சந்திரயான்-2 செயற்கைக்கோளில் நாசா வைக்கும் புதிய கருவி: எதற்காக?

மேலும் ஏற்கனவே நிலவின் தரைப்பகுதியில் 5 லேசர் கருவிகள் இருக்கின்றபோதிலும்,அவற்றில் சில குறைபாடுகள்காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

|

அடுத்த மாதம் நிலவை சோதனை செய்யும் நோக்கில், இந்தியா தயாரித்து அனுப்பவுள்ள சந்திராயன்-2 செயற்கைக்கோளில் அமெரிக்காவின் லேசல் கருவி பொருத்தப்பட்டவுள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்-2 செயற்கைக்கோளில்  நாசா வைக்கும் புதிய கருவி: எதற்காக?

83 மில்லியன் டாலர்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பட்ட சந்திரயான் -1 ஆனது சந்திர சுற்றுப்பாதையை அமைத்து,சந்திர கிரகத்தின் மீது சில "மாக்மடிக் நீர்" இருப்பை கண்டுபிடித்தது. சந்திராயன் 2 பயணமும் ஆகப்பெரிய நிலவு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வண்ணம் வேறு எந்த நாட்டின் நிலவு பயணமும் தரையிறங்காத நிலவு பகுதியில் தடம்பதிக்கவுள்ளது.

அடுத்த  மாதம் இறுதிக்குள்

அடுத்த மாதம் இறுதிக்குள்

குறிப்பாக நிலவின் பரப்பில் தரையிரங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில், சந்திரயான்-2 செயற்கைகோள் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா அதிகாரி லோரி கிளேஸ்

நாசா அதிகாரி லோரி கிளேஸ்

இந்நிலையில் வாஷிங்டனில் விண்வெளி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாசா அதிகாரி லோரி கிளேஸ் என்பவர் கூறியதாவது.

சந்திராயன்-2

சந்திராயன்-2

நிலவுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவைத் துல்லியமாகக் கணக்கிட, லேசர் எதிரொலிப்புக் கருவி மூலம் நாசா ஆய்வு செய்து வருகிறது. இதனால் நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பவுள்ள சந்திராயன்-2 செயற்கைக்கோளிலும் இஸ்ரேலின் பெரஷித் செயற்கைக்கோளிலும் லேசர் ஆய்வுக் கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளன.

5 லேசர் கருவிகள்

5 லேசர் கருவிகள்

மேலும் ஏற்கனவே நிலவின் தரைப்பகுதியில் 5 லேசர் கருவிகள் இருக்கின்றபோதிலும்,அவற்றில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்

துல்லியமாகக் கணக்கிட முடியும்

துல்லியமாகக் கணக்கிட முடியும்

நாசா-வின் இந்த லேசர் கருவி பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் கற்றையை எதிரொலிக்கும் வகையிலான பெரிய கண்ணாடியைக் கொண்டிருக்கும்,அந்த கற்றை பூமியை மீண்டும் வந்தடையும் நேரத்தைக் கணக்கிட்டு,
நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவையும், நிலவை ஆய்வு செய்யும் கருவியான லேண்டர் உள்ள இடத்தையும் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Chandrayaan 2 will carry NASA’s laser instruments to Moon’: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X