Chandra Grahan 2020: ஜனவரி 10: 2020-ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம்: எங்கெங்கு தெரியும்?
கடந்த ஆண்டு 2019 டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடந்த நிலையில் சந்திர கிரகணமானது வரும் ஜனவரி 10(நாளை) தேதி நிகழ்வு நடக்க உள்ளது. குறிப்பாக சந்திரன்-பூமி - சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

சந்திர கிரகணம்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சந்திரன்-சூரியன் இடையே பூமி வரும் போது, சூரியனின் ஒளி பூமியால் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது. இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நிலாவின் மீது படுகின்றன சூரிய வெளிச்சத்தை பூமியின் நிழல் மறைப்பதால் உருவாவது தான் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

பூமியின் நிழல் மறைத்துக் கொள்ளும்
பொதுவாக சந்திர கிரகணம் என்றால் சந்திரனில் படும் சூரிய ஒளியை பூமியின் நிழல் மறைத்துக் கொள்ளும். அந்த கிரகணகாலம் முடியும் வரை நிலவு தோன்றாமல் கருமையாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சந்திர கிரகணத்தில் மொத்தம் மூன்று வகைகள் இருக்கின்றன. அவை என்னவென்றால்,முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணகம், என மூன்று வகைகள் உண்டு.

நாளை வரும் சந்திர கிரகணம்,இந்திய நேரப்படி, இரவு சுமார் 10.30மணிக்கு ஆரம்பிக்கிற கிரகணம் கிட்டத்தட்டஅதிகாலை 2.30மணி வரை நீடிக்கிறது. இந்த 4மணி நேர இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 90சதவீத நிலவின்பரப்பு பூமியின் நிழலால் மறைக்கபட்டு, வெளிவட்டப் பாதை மட்டும் நிழல் போலத் தோன்றும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இந்த வருத்தின் முதல் சந்திர கிரகணமானது இது முழுமையில்லாத தெளிவற்ற
கிரகணமாக இருக்கும்.

இந்தியாவில் தெரியாது
ஜனவரி 10-ம் தேதி (நாளை) வரும் இந்த சந்திர கிரகணம் ஆனது இந்தியாவில் தெரியாது என்று சொல்லப்படுகிறது,ஆனால் ஐரோப்பிய நாடுகள், ஆசரியாவின் பெரும்பாலான பகுதி, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாபோன்ற நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

ஜூன் 5, 2020
2020-ம் ஆண்டில் முதலில் வருகின்றன சந்திர கிரகணம் இது என்றாலும், இன்னும் இதே ஆண்டில் மேலும் மூன்றுசந்திர கிரகணங்கள் தோன்ற இருக்கின்றன. அவை
ஜூன் 5, 2020-இதுவும் நிழல் போன்ற கிரகணமாகத் தான் இருக்கும, தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாபோன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
அடுத்து ஜூலை 5, 2020-ல் தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும், இதை அமெரிக்கா,, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும்.
நவம்பர் 30 2020-ல் வரும் கிரகணமானது அமெரிக்கா,வடிக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாஆகிய நாடுகளில் தோன்றும்.


Click it and Unblock the Notifications