கில்லாடி சீனா : உயர்தர புகைப்படம், வானிலையுடன் சேர்த்து கடலோர பாதுகாப்பு..!
சீனா ஒரு புதிய உயர் தீர்மான செயற்கை இடைக்கண் ராடார் ( high-resolution Synthetic Aperture Radar - SAR) படமாக்கல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளின் விவரமான காட்சிகளை துல்லியமான முறையில் புகைப்படமாக்க முடியும்.
இந்த செயற்கைக்கோள் ஆனது வடக்கு ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள தையுன் எஸ்.எல்.வி மையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. கோப்ஹென் -3 எனப்படும் இந்த செயற்கைக்கோள் 6:55 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒரு லாங் மார்ச் 4சி ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு சேவை :
சீனாவின் முதல் எஸ்.ஏ.ஆர் இமேஜிங் செயற்கைக்கோளான இது அனைத்து வானிலை சார்ந்த விடயங்களிலும் 24 மணி நேர கண்காணிப்பு சேவையில் இருக்கும்.

கடலோர உரிமைகள் பாதுகாப்பு :
உடன் பேரழிவு எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, நீர் வள மதிப்பீடுகள், மற்றும் கடலோர உரிமைகள் பாதுகாப்பு போன்றவைகளையும் நிகழ்த்த இருக்கிறது.

உயர் வரையறை கவனிப்பு :
12 இமேஜிங் மோட்களுடன் செலுத்தப்பட்டுள்ள இந்த உயர் வரையறை கவனிப்பு செயற்கைக்கோள் ஆனது பூமியின் பரந்த படங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் விவரமான காட்சிகளை படமாக்கும் திறன் கொண்டது.

ரிமோட் சென்சிங் :
கோப்ஹென் -3, எட்டு ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட சீனாவின் முதல் குறைந்த சுற்றுப்பாதையில் பயணிக்கும் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
'பென்னு' : பூமியோடு மோதல் நிகழ்த்த 0.037% வாய்ப்பு உள்ளது..!
ஒரு கிலோ மனித சாம்பலை நிலவிற்கு அனுப்ப எவ்வளவு தெரியுமா..?
வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications