Home
Scitech

"பீஸ் பீஸாக" நொறுங்கவில்லை: சாய்வான நிலையில் இருக்கிறது: விக்ரம் லேண்டர் தரும் புதிய நம்பிக்கை.!

சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிரங்கும் நிகழ்வை உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தனர், ஆனால் நிலவுக்கு சரியாக 2.1கி.மீ தூரத்திற்கு சென்ற நிலையில் தகவல் தொடர்பு துண்டானது. பின்பு நேற்று ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.

 hard லேண்டிங்

hard லேண்டிங்

நிலாவில் hard லேண்டிங் செய்த லேண்டர் கருவி தொடர்பாக, ஆர்பிட்டர் மூலம் கிடைத்த புகைப்படம், புதுநம்பிக்கை தந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தடாலடியாக நிலாவின் மேற்பரப்பில்விழுந்தாலும், பீஸ் பீஸ்ஸாக உடைந்து நொறுங்காமல், அப்படியே ஒரு பொருளாக-கலனாக காட்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

14தினங்கள் தான் உயிர்ப்பு இருக்கும்

14தினங்கள் தான் உயிர்ப்பு இருக்கும்

மேலும் இன்றுடன் சேர்த்து லேண்டரை உயரிப்பிக்க 12 நாட்கள் இருப்பதால், முழு பலத்துடன் களமிறங்கி பணியாற்றுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு. குறிப்பாக லேண்டர் மற்றும் அதன் உள்ளே இருக்கும் ரோவர் ஆகிய இரண்டு கலன்களுக்கும், 14தினங்கள் தான் உயிர்ப்பு இருக்கும், எனவே அதற்குள்ளாக மீட்கும் மிகச்சவாலான பணி நடைபெறுகிறது.

அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது

அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது

லேண்டர் தகவல் துண்டான நிகழ்வு இந்தியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் இஸ்ரோ குறித்தும், லேண்டர் குறித்துமே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சாய்வான நிலையில் இருக்கிறது

சாய்வான நிலையில் இருக்கிறது

இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் ஆகவில்லை என்ற போதிலும் ஹார்ட்லேண்ட் ஆகி நிலவில் விழுந்துள்ளது. அதேநேரம் புகைப்படத்தில் இருப்பதை பார்க்கும்போது அது இரண்டு மூன்று துண்டுகளாக உடையவில்லை. அனுப்பியபோது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. சாய்வான நிலையில் இருக்கிறது என்ற தெரிவித்துள்ளனர்.

 மீண்டும் தகவல் தொடர்பை பெறமுடியுமா

மீண்டும் தகவல் தொடர்பை பெறமுடியுமா

குறிப்பாக லேண்டரிலிருந்து மீண்டும் தகவல் தொடர்பை பெறமுடியுமா என்பதற்கான அனைத்து வகை முயற்சிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Chandrayaan-2's 'Vikram' lander, now lying in a tilted position and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X