சென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டைய கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..

|

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான தளம் அமைப்பது, ஓட்டுனர் இல்லா கார் உருவாக்குவது, ரீயூசபிள் ராக்கெட் பயன்படுத்துவது போன்ற பல நம்பமுடியாத ஆராய்ச்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதிவேக பயணத்திற்காக 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை 2013 ஆம் ஆண்டு இவர் அறிமுகமும் செய்தார்.

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பம்

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பம்

ஹைப்பர் லுாப் தொழில்நுட்பத்தின் படி, மேம்பாலம் அமைத்து அதற்கு மேல் காற்றில்லா பெரிய குழாய் உருவாக்கி, அந்த காற்றில்லா குழாய்க்குள் இருக்கைகளுடன் கூடிய 'டியூப்' வடிவ உருளை பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளை வைத்து, காந்த விசையால் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் அந்தரத்தில் மிதந்தபடி பயணிக்கும் ஹைப்பர் லூப் ரயிலை இவர் உருவாக்கியுள்ளார். அதிவேக நில வழி பயணமாக இந்த ஹைப்பர் லூப் செயல்படுகிறது.

இந்தியாவின் ஹைப்பர் லுாப்

இந்தியாவின் ஹைப்பர் லுாப்

பல நாடுகளில் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுப்டம் பற்றிப் பல ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கூட, மும்பை - புனே 'ஹைப்பர் லூப்' திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இத்திட்டத்திற்கான புரோட்டோடைப் ஹைப்பர் லுாப் கூட தயாரிக்கப்பட்டது.

பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.!

விர்ஜின் ஹைப்பர் லுாப் ஒன்

விர்ஜின் ஹைப்பர் லுாப் ஒன்

மும்பை - புனே சுமார் 200 கி.மீ. தூரமாகும், இதை பயணிக்க 4 மணி நேரம் ஆகிறது. ஆனால், ஹைப்பர் லுாப் வந்தால் வெறும் 20 நிமிடத்தில் இந்த பயணம் சாத்தியமாகும்.

இத்திட்டத்திற்கான மாதிரி ஹைப்பர் லுாப் அமெரிக்காவில் சோதனை கட்டத்தில் உள்ளது. மகாராஷ்டிரா அரசு, 'விர்ஜின் ஹைப்பர் லுாப் ஒன்' நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் இடையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மதுரை to சென்னை

மதுரை to சென்னை

நமது தமிழ்நாட்டிற்கு இந்த 'ஹைப்பர் லூப்' தொழில்நுட்பம் வந்தால் மதுரை to சென்னை வெறும் 45 நிமிடங்கள் மட்டும் தான் என்று உறுதியாகக் கூறலாம். வருங்காலத்தில் இதை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று இரவு தாக்கப்படுவோம்; பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம்; ஏன்.? எதனால்.?இன்று இரவு தாக்கப்படுவோம்; பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம்; ஏன்.? எதனால்.?

NETT அனுமதி கட்டாயம்

NETT அனுமதி கட்டாயம்

வர்த்தக ரீதியாக ஹைப்பர் லுாப் கொண்டு வர, அமெரிக்காவின் 'நான் டிரடிஷனல் அண்ட் எமர்ஜிங் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கவுன்சில்' (Non-Traditional and Emerging Transportation Technology - NETT) அனுமதி வழங்க வேண்டும்.

விரைவில் எதிர்பார்க்கலாம்

விரைவில் எதிர்பார்க்கலாம்

1940 முதல் இது குறித்து ஆய்வு நடக்கிறது என்பதும், தற்போது இந்த தொழில்நுட்பம் முழு வடிவம் பெற்றுவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலம், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருந்தால் இவை நம் நாட்டிலும் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Chennai to Madurai is just 45 minutes, 'Hyper Loop' technology that shakes the bar : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X