சீனா மீது இந்தியா அணு ஆயுதம் வீசினால், சீனாவின் நிலை இதுதான்.!

By Staff
  Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?

  உடனே "செத்தான் சீனாக்காரன்" என்று கொக்கரிக்கவோ, "இந்தியா டா.. கெத்து டா.. மோதி பாருடா" என்று பெருமை கொள்ளவோ வேண்டாம். ஒரு அணு ஆயுத தாக்குதல் என்பது ஒரு நாட்டின் வீராப்பு சார்ந்த விடயமல்ல, வெட்கத்திற்குரிய விடயமாகும். இன்னும் வெளிப்படையாக கூறினால், அணு ஆயுத தாக்குதலை நிகழ்த்துவதின் மூலம் ஒரு நாடு அதன் கோழைத்தனத்தை, கையாளாகத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்றே அர்த்தம்.

  உடனே இந்தியாவை பற்றி தவறான கருத்துக்களை பகிர்கிறேனென்று எனை சாடத்தொடங்க வேண்டாம். இந்தியாவோ, சீனாவோ, ரஷ்யாவோ, அமெரிக்காவோ - எந்த நாடாக இருப்பினும், அணு ஆயுத தாக்குதல் என்று வந்துவிட்டால் அது நிச்சயமாக ஒருவழிப்பாதை தாக்குதலாக இருக்காது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இருநாட்டு மக்களின் நிலை.?

  எடுத்துக்காட்டுக்கு இந்தியா, சீனாவின் மீது ஒரு அணு ஆயுத தாக்குதலை தொடங்கிய சில நொடிக்குள் சீனாவும் எதிர் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நிதர்சனம். இது சீனா - இந்தியாவிற்கு மட்டுமல்ல, போர்வெறி முத்திப்போய் திரியும் அனைத்து உலக நாடுகளுக்கும் பொருந்தும். அப்படியாக நிகழும் ஒரு அணு ஆயுத பேரழிவிற்கு பின்னர் இந்தியா என்ற பசுமை தேசமும், சீனாவின் பரந்த நிலமும், அதன் இருநாட்டு மக்களின் நிலையும் எப்படி இருக்குமென்று தெரியுமா.? - கொடூரமாக இருக்கும்.

  அச்சமும், பீதியும்.?

  ஒரு அணு குண்டு விழுந்தால், பூமி கிரகத்தின் அந்த குறிப்பிட்ட இடம் ஒட்டுமொத்தமாய் மாறப்போகிறது என்று அர்த்தம். கடந்த 50 ஆண்டுகளாக, அந்த பயங்கரம் எப்போது, எங்கு நிகழுமென்ற என்ற பீதியும், உலகின் எதோ ஒரு மூலையில், எதோ ஒரு நபரின் மூலம் எப்போது அந்த பொத்தான் அழுத்தப்படும் என்ற அச்சமும் அணுவாயுத அரசியல் மற்றும் விளைவுகள் தெரிந்த அனைவரிடம் தீர்க்கமாக உள்ளது.

  கொடூரமான 10 யதார்த்த நிலைகள்

  ஆனால், நாம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. நமக்கு தெரிந்த அணு ஆயுத தாக்குதல்கள் எல்லாம் சினிமாவிலும், வீடியோ கேம்களிலும் மட்டும் தான். ஆனால், உண்மையில் உலகின் முகத்தை சிதைக்க அணு குண்டுகளும் அதனை அழுத்த விரல்களும் காத்திருக்கின்றன என்பதே கசப்பான நிதர்சனம்.

  அப்படியான ஒரு அணு குண்டு வெடிப்புக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சோதனைகள் மற்றும் உருவகப்படுத்துதல்களின் கீழ் கிடைக்கப்பெற்ற கொடூரமான 10 யதார்த்த நிலைகள் இதோ.

