பூமியின் பேரழிவில் தப்பித்த உயிரினங்கள்.! ஆனா டைனோசர் மட்டும் அழிய காரணம் என்ன?
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி பூமி (Earth) மேல் மிகப்பெரிய சிறுகோள் (Asteroid) ஒன்று தாக்கியதால், ரெக்கை இல்லாத டைனாசர் இனம் ஒட்டுமொத்தமாக அழிஞ்சிருச்சுணு நாம கதைகள்ல, பாட புத்தகங்கள்ல அல்லது மற்றவங்க சொல்லிக் கேட்டிருப்போம். இந்த சிறுகோள் தாக்குதலால் பூமியில் வாழ்ந்த 90% டைனோசர் இனங்கள் (dinosaurs) அழிந்துவிட்டது என்பது தான் உம்மை.
ஆனால், இத்துடன் சேர்ந்து பூமியில் வாழ்ந்த பண்டைய பாலூட்டி இனங்கள் (Mammals) மற்றும் ஊர்வன இனங்கள் (Reptiles) மட்டும் இந்த சிறுகோள் தாக்குதலில் இருந்து தப்பித்து; பூமியில் பல சிரமங்களை தாண்டி, இன்றும் இதன் இனங்கள் உயிர் வாழ்ந்து வருகிறது என்ற விபரத்தை விஞ்ஞாகிங்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.
சிக்சுலுப் (Chicxulub) அப்படின்ற சின்ன கோள் பூமிய தாக்கிய போது டைரனோசொரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) மற்றும் ட்ரைசெராடாப்ஸ் (Triceratops) மாதிரியான பறவை அம்சம் இல்லாத டைனாசர்கள் முற்றிலுமா அழிவை சந்திச்சிது. ஆனா, இதே அழிவுல இருந்து பாலூட்டிகளும், ஆமை, முதலை மாதிரியான ஊர்வன விலங்குகளும் எப்படி தப்பிச்சிது என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

இப்போ உங்களுக்கும் இந்த சந்தேகம் வருது தானே.! இதற்கான காரணத்தை ஆராய்ந்த ஒரு குழு அதன் ஆய்வறிக்கைய சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) அப்படின்ற பத்திரிக்கையில சமீபத்துல வெளியிட்டிருக்கு. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Edinburgh) இருந்து பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கொண்ட சர்வதேச குழு ஒன்று வட அமெரிக்க பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 1600 ஃபாசில் ரெக்கார்டுகளை (fossil records) ஆராய்ச்சி செய்தது.
அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூமியை சிக்சுலுப் சிறுகோள் தாக்கியதற்கு பின்னர் உருவான உலகத்தின் கிரெட்டேசியஸ் (Cretaceous) மற்றும் பேலியோஜீன் (Paleogene) காலங்களின் உணவு சங்கிலி, நிலப்பரப்பு மற்றும் நீர் விலங்குகளின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடங்களில் மாதிரிகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்தது. டைனோசர் வாழ்ந்த காலங்களில் அதனுடன் சேர்ந்து பல பாலூட்டிகளும் வாழ்ந்து வந்துள்ளன.
கிரெட்டேசியஸ் காலத்திற்கு பின்னர் பாலூட்டிகள் மாற்றமடைந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கு ஏற்றுக்கொண்டு அதற்கு தேவையான மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டன. இதன் காரணமாகவே அழிவிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்தது. அதே சமயம் டைனோசர் தங்களது பழைய வாழ்க்கை முறையிலே பழக்கப்பட்டு விட்டதால் புதிய காலத்தின் சுற்றுச்சூழல் மாற்றங்களை தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன.

டைனோசர்களின் அழிவை பயன்படுத்திய பாலூட்டிகள் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்று புதிய சூழ்நிலைகளில் வசிக்க ஆரம்பித்தன. அந்த இடங்களுக்கு ஏற்றவாறு தங்களது உணவு பழக்கங்களையும் நடத்தைகளையும் வேகமாக மாற்றிக் கொண்டன. இதன் விளைவாகவும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு விரைவாக பரினாம வளர்ச்சி செய்து கொண்டதாலும் தான் அந்த பேரழிவில் இருந்து பாலூட்டிகளும் மற்ற உயிரினங்களும் தப்பித்துள்ளன.
சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் முதல் ஆசிரியரான எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் கார்சியா-ஜிரோன் (Jorge García-Gíron) என்பவர் கூறி இருந்த குறிப்பில், டைனோசர்களின் ஆதிக்கம் இருந்த கிரெட்டேசியஸ் காலத்தின் சூழ்நிலை உணவுப் பழக்கம் ஆகியவையும், சிக்சுலுப் தாக்குதலுக்குப் பின்னர் உருவான பாலூட்டிகளின் ஆதிக்கம் இருந்த காலத்தின் சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம் ஆகியவையும் விரிவாகப் பகுக்கப்பட்டு இந்த ஆய்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம் பல காலமாகப் பதில் கிடைக்காமல் இருந்த அந்தக் கேள்விக்கு ஒரு தெளிவான காரணம் கிடைத்துள்ளதுணு குறிப்பிட்டிருக்கார். அந்த ஆய்வறிக்கையின் மற்றொரு இணை ஆசிரியரான ஆல்ஃபியோ எலசென்றோ கியாரின்சா (Alfio Alessandro Chiarenza) என்பவர் கூறுகையில், டைனோசர்கள் நிலையான சூழலிலேயே வாழ்ந்து பழகியதால் திடீரென நடந்த சிக்சுலுப் கோளின் தாக்குதல் மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன.
ஆனால் பறவைகள், பாலூட்டிகள், முதலை, ஆமை போன்ற மற்ற விலங்குகள் நிலையற்ற, வேகமாக மாறும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள ஏற்கனவே பழக்கப்பட்டதால் அவற்றால் இதைத் தாக்குப் பிடிக்க முடிந்துள்ளது என்று கூறியுள்ளார். எனவே எந்த ஒரு அழிவிலிருந்தும் தற்போது இருக்கும் உயிரினங்கள் அழியாது தப்பித்துவிடும் என்றும், பரினாம மாற்றங்கள் அடையும் என்பதையும் இந்த ஆராய்ச்சி மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications