்கி இன்று வரையிலான சீனா, சந்திரனில் தளம் அமைப்பது மற்றும் செவ்வாயிலிருந்து சாத்தியமான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவது போன்ற விண்வெளி பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

சோதனை வெற்றி

சோதனை வெற்றி

சீனாவின் விண்வெளித் திட்டங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் - குறிப்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய திட்டங்களுடன் ஒப்பிடும்போது - ​​அதன் மெதுவான மற்றும் நிலையான வேகம் ஆகும். சீன விண்வெளித் திட்டத்தின் அம்சங்களைச் சுற்றியுள்ள இரகசிய தன்மையின் காரணமாக அதன் சரியான திறமைகள் பற்றி தெரியவில்லை. எனினும், சீனாவின் திட்டங்கள் ஆனது விண்வெளி போட்டியை கிளப்பும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகவே உள்ளது.


குறிப்பாக இராணுவ பயன்பாடுகளின் அடிப்படையில், சீனா கணிசமான திறன்களை நிரூபித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில், ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு சோதனையை மேற்கொண்டது, அந்த சோதனையில் தோல்வியுற்ற ஒரு சீன வானிலை செயற்கைகோள் (இலக்கு) இரையானது. சோதனை வெற்றி கண்டது, மறுபக்கம் செயற்கை கோளில் இருந்து சிதறிய பாகங்கள் ஆனது, பிற செயற்கைகோள்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் குப்பைகள் உருவாக்கியது.

 அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவலைகள்

அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவலைகள்

சீன இராணுவத்தின் 2018 ஆம் அறிக்கையில், சீனாவின் இராணுவத் திட்டம் "விரைவாக முதிர்ச்சியடைந்து வருகிறது" என்று பாதுகாப்புத் துறை அறிக்கை செய்தது. ஏற்கனவே மற்ற நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக சீனாவுடன் கணிசமான ஒத்துழைப்பில் ஈடுபடவில்லை என்பதால் சீனாவின் இந்த வேகமான வளர்ச்சி அமெரிக்காவை மேன்மேலும் அச்சப்படும் ஒரு சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.

இப்படியான அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சீனாவும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஸ்பேஸ் பாலிசி ஆராய்ச்சியார்கள் நம்புகின்றனர். எது நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
China Makes History Becoming First Country to Land on the Far Side of the Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X