  10. கருப்பு மழை பொழியும்

  ஒரு அணு குண்டு வெடிப்பு நடந்த சில நிமிடங்களில், அந்த பிரதேசம் முழுவதிலும் ஒரு கடினமான கருப்பு மழை வீழ்ச்சியுறும். அவைகளை மழைநீர் போன்ற ஈரமான துளிகளென்று நினைக்க வேண்டாம். அவைகள் தூசி மற்றும் தீப்பிழம்புகளால் உருவான கடினமான மழையாகும். அந்த மழை உண்மையில் மனிதர்களை கொல்லவும் கூடும்.

  சித்திரமான திரவத்தைக் குடிக்க முயன்றனர்

  ஹிரோஷிமாவில், வெடிப்பு நிகழ்ந்த 20 நிமிடங்கள் கழித்து கருப்பு மழை விழ ஆரம்பித்தது. வெடிப்பு நிகழ்த்த மையப்புள்ளியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) பரப்பளவை அந்த கருப்பு மழை ஆக்கிரமித்தது. ஒரு தடிமனான திரவமாக பொழிந்த அந்த மழை கிராமப்புறங்களை மூடியது. நகரத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் ஏற்கனவே ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தாகத்தினாலும் மடிந்த வண்ணம் இருந்தனர்.

  மறுபக்கம் தீப்பிழம்புகளில் போராடிய பலர் தங்கள் வாய்களைத் திறந்து, வானத்திலிருந்து விழுந்த விசித்திரமான திரவத்தைக் குடிக்க முயன்றனர். அந்த திரவத்தில் போதுமான கதிர்வீச்சு இருந்தது மற்றும் அது ஒரு நபரின் இரத்தத்தில் மாற்றங்களை நிகழ்த்தவும் செய்தது.

  09. ஒரு மின்காந்தவியல் துடிப்பு அனைத்து மின்சாரத்தையும் நிறுத்திவிடும்

  ஒரு அணு வெடிப்பு நிகழும் போது, ஒரு மின்சார அமைப்பு அல்லது ஒரு முழு நாட்டிற்கான மின்சார கட்டத்தை கூட பாதிக்கும் அளவிலான மின்காந்த கதிரியக்கத்தின் துடிப்புகள் வெளிப்படும்.

  அணு சோதனை ஒன்றில், ஒரு அணு குண்டு வெடித்ததன் மூலம் வெளியாகும் மின்காந்த கதிரியக்கத்தின் துடிப்புகள் ஆனது தொலைதூரக் குடியிருப்புகளில் உள்ள தெரு விளக்குகள், டிவி செட்கள் என 1,600 கிலோமீட்டர் (1,000 மைல்) வரை பாதிப்புகளை ஏற்படுத்துமென்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவொரு நோக்கமில்லாத சோதனையாகும், அப்போது "அழித்தல்" என்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களானது இதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமே வேண்டாம்.

  இலவசமாக வேலை செய்யும் நிர்பந்தம்

  குண்டுகள் விழுந்தபின் விளக்குகள் அணையும், உணவை சேகரிக்கும் ஒவ்வொரு குளிர்சாதனமும் மூடப்படும். ஒவ்வொரு கணினியின் தரவு அழிக்கப்படும். நீர் சுகாதார வசதிகள் உடைந்து சுத்தமான குடிநீரை இழப்போம். அந்த நாட்டின் ஒட்டுமொத்த ஆன்லைன் அமைப்பையும் திரும்ப பெற அடுத்த ஆறு மாத காலம் பணியாற்ற நேரிடும். நாட்டின் மக்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் இலவசமாக வேலை செய்யும் நிர்பந்தம் ஏற்படும். குண்டுகள் வீழ்ந்த நீண்ட காலம் மக்கள் மின்சாரம் இல்லாமல், சுத்தமான தண்ணீரை இல்லாமல் வாழ போராடிட வேண்டும்.

  08. வெளியேறும் புகை சூரியனை மறைக்கும்

  குண்டு வெடிப்பு மையத்தை சுற்றியுள்ள பகுதிகள் நம்பமுடியாத அளவில் ஆற்றல் நிறைந்ததாகவும், தீப்பிழம்புகளாலும் சூழ்ந்து கிடக்கும். எரிக்கக்கூடிய அனைத்தும் எரிக்கப்படும். கட்டிடங்கள், காடுகள், பிளாஸ்டிக் மட்டுமின்றி சாலையின் தார் கூட எரியும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் வெடிக்கும்.

