சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?

சந்திராயன்-1 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. இவரே தற்போதும் சந்திராயன்-2 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக இருக்கின்றார். விருது வழங்கும் விழா பொது மேடையில் சந்தி

|

சந்திராயன்-1 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை.

சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?

இவரே தற்போதும் சந்திராயன்-2 திட்டத்திற்கும் திட்ட இயக்குராக இருக்கின்றார்.

விருது வழங்கும் விழா பொது மேடையில் சந்திராயன்-2 திட்டத்தின் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.

சந்திராயன்-1:

சந்திராயன்-1:

கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் இந்தியா நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை முதன் முதலில் செலுத்தியது. அக்டோர் மாதம் 22ம் தேதி அனுப்பியது. நிலவில் தரைப்பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது.

ஆயுட் காலம் நிறைவு:

ஆயுட் காலம் நிறைவு:

இந்த விண்ககலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து சந்திராயன்-1 விண்கலன் 2009ம் ஆண்டு அகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது.

 சந்திராயன்-2:

சந்திராயன்-2:

அதன் பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராய-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. இதன்படி வரும் ஜூலை மாதம் 9ம் தேதியிலிருந்து 16ம் தேதிக்குள் சந்திராயன்-11 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விருது வழங்கும் விழா:

விருது வழங்கும் விழா:

இந்நிலையில் சந்திராயன்-2 குறித்து விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுறை, சந்திராயன் ஒன்று நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தாக கூறினார்.

சந்திராயன்-2 1.கி.மீ தூரம் ஆய்வு:

சந்திராயன்-2 1.கி.மீ தூரம் ஆய்வு:

சந்திராயன்-2 விண்கலத்தின் ஆறு சக்கர கலானால் நிலவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கள ஆய்வு செய்ய முடியும் என கூறிய அவர் நிலவிற்கு மனிதனை அனுப்பவதற்கான முதற்கட்ட ஆயத்த பணியின் முன்னோட்டமே சந்திராயன்-2 திட்டம் என்று தெரிவித்தார்.

3 முக்கிய தொழில்நுட்பம்:

3 முக்கிய தொழில்நுட்பம்:

சந்திராயன்-2 விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்படவுள்ளன. இவைகளில் ஆர்பிடர் (orbiter), லண்டர் (lander), ரோவர் (rover). ஆர்பிடர் மற்றும் லண்டர் இணைக்கப்பட்டு ஜிஎஸ்எல்வி மார்க்-3 மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது.

தென் துருவ  தரையில் இறங்கும்:

தென் துருவ தரையில் இறங்கும்:

சந்திராயன்-2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். இதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.

Best Mobiles in India

English summary
chandrayaan 2 is going to achieve remarkable milestone says mylswamy annadurai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X