சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது! பலே இஸ்ரோ பலே!

|

நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய வேண்டிய சந்திராயன் 2 விண்கலத்தின் கவுண்டவுன் அதிகாலை 1.55 மணி 24 வினாடியில் நிறுத்தப்பட்டது.

சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது!

யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டு சந்திராயன் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சந்திராயன் 2 திட்டத்தின் கீழ் இஸ்ரோ செய்யவிருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.

#1

#1

இந்தியா தனது இரண்டாவது சந்திர மண்டல பயணத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெகு விமர்சையாக வெகு விரைவில் நிலவு நோக்கிப் பாயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#2

#2

சந்திரயான் 1ஐ தொடர்ந்து, சுமார் 10 வருடங்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த முயற்சி உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சி பந்தயத்தில் இந்தியாவின் ஒரு முக்கிய படி என்றே கூறலாம்.

வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி! கொலையா? விபத்தா?

#3

#3

இந்த 10 வருட இடைவெளியில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பலமுறை சந்திரனில் கால் பதித்துள்ளது. இருப்பினும் இந்திய செய்யவுள்ள இந்த புது முயற்சி சாதனைக்கு உரியதே.

#4

#4

இதுவரை மற்ற நாடுகள் மூலம் சந்திரனில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் நிலவின் பூமத்திய ரேகை பகுதி வரை மட்டுமே சென்று வந்த நிலையில், சீனா கடந்த ஜனவரி மாதம் "சாங்'ஈ 4" என்ற செயற்கைக் கோளை நிலவின் தென்துருவதில் முதன் முறையாக இறக்கியது.

#5

#5

சீனாவை தொடர்ந்து இந்தியா சந்திரயான்2 விண்கலத்தைச் சந்திரனின் தென்துருவதில், எந்த வித சேதாரமும் இல்லாதவாறு வாகனத்தைத் தரை இறக்கி சாதனை படைக்கவுள்ளது.

ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.!

#6

#6

5,759 கோடி செலவில் சீனா நிகழ்த்திய இந்த சாதனையை இந்தியா வெறும் 978 கோடி செலவில் நிகழ்த்திக் காட்டவுள்ளது மேலும் ஒரு சாதனை என்றே கூறலாம்.

#7

#7

இந்த சந்திரயான் 2 விண்கலம், சந்திரனைச் சுற்றிவர ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர் "விக்ரம்" மற்றும் ஒரு ரோவர் "ப்ரக்யான்" ஆகியவற்றைச் சுமந்துகொண்டு 52 நாட்கள் சந்திரனை நோக்கி GSLV-MkIII மூலம் பயணம் செய்யக் காத்திருக்கிறது.

#8

#8

சந்திரனில் தரை இறங்கிய 4 மணிநேரம் கழித்து, ரோவர் "ப்ரக்யான்" லேண்டர் "விக்ரம்" இல் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யத் துவங்கி விடும்.

மொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்!

#9

#9

சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஒரு ஆண்டு வரை நிலவைச் சுற்றிவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் மற்றும் பூமியில் உள்ள நிலையத்திற்கு இடையில் உள்ள தகவல் பரிமாறும் கருவியாகவும் ஆர்பிட்டர் செயல்படும். ரோவர் "ப்ரக்யான்" 500m தூரம் வரை நிலவின் பரப்பில் படர்ந்து ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையது.

#10

#10

இஸ்ரோவின் தலைவர் கே.சிவன், சந்திரயான் 2 வெற்றிகரமாகச் சந்திரனில் தரையிறக்கப்பட்டால் இந்தியா சந்திர ஆய்வில் 4வது இடத்தை பிடித்திவிடும்என்று தெரிவித்துள்ளார்.

#11

#11

மேலும் இதுவரை நாசா செலுத்திய செயற்கைக் கோள்கள் பூமத்திய ரேகையில் இறங்கிய நிலையில், சீனாவைத் தொடர்ந்து நாம் இரண்டாவதாக நிலவின் தென்துருவதில் தரையிறக்கச் செய்வது துணிச்சலான செயல் என்று பெருமையாகக் கூறினார்.

#12

#12

சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சுவடுகளைக் கண்டறிந்து கூறியதால் சந்திரயான் 2 அதை ஆழமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது.

மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.!

#13

#13

இந்த ஆய்வின் மேலும் சில முக்கிய அம்சங்கள்: எந்தவித சேதாரமும் இன்றி ஒரு ரோவேரை தரையிறக்கிச் செயல்படுத்த முடியும் என்பதற்கு செயல்விளக்கம், சந்திர மேற்பரப்பைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சி, சந்திரனில் உள்ள கூறுகளின் கலவை மற்றும் அதன் அமைப்பைப் பற்றின புரிதல் மற்றும் நம் பூமியின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்படும்.

#14

#14

சந்திரனின் தென்துருவம் வெகுவாக நிழற்பகுதியில் அமைந்திருப்பதால் அங்குத் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் மேலும் விண்வெளியின் பல அம்சங்களைப் பற்றிக் கண்டறியச் சந்திர மண்டலம் சாதகமான இடம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

#15

#15

நேற்று அதிகாலை 2.51 அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டு, சந்திரயான் 2 விண்கலம், 52 நாள் ஆராய்ச்சி பயணத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
chandrayaan 2 Mission: Complete details about 52 day trip to moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X