Home
Scitech

சந்திராயன்-2 டிவியில் நேரலை: இஸ்ரோவுடன் கேரள திருநங்கை சாதனை-குவியும் பாராட்டு.!

சந்திராயன்-2 விண்கலனிலிருந்து லேண்டர் விக்ரம் சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக பிரிந்தது. தற்போது நிலவின் தென் துருவத்தை நோக்கி வெற்றிகரமாக சென்றடைந்து வருகின்றது. தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 டிவியில் நேரலை: இஸ்ரோவுடன் சாதனைதிருநங்கைக்கு பாராட்டு.!

லேண்டர் விக்கரம் சந்திராயனில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது குறித்து கேரள தொலைக்காட்சியில், எளிமையாக விளக்கிய திருநங்கைக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றது.

சந்திராயன்-2  விண்கலன்

இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணத்தை துவங்கியது. மேலும், புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவுக்குள் நுழைந்தது. நிலவின் மறுபக்கத்தை நோக்கி வெற்றிகரமாக தனது பயணத்தையும் தொடர்ந்து. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்களும் குவிந்தன.

நிலவின் தென்துருவம்

இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய விண்கலன் முதல்முறையாக எந்த நாடும் இதுவரை நிலவின் தென்துருவத்திற்கு தனது விண்கலனை தரையிறங்கியது கிடையாது. இந்நிலையில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக தென்துருவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

பிரிந்த லேண்டர்

சில நாட்களுக்கு முன் சந்திராயன்-2 இருந்து விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பிரித்தனர். பிறகு லேண்டரும் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை நோக்கி நகர்ந்தது. தற்போது, லேண்டரின் சுற்றுவட்ட பாதையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கை ஹெய்தி சாதியா (22), இவர் கைராளி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். சந்திராயன்-2 லிருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்தது இதை எளிமையாக விளக்கி நேலையில் வழங்கினார்.

அப்போது, நேரலையில் இஸ்ரோ சாதனை செய்திருப்பதாக சாதியா குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கு சமூகநீதி அளிப்பதில் ஊடகத்துறை சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர், செய்தி அறை தனக்கு இரண்டாவது வீடு எனவும் புகழாரம் சூடினார். இதன் மூலம் காட்சி ஊடகத்தில் பணியாற்றிய முதல் திருநங்கை எனும் சாதனையை ஹெய்தி சாதியா படைத்துள்ளார்.

சந்திரயான் மூலம் நிலவில் இந்தியா சாதனை படைத்தது போன்று, கேரளாவில் காட்சி ஊடகத்தில் பணியாற்றி சாதியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஹெய்தி சாதியாவுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.

திருங்கையான சாதியாவுக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. திருநங்கையின் இந்த முயற்சிக்கும் ஏராளமானோர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 3ம் பாலினத்தவருக்கும் சாதியா தற்போது முன்னோடியாகவும் விளங்குகின்றார் என்று தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Chandrayaan-2 Vikram Lander is a tribute to the transgender person TV live : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X