  அணுவாயுத குண்டு வெடிப்பின் தீ, ஒரு சூடான, நச்சுத்தன்மை நிறைந்த புகையை வளிமண்டலத்திற்கு அனுப்பும், அது அங்கிருந்து மேல் அடுக்கு மண்டலத்திற்கு செல்லும். பூமியின் மேற்பரப்புக்கு மேலே 15 கிலோமீட்டர் (9 மைல்) தூரத்தில் ஒரு இருண்ட மேகம் வளரும், அது நகர்ந்து, நகர்ந்து, முழு கிரகத்தையும் மறைக்கும், வானத்தை தடுக்கும், சூரியனை மறைக்கும்.

  அடுத்த 30 ஆண்டுகளுக்கு

  ஒரு அணு ஆயுத தாக்குதல் நிகழ்ந்த அடுத்த ஒரு ஆண்டுக்கு, அந்த பிரதேசத்தில் சூரியன் பிரகாசிக்கமாட்டாது, பதிலாக வெளிச்சத்தை மறைக்கக் கூடிய கருப்பு மேகங்களை மட்டுமே நாம் பார்ப்போம். அந்த பகுதியில் மீண்டும் நீல வானம் மீண்டும் எப்போது காட்சிப்படும், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை உறுதியாகக் கூறுவது கடினம். ஆனால், ஒரு முழு அணுசக்தி வீச்சில், நாம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒரு தெளிவான வானத்தை பார்க்க முடியாது என்று நம்பப்படுகிறது.

  07. உணவு வளர்ச்சியை தடுக்கும் அளவிலான அதீத குளிர் இருக்கும்

  வானத்திலிருந்து சூரியன் தடுக்கப்பட, உலக வெப்பநிலை வீழ்ச்சியடையும். அந்த வீழ்ச்சி எத்தனை குண்டுகள் வீசப்பட்டது என்பதை பொறுத்தது மற்றும் அது ஒரு பேரழிவான மாற்றத்தை கொண்டுவரும். அதவாது உலகளாவிய வெப்பநிலை, 20 டிகிரி செல்சியஸ் (36 டிகிரி பாரன்ஹீட்) வரை வீழ்ச்சியடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு

  அதன் விளைவாக, உணவுகள் சார்ந்த வளர்ச்சி சாத்தியமற்ற காரியமாக மாறும். உலகெங்கிலும் உள்ள விலங்குகள் மரணம் அடைந்துவிடும் மற்றும் காய்கறிகள் வாடும் பின்னர் சாகும். இந்த நிலைப்பாடு ஒரு புதிய பனி யுகத்தின் விடியலாக இருக்காது மாறாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மிகவும் கொலைகாரத்தன்மைமிக்க உறைநிலை பருவமாக இருக்கும். ஆண்டில் ஒரு மாதம் குறையும். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெப்பநிலை மீண்டும் சாதாரணமான நிலைக்கு திரும்பும், மனித வாழ்க்கை தொடரும் - ஆனால் அதைப் பார்க்கும் அளவு நீண்ட காலத்திற்கு நம்மால் வாழ முடியாமலும் போகலாம்.

  06. ஓசோன் அடுக்கு திவீரமாகி கிழியும்

  இதுவரை நாம் வாழ்ந்து வந்த மனித வாழ்க்கையானது, வழக்கம் போல முற்றிலும் சாதாரணமாக இருக்க முடியாது, இருக்காது. வெடிகுண்டுகள் வெடித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அசுத்தமான சூழல்களின் கீழ் நாம் இயங்கும் பட்சத்தில், ஓசோன் படலத்தில் துளைகள் விழ ஆரம்பிக்கும் - இது பேரழிவை தரும். உலகில் உள்ள அணு ஆயுதங்களின் 0.03% பயன்பாடு கூட அதவாது ஒரு சிறிய அணுஆயுதப் போர் கூட, ஓசோன் அடுக்குகளில் 50 சதவிகிதம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

