சந்திராயன் 2க்கு வந்த சோதனை: இஸ்ரோ செயல்பாடு என்ன?
இந்நிலையில், சந்திராயன்-1 செயல் இழந்ததால், சந்திராயன்-2 ஏவும் திட்டத்தை கையில் எடுத்தது. இஸ்ரோவின் இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் சந்திராயன்-2 ஏவுதல் பல்வேறு முறை தாமதமாகி வந்
சந்திரனை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில், 2008ல் வெற்றிகரமாக சந்திரனுக்கு சந்திராயன்-1 என்ற செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பட்டது.
நிலவில் தண்ணீர் இருக்கின்றது எனவும் சந்திராயன் கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. இதை நாசாவும் உறுதி செய்தது.

இந்நிலையில், சந்திராயன்-1 செயல் இழந்ததால், சந்திராயன்-2 ஏவும் திட்டத்தை கையில் எடுத்தது. இஸ்ரோவின் இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.
இதனால் சந்திராயன்-2 ஏவுதல் பல்வேறு முறை தாமதமாகி வந்தது. இந்தாண்டு ஜனவரியில் ஏவு இருந்ததும் தள்ளிப்போனது.

ஆராய்ச்சி பணிகள்:
ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. தற்போது ஓரளவு இந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்த நிலையில் 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

3,290 கிலோ எடை:
நிலவின் பரப்பு, சந்திரகிரகணம் உள்ளிட்டவை குறித்த தகவல்களைச் சேகரிக்க முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திராயன்-2 ஏவுகணை சுமார் 3,290 கிலோ எடை கொண்டது. நிலவின் சுற்றுப்பாதையில் இதை நிலைநிறுத்தி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்டது:
அதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக் கெட் மூலம் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த IRNSS-1H செயற்கைகோள் முயற்சியும் சற்று பின்னடைவை சந்தித்தது.

சந்திராயன் தள்ளி வைப்பு:
இதற்கிடையில், நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாகவும் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரோவுக்கு பின்னடைவு:
இந்நிலையில், வெற்றிகரமான சந்திராயன்-1, மங்கள்யான்-1 திட்டத்துக்கு பின்னர் இரண்டுமுறை சிறிய பின்னடைவை இஸ்ரோ இருமுறை எதிர்கொண்டுள்ளதால் மிகுந்த சரிபார்ப்புக்கு பின்னர் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஒத்திவைப்பு:
சந்திராயன்-2 விண்கலம் அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள் ஏவப்பட்ட போது, வெப்பத் தகடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை பிரித்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

தாமதம் ஏன்?
சந்திராயன்2 திட்டத்தை, ஜனவரி 3ஆம் தேதி செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. 2018ஆம் ஆண்டின் பிற்பாதியில் செயற்கைக்கோள்களை ஏவும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றதால், சந்திராயன்2 திட்டத்தை செயல்படுத்துவது தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

12 நாட்களில் முடிவு:
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஜனவரி 3ஆம் தேதி செயல்படுத்தப்படாது எனும்போது, சந்திராயன்2 எப்போது ஏவப்படும் என்பது குறித்து இன்னும் 12 நாட்களில் முடிவு செய்யப்படும் என இஸ்ரோ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திராயன்-2 செயல்பாடு:
சந்திராயன்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டாலும், நிலவுக்கு சென்ற பிறகு ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் செயல்பாடு நின்று போனால், இந்த திட்டத்திற்கு பயன்படுத்திய செலவு அதிகமாகும் என்று இஸ்ரோ கருதுகின்றது.

இறுதியாக ஏவப்படும்:
சந்திராயன்-2ல் உள்ள பல்வேறு கோளாறுகளும் களையப்பட்டு வெற்றிகரமாக சந்திரனில் தரையிறக்கி ஆய்வு செய்ய இஸ்ரோவும் காத்து இருக்கின்றது. இதற்காவே இந்த திட்டத்தை செயல்படுத்த தாமதமாகின்றது. மேலும் சுகன்யான் திட்டம் மூலம் இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமும் செயல்படுவதால், சுனுக்கும் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications