Home
Scitech

உபரின் ஏர் டாக்ஸி புரோட்டோடைப் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம்.!

அமெரிக்காவில் நடைபெற்ற சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் புதிய முக்கிய தொழில்நுட்ப மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தியாளர்களுக்கான சிறந்த மேடையாக இந்த சிஈஎஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் புதிய முக்கிய தொழில்நுட்ப மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தியாளர்களுக்கான சிறந்த மேடையாக இந்த சிஇஎஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வருடாந்திர அமெரிக்கன் எலக்ட்ரானிக் நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியில், புதுமையான பல கேஜெட்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடைய பல ஸ்மார்ட் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

பெல் நெக்ஸஸ் ஏர் டாக்ஸி

பெல் நெக்ஸஸ் ஏர் டாக்ஸி

சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில், பெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நெக்ஸஸ் ஏர் டாக்ஸி அனைவரையும் கவர்ந்துள்ளது. உபர் நிறுவனத்துடன் இணைந்து பெல் நெக்ஸஸ் நிறுவனம் இந்த ஏர் டாக்ஸியை உருவாக்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஏர் டாக்ஸி சேவை

2023 ஆம் ஆண்டில் ஏர் டாக்ஸி சேவை

உபர் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் நிச்சயம் ஏர் டாக்ஸி சேவையை துவங்குமென்று முன்பே அறிவிப்புகளை அறிவித்திருந்தது. அதற்கான முயற்சியில் மும்முரமாக உபர் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற உபர் கலந்தாய்வில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

பெல் நெக்ஸஸ் ஏர் டாக்ஸியின் புரோட்டோடைப்

பெல் நெக்ஸஸ் ஏர் டாக்ஸியின் புரோட்டோடைப்

அதனை தொடர்ந்து தற்பொழுது சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில், பெல் நிறுவனம் பெல் நெக்ஸஸ் ஏர் டாக்ஸியின் புரோட்டோடைப் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்குச் சிறிய ஹெலிகாப்டர் போல இருக்கும் இந்த ஏர் டாக்ஸியில் 6 சூப்பர் டர்போ ரோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

செங்குத்தாக டேக் ஆப் மற்றும் லேண்டிங்

செங்குத்தாக டேக் ஆப் மற்றும் லேண்டிங்

ஏர் டாக்ஸியில் உள்ள 6 ரோட்டர்களில் 4 பெரிய ரோட்டரும் 2 சிறிய றோட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் ஏர் டாக்ஸி செங்குத்தாக டேக் ஆப் மற்றும் லேண்டிங் செய்யும்படி வடிவைக்கப்பட்டுள்ளது. ஏர் டாக்ஸியின் முன் பகுதியில் ஓட்டுநருக்கான ஒரு இருக்கையும் பயணிகளுக்காக பின்னல் 4 இருக்கைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் அமெரிக்காவில் துவங்கம்

முதலில் அமெரிக்காவில் துவங்கம்

உபர் நிறுவனம் தனது ஏர் டாக்ஸி சேவையை முதலில் அமெரிக்காவில் துவங்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிரிபார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
CES 2109 Bell Nexus Flying Air Taxi : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X