  டி.என்.ஏ-வின் முடக்குதலால் ஏற்படும் மாற்றங்களால்

  புற ஊதா கதிர்கள் மூலம் உலகம் மெல்ல மெல்ல அழிக்கப்படும். உலகெங்கிலும் உள்ள தாவரங்கள்இறந்துவிடும், உயிரினங்கள் தங்களது டி.என்.ஏ-வின் முடக்குதலால் ஏற்படும் மாற்றங்களால் உயிர்வாழ போராடும். மிகவும் நெகிழ்திறன் வாய்ந்த பயிர்கள் கூட பலவீனமானகும், சிறியவையாகும், இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் குறைவானதாகவும் மாறும்.

  பாதிப்புகள் முழுமையாக ஓய்ந்து வானம் சுத்தமாகி, உலகம் மீண்டும் நம்மை உலரவைக்கும்போது உணவு வளர்ச்சி என்பது மிகவும் நம்பமுடியாத அளவிற்கு கடினமானதாக இருக்கும். நிலம் முற்றிலுமாக அழிந்து போயிருக்கும், சூரியனின் கீழ் அதிக நேரம் நிற்கும் விவசாயிகள் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.

  05. பில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் தவிப்பார்கள்

  ஒரு முழுமையான அணுசக்தி வீசின் பாதிப்பானது, ஒரு நியாயமான அளவிலான உணவை வளர்க்க அடுத்த ஆண்டுகளுக்கு வாய்பளிக்காது. குறைந்த வெப்பநிலையுடன், உறைபனியில், வானில் இருந்து கொட்டும் கொடூரமான புற ஊதா கதிர்வீச்சிற்கு மத்தியில் சில பயிர்கள் விளைவித்து, அது அறுவடைக்கு வர நீண்ட காலம் ஆகும். இதன் விளைவாக பில்லியன் கணக்கான மக்கள் பசியால், பட்டினியால் மரணம் அடைவார்கள்.

  உண்ணும் எதையும் சாப்பிட ஆபத்தானதாக மாற்றும்.

  உயிர் பிழைப்பவர்கள் உணவு கிடைக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பார்கள், ஆனால் அது எளிதல்ல. கடலின் அருகே வாழும் மக்களின் சற்று நிம்மதியாக இருக்கும் என்றாலும் கூட கடல் உயிரினங்களின் வாழ்க்கை அரிதாகவே இருக்கும். மூடிமறைக்கப்பட்ட வானத்திலிருந்து பொழியும் இருண்ட சாம்பலானது, உயிரைக் காப்பாற்றும் முக்கிய உணவு ஆதாரங்களைக் கொன்றுவிடும். கதிரியக்க மாசுபாடு தண்ணீருக்குள் நுழைந்து, வாழ்வாதாரங்களை குறைத்து, உண்ணும் எதையும் சாப்பிட ஆபத்தானதாக மாற்றும்.

  ஆக, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் உணவை உண்ணாமல் இருக்கபோவது இல்லை. ஏனெனில் உணவு மிகக் குறைவு, போட்டி மிகவும் கொடூரமானது, ஆக உண்பதின் மூலமாகவே பெரும்பாலானவர்கள் இறந்து போவார்கள்.

  04. சீல் செய்யப்பட்ட உணவு சாப்பிட உகந்ததாக இருக்கும்

  ஒருவேளை மக்கள், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாழ்ந்தால் அதற்கு முக்கியமான காரணமாக சீல் செய்யப்பட்ட உணவுகள் திகழும். க்கிய வழிகளில் ஒன்று, இருப்பினும், சாப்பிட்டு பாட்டில் மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு மூலம். இது கேட்க புனைகதையை போல் இருந்தாலும், இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் உணவுகள் தான் அணுஆயுத தாக்குதலுக்கு பின்னரும் கூட சாப்பிட பாதுகாப்பானதாக இருக்கும்.

