Home
Scitech

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க சைலன்ட் ஆக வேலை பார்க்கும் சீனா! பின்னணி என்ன?

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் வெளியான சமீபத்திய அறிக்கை ஒன்று அந்த வதந்தியை ஒரு காட்டுதீயைப் போல பரப்பி உள்ளது.

இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த பல ஆண்டுகளாக சிபிபி எனப்படும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆனது ரோபோ கைகள் கொண்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை உருவாக்கி வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. அவை செயற்கைக்கோளை தாக்கி அளிக்கும் எதிர்ப்பு ஆயுதங்களாக (ஆன்டி சாட்டிலைட் வெப்பன்ஸ்) பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த வதந்திகள் அறிவித்தன.

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க சைலன்ட் ஆக வேலை பார்க்கும் சீனா!

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் வெளியான சமீபத்திய அறிக்கை ஒன்று அந்த வதந்தியை ஒரு காட்டுதீயைப் போல பரப்பி உள்ளது. வெளியான குறிப்பிட்ட சீன அறிக்கை ஆனது வதந்திக்கப்படும் ரோபோ கைகள் கொண்ட செயற்கை கோள் ஆனது ஆயுதங்கள் அல்ல, அவைகள் ஆராய்ச்சி கருவிகள் என்று பட்டியலிட்டு உள்ளது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்

வெளியான சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டின் படி, "கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், சிசிபி ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அந்த ஆயுதங்கள் ஆனது இராணுவம் மற்றும் விஞ்ஞானம் போன்ற இரண்டு வகை நோக்கங்களுக்காகவும் பயன்படுகிறது. மேலும் அந்த ஆயுதங்கள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட திறன்களையும் கொண்டுள்ளது.

செயற்கைகோள்கள்

செயற்கைகோள்கள்

அதன் சில செயற்கைகோள்கள் ஆனது அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். அதன் எடை ஆனது 22 பவுண்டுகளை விட இலகுவாகவே இருக்கும். இருப்பினும் கூட, மூன்று கண் மாதிரியான ஒரு உணர்திறன் மூலமாக அந்த செயற்கைகோள்களால் அதன் இலக்குகளின் வடிவங்களை துல்லியமாக கணக்கிட முடியும், அவ்வழியே தந்த வேகத்தையும் சுழற்சியையும் சரி செய்யவும் முடியும்.

விண்வெளி குப்பையுடன் இணைக்கப்படலாம்

விண்வெளி குப்பையுடன் இணைக்கப்படலாம்

மேற்குறிப்பிட்டுள்ள திறன்களை கொண்டு இவ்வகை செயற்கைகோள்கள் ஆனது அதன் இலக்கை நெருங்கி, சுமார் ஆறு அங்குல தூரம் என்கிற இடைவெளியை உண்டாக்கி, பின்னர் குறிப்பிட்ட விண்வெளி பொருளை தனது ஒற்றை ரோபட்டிக் கையால் கைப்பற்றுமாம். பிறகு செயற்கைகோள் அதன் உந்துதலை தொடங்கி வளிமண்டலத்திலேயே அதை எரிக்கும். இதுவே இராணுவச் சூழல்களின் கீழ், தரையில் இருந்து தடுக்கப்படுவதைத் தவிர்க்க அவைகள் விண்வெளி குப்பையுடன் இணைக்கப்படலாம்." இதுதான் வெளியான சமீபத்திய அறிக்கை.

 திகிலான விடயம்

திகிலான விடயம்

இதுதான் எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றி உள்ளது. அதாவது, ஆன்டி சாட்டிலைட் ஆயுதங்களை ஸ்கேவஞ்சர் சாட்டிலைட் என்று முன்னிலைப்படுத்தி உள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. திகிலான விடயம் என்னவென்றால் சிசிபி கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 10 செயற்கைகோள்களாவது விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்பதையும் வெளியான அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த இடத்தில தான் இத்தகைய சர்ச்சைக்குரிய ஆயுதங்கள் இருப்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற வாதம் மேலோங்கி உள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கீழ் அமெரிக்காவின் விண்வெளிப் போர் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் வேளையில் தான், ஒரு புதிய இராணுவப் பிரிவை, ஒரு புதிய இராணுவக் கிளையாக அறிமுகப்படுத்தி மேற்குறிப்பிட்ட ஆன்டி சாட்டிலைட் ஆயுதங்களின் இருப்பையும், அது சார்ந்த தகவல்களையும் சீனாவின் சிசிபி வெளியிடும் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் வெளியான அறிக்கையோ, மற்ற நாடுகளை போலவே சீனாவின் விண்வெளி ஆயுதங்களானது சமாதான நோக்கங்களைக் கொண்டிருப்பது போல் காட்சிப்படுத்துகிறது.

ஆன்டி சாட்டிலைட்

ஆன்டி சாட்டிலைட்

ஷாங்க்ஸி மாகாணத்தின் சியான் நகரில் உள்ள வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகத்தில் விண்வெளி விமான இயக்கவியல் தேசிய தொழில்நுட்ப ஆய்வகத்தின் துணை இயக்குனரான லு ஜியான்ஜூன்னின் படி, ஆன்டி சாட்டிலைட் வெப்பன்ஸின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.​ "இவ்வகை ஆயுதங்களின் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ஆனது இராணுவத்தின் சாத்தியமான பயன்பாடுகளால் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அதானல் நாங்கள் பொதுவெளியில் இதைப்பற்றி பகிரங்கமாகப் பேச விரும்பவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

நாசாவுடன் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது

நாசாவுடன் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது

சிசிபி ஆனது (குறைந்தது) கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி அதன் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை பரிசோதித்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் 2007 ஆம் ஆண்டில் சீனா எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லாமல், அதன் ஃபெங் யுன் ஐ-சி வானிலை செயற்கைக்கோளை ஒரு ஏவுகணை மூலம் அழித்தது என்பதும், சீனாவின் அந்த நடவடிக்கை ஆனது பூமியின் குறைந்த அளவு சுற்றுப்பாதைக்குள் 3,000 க்கும் அதிகமான விண்வெளி குப்பைகளை அனுப்பியது. பின்னர் சிசிபி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பாதையில் உலவும் செயற்கைக்கோள்

சுற்றுப்பாதையில் உலவும் செயற்கைக்கோள்

அந்த தவறின் திருத்தமாகவே சமீபத்திய ஸ்கேவென்ஜர் சாட்டிலைட்கள் பார்க்கப்படுகிறது. சுற்றுப்பாதையில் உலவும் செயற்கைக் கோள்களை அழிக்காமல், மற்ற நாடுகளிப்பி சொத்துக்களை சேதப்படுத்தும் குப்பைகளை உருவாக்காமல், குறிப்பிட்ட இலக்குகளை அழிக்கக்கூடிய ரோபோ கை போன்ற ஆயுத அமைப்புகளை உருவாக்கி உள்ளது. சீனாவின் இதுபோன்ற விண்வெளி ஆயுதங்கள் ஆனது முழுக்க முழுக்க அமெரிக்காவிற்கு எதிரான அதன் இராணுவ மூலோபாயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் முதுகெலும்பாக உள்ள ஜி.பி.எஸ், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை இவைகள் அழிக்கும் என்று சீனாவால் நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
China Is Branding Anti-Satellite Weapons as ‘Scavenger Satellites’: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X