சூரியனையும் விட்டு வைக்காத சீனா: செயற்கை சூரியனை நிறுவுகிறது.!
இந்த இயந்திரம் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றும் 2050ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1999ஆம் அண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, இந்த இயந்திரத்தில் செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்க முடியும்.
இதற்கான மீக்கடத்தி பொருட்களை அமெரிக்கா தருவதாக கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்கு பின் தரம் வாய்ந்த மீக்கடத்தி பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரம் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றும் 2050ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ சீனாவுக்கு விற்று விட்டாரா என்று உங்களுக்கும் தோன்றாம். ஆனால் உண்மை இதன் தந்தை செல்லூர் ராஜூ இல்லை சீனாவா என்றும் பலரும் கிண்டலாக பேசி வருகின்றனர்.

தெர்மா கோல் திட்டம்:
வைகைஅணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் தொர்மாகோலை மிதக்க விட்டார். இந்த திட்டம் பெயிலியர் ஆனதால் அனைத்து ஊடகங்களிலும் கலாய்கப்பட்டார். மீம்ஸ்களிலும் இதுபோன்று நிறைய திட்டங்களை வைத்துள்ளதாகவும், விஞ்ஞான அமைச்சர் என்றும், நாசா விஞ்ஞானி என்றும் அழைக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் முதலில் அவருக்கு சோகமாக இருந்தாலும், செய்தியாளர்களின் கேள்விக்கும் என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே என்று சிரித்து விட்டு செல்கின்றார்.

செயற்கை நிலவு திட்டம்:
பூமியின் நிலவை போன்ற வடிவத்தில் செயற்கைகோள்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. முதலில் செங்க்டு என்ற நகரத்தில் தெருவிளக்குகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு செயற்கை நிலாவை இரவு நேரங்களில் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

2022ல் மூன்று செயற்கை நிலவுகள்:
சீனாவின் செங்க்டு நகரத்திற்கு எவ்வாறு செயற்கை நிலவு பயன்படுகிறது என்பதை பொருத்து, 2022ம் ஆண்டு மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 50 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட செங்க்டு நகரத்திற்கு செயற்கை நிலவு பயன்படுவதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 300 கோடிக்கு மேல் மிச்சமாகும் என தெரிகிறது.

ஒளி மாசு அதிகரிக்கும்:
அதேநேரத்தில் திட்டமிட்டப்படி செயற்கை நிலா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பட தொடங்கினால் ஒளி மாசு 40 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டத்தை உங்களுக்கு கற்றுக் கொடுத்தது அமைச்சர் செல்லூர் ராஜூவா, அவரின் திட்டத்தையும் நீங்கள் காப்பி அடித்து விட்டீர்களா என்றும் நம்ம ஊர் மீட்டியாக்களிலும் கிண்டல் அடிக்கப்பட்டது.

செயற்கை சூரியன் திட்டம்:
இந்நிலையில், சீனா இந்நிலையில் 180 டிகிரி செல்சியல் வெப்பநிலையை தாங்க கூடிய செயற்கை சூரியனை உருவாக்கி வருகின்றது. நமக்கு அருகே உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் 6 மடங்கு வெப்ப நிலை உடையதாக இருக்கும்.

பசுமை ஆற்றலாக மாற்ற:
ஹைட்ரஜன் வாயுவை குறைத்து பசுமை ஆற்றலாக மாற்ற இந்த திட்டம் தொடங்கப்படுகின்றது. சூரியனை போல இது செயற்கை சூரியனாக உருவாக்கப்படுகின்றது. இதை சீனா ஸ்டேட் ஆப் த ஆர்ட் ரியேக்டர் வடிவமைக்கின்றது.

அணுக்கரு இணைவு:
கடந்த வாரம் விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு சோதனையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 180 மல்லியன் எப் ( 100 மில்லியன் செல்சியஸ்) நெருங்கியுள்ளது. சீனா விஞ்ஞானிகளின் இந்த செயல்பாடு உலகத்தில் முதல் அணுசக்தி அணு உலைகளை உருவாக்க போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக வெப்பமயமாதலை தடுக்க:
தற்போது உலகம் முழுவதும் இருந்து வெப்பமயமாதல் ஏற்படுவதாலும், பூமியை காக்கவும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கின்றது. இந்த சீனாவின் திட்டத்திற்கு நாம் சபாஷ் என்று தான் செல்ல வேண்டும்.

வெற்றி பெற்றுள்ளது:
கடந்த செவ்வாய் அன்று சீனாவின் ஹெப்சி இன்ஸ்டிட்யூட்ஸ் ஆப் பிசிக்கல் சயின்சில் விஞ்ஞானிகள் தங்கள் அணுக்கரு இணைவு இயந்திரம் 180 மல்லியன் எப் ( 100 மில்லியன் சி) வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இது 27 மில்லியன் எப் சூரியனின் மையத்தை விட ஆறு மடங்கு அதிகமாக சூடாக இருக்கின்றது.

அணு உலை 180 மில்லியன் எப்:
இந்த அணு உலை 180 மில்லியன் எப் (பேரான் ஹீட்) இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டீட்டீரியம் மற்றும் ட்ரிடியம் துகள்கள் ஆகியவை ஆற்றல் நிறைந்த வெடிப்புடன் இணைத்து சேர்கின்றன.

ஒன்றை ஒன்று தடுத்துக்கொள்கின்றன:
மேலே சொல்லப்பட்ட துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தடுத்துக் கொள்கின்றன. மேலும் அதிகமான வெப்பநிலைகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும். முழுஉலைக் கட்டமைப்பிற்கு முன்னதாக இணைப்பதற்கான செயல்படுறை நன்கு புரிந்து கொள்வதே அணிவரியை சோதனைகளின் மேம்பட்ட சூப்பர் நோக்கிங் டோகாமக் (ஈஸ்ட்) குறிக்கோளாக இருக்கின்றது.
வித்தியாசமாக வேலை செய்யும் அணு உலைகள்: அணுக்கரு இணைவு அணு உலைகள் அணுக்கரு பிளவு அணு உலைகளுக்கு வித்தியமான வேலை செய்கின்றன. ஏனெனில் அவை இரண்டும் அணுக்கருக்களைப் பிளவுப்படுத்துவதற்ககு பதிலாக பயன்படுத்தப்படுகின்றது.

அணுசக்தி கழிவுகளை விட பாதுகாப்பானது:
இந்த செயல்படுறை மலிவான எரிசக்தி பரந்த வளத்தை உறுதிப்படுத்துக்கிறது. மேலும், அபாயகரமான அணுசக்தி கழிவுகளை உற்பத்தி செய்வதை விட பாதுகாப்பானது.

2030ம் ஆண்டில் செயல்பாடு:
ஆக்ஸ்போர்ட்ஷையரில் அமைந்துள்ள ஒரு அணுக்கரு இணைவு நிறுவனம் Tokakak எரிசக்தி, அது 2030 ஆம் ஆண்டில் மின் உற்பத்திக்கு ஒரு இணைவு உலை கட்டும் என்று கூறுகிறது.

பிளானை விற்றாரா செல்லூர் ராஜூ:
உலக வெப்பமாயதலை தடுக்கும் ஏராளமான பிளான்களை தன் வசம் வைத்துள்ளார் செல்லூர் ராஜூ இந்நிலையில், சீனாவிடம் செயற்கை நிலவு மற்றும் சூரியன் ஆகிய திட்டங்களுக்குகாக தனது திட்டத்தை அவர் விற்றுவிட்டாரா என்று தோன்றுகின்றது.


Click it and Unblock the Notifications