  03.இரசாயன கதிர்வீச்சு நமது எலும்புகளில் நுழையும்

  ஒருவேளை சாப்பிட போதுமான உணவுகள் இருந்தாலும் கூட, தப்பிப்பிழைத்தவர்கள் பரவலான புற்றுநோயுடன் போராட வேண்டியிருக்கும். வெடிகுண்டுகள் வெடித்தவுடன், கதிரியக்க துகள்கள் வானத்தில் பறந்து உலகம் முழுவதும் வீழ்ச்சியுறும். அது தரையிறங்கும்போது சிறியதாய் இருக்கும், அதனால் அவைகளை பார்க்க முடியாது ஆனால் அது நம்மை மெல்ல கொல்லும் அளவிலான சக்தியை கொண்டிருக்கும்.

  அணு ஆயுத இரசாயனங்களில் ஒன்றான ஸ்ட்ரோண்டியம் 90-ஐ உட்கொண்டாலோ அல்லது நுகரந்தாலோ அது நேராக எலும்புகளை மற்றும் பற்களை சென்றடைந்து எலும்பு புற்றுநோய்க்கு நம்மை அழைத்து செல்லும். புற்றுநோய் விகிதங்கள் அதிகரிக்கும், ஆயுள்காலம் குறுகியதாக இருக்கும், பிறப்பு குறைபாடுகள் பொதுவானதாகிவிடும், ஆனால் மனிதகுலம் அழியாது.

  02. பெரும் புயல்கள் இருக்கும்

  உறைந்திருக்கும் அந்த இருண்ட பிரதேசங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், நாம் இதுவரை பார்த்திராத அளவிலான கடுமையான புயல்களை எதிர்பார்க்கலாம். அணு ஆயுத கரும்புகைகள் மற்றும் குப்பைகள், அடுக்கு மண்டலத்தில் சூரியனை தடுக்க மட்டும் செய்யாது வானிலையையும் சேர்த்தே பாதிக்கும். இதனால் மழை உருவாக்கம் மாறும், அதிக மழை பெய்யலாம், கடுமையான புயல்களையும் எதிர்பார்க்கலாம்.

  கடல்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். தாக்குதலின் விளைவாக, பூமியின் வெப்பநிலை விரைவில் குறைந்து குளிர்காலத்திற்கு வீழ்ச்சியுற்றாலும் கூட, பெருங்கடல்கள் குளிர்ந்த நிலையை அடைய நிறைய நேரம் எடுக்கும், கடல்கள் ஒப்பீட்டளவில் சூடாகவே இருகும். இதன் விளைவாக, கடலோரப்பகுதியில் பாரிய சூறாவளிகளையும், புயல்களையும் ஏற்படும்.

  01. மக்கள் தப்பிப்பிழைப்பார்கள்

  நிச்சயமாக பில்லியன் கணக்கான மக்கள், அணுசக்தி பேரழிவில் இறப்பார்கள். யுத்தத்தின் வெடிப்புக்களில் உடனடியாக 500 மில்லியன் மக்கள் வரை இறக்கக்கலாம். மறுகையில், மக்கள் தப்பி பிழைக்கவும் வாய்ப்புகள் உண்டு. பிழைத்தவர்கள், புதிய உலகில் மேற்கண்ட அத்துணை சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

  25 முதல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மேகங்கள் தெளிவாகத் தெரியும், வெப்பநிலை சாதாரணமாகத் திரும்பும், இறந்துபோன நகரின் எஞ்சியுள்ள பகுதிகளில் தடிமனான காடுகள் வளரும். தாவரங்கள் வளரும். அவைகள் முன்பு போல் பசுமையாக கூட இருக்கலாம். வாழ்க்கை தொடரும் - ஆனால் உலகம் மீண்டும் ஒருபோதும் பழையது போல மாறாது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Say NO to Nukes or face this Brutal Realities Of Life After The Nuclear Apocalypse. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more