போதைக்கு அடிமையானவர்களை மீட்க புதிய தொழில்நுட்பம்!

இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே பார்கின்சன் நோய் போன்ற கோளாறுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

|

பழமொழிகளில் கூறுவது போல எப்போதும் அறிவியல் புனைகதைகளை காட்டிலும் உண்மை அந்நியம் தான். அதுபோல புனைகதை. சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்காக, மருத்துவ பரிசோதனை மூலம் உலகின் முதல் ஆழ்ந்த மூளை தூண்டுதலை (DBS-Deep brain stimulation ) மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.இதிலுள்ள துளையிடும் நடைமுறையில் நோயாளியின் மண்டை ஓட்டில் இரண்டு துளைகளை இட்டு, அவர்களது மூளையில் இரு எலெக்ட்ரோட்கள் வைக்கப்படுகிறது. இதை ஒரு கையடக்க சாதனத்தால் மின்னணு முறையில் தூண்டமுடியும்.

போதைக்கு அடிமையானவர்களை மீட்க புதிய தொழில்நுட்பம்!

இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே பார்கின்சன் நோய் போன்ற கோளாறுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வரலாற்றில் முதன்முறையாக இந்த மூளை தூண்டுதல் செயல்முறை மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்டும் நம்பிக்கையுடன் பயன்படுத்தியுள்ளனர்.

முதல் பரிசோதனை

முதல் பரிசோதனை

முதல் பரிசோதனையானது மேதம்பெடமைன் என்ற போதை பொருளுக்கு அடிமையாவதில் கவனம்செலுத்தி ஷாங்காயில் உள்ள ருஜின் மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. அமெரிக்க தேசிய நிறுவனங்களின் மருத்துல தகவல் தரவுத்தளத்தின் படி, போதை மருந்து அடிமைக்காக, எட்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மூளை தூண்டல் பரிசோதனைகள் நடைபெற்று உள்ளன.

சீனாவில் நடைபெற்றுள்ளது

சீனாவில் நடைபெற்றுள்ளது

அந்த எட்டு சோதனைகளில் ஆறு சீனாவில் நடைபெற்றுள்ளது மற்றும் அந்நாட்டில் போதை மருந்துகள் தொடர்பான மூளை அறுவை சிகிச்சைகள் மிகவும் கடுமையான கடந்த காலத்தை கொண்டிருந்தாலும், அது மூளை தூண்டல் ஆராய்ச்சியில் உலகின் முக்கிய மையமாக மாறிவிட்டது.

தோல்வியுற்ற மறுவாழ்வு சிகிச்சை

தோல்வியுற்ற மறுவாழ்வு சிகிச்சை

இந்த அறுவை சிகிச்சையின் முதல் நோயாளியான யான் மேதம்பெடமைன் என அழைக்கப்படும் போதைபொருளுக்கு அடிமை. 2011 அவரது மகன் பிறந்ததிலிருந்து இதற்கு அடிமையாக இருந்த யான், சூதாட்டத்தின் மூலம் 150,000 டாலர்களை இழந்துள்ளார்.

ஒரு தொடர்ச்சியாக விவாகரத்து, அரிதாக மகனின் வருகை, மற்றும் தோல்வியுற்ற மறுவாழ்வு சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக, மூளை தூண்டல் பரிசோதனையில் பங்குகொள்ள ஒப்புக்கொண்டார்.


"என் மனவலிமை பலவீனமாக உள்ளது" என்கிறார் போதைக்கு அடிமையாகி கடும் போராட்டத்தை சந்தித்த யான்.

பேட்டரி

பேட்டரி

அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவது போல, மண்டல ஓட்டில் துளைகள் இட்டு இரு சிறிய எலக்ட்ரோடுகள் அடிமையாக்கும் பின் மூளை பகுதியில் படும்படி பொருத்தப்பட்டுள்ளது. சிலமணி நேரம் கழித்து நடைபெற்ற மற்றொரு அறுவைசிகிச்சையில் அவரது மார்பு பகுதியில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டது.

எலக்ட்ரோடுகள்

எலக்ட்ரோடுகள்

பேட்டரியின் மூலம் எலக்ட்ரோடுகள் செயல்படத்துவங்கியதும், டேப்லெட் கருவி மூலம் அவரது மூளையை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
China Is Using Brain Implants To Treat Addiction In A World-First : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X