பீதி: ஏலியன்களிடமிருந்து பூமிக்கு எப்போவோ சமிக்ஞை வந்துவிட்டது.!

பூமி கிரகத்தில் இருந்து சுமார் 3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு குள்ள விண்மீனில் இருந்து வெளியான 15 ரேடியோ வெடிப்புகளை கண்டறிந்துள்ளார்

|

அதென்ன.?? எப்போது பார்த்தாலும் ஏலியன் சார்ந்த புரளிகளும், பறக்கும் தட்டுகளும் அமெரிக்காக்காரன் கண்களில் மட்டுமே சிக்குகிறது.?? ஏலியன்கள் என்றாலே அதே நாசா தானா.? ஒரு இந்தியரின் பெயரும் அறியப்பட முடியவில்ல.!

அப்போது நாசாவை தவிர வேறெந்த நாடுகளுமே வேறெந்த நாட்டை சேர்ந்தவர்களுமே எக்ஸ்டராடெர்ரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகளை பற்றிய ஆய்வுகளை, தேடல்களை நிகழ்த்தவில்லையா.?

அப்படியெல்லாம் இல்லை.!

பெரும் திருப்புமுனை

பெரும் திருப்புமுனை

ஒரு 100மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வேற்றுகிரகவாசிகளை கவனித்தல் திட்டப்பணியில் ஈடுபடும் இந்திய விஞ்ஞானி ஒருவர் ஏலியன்கள் தேடல் சார்ந்த ஆய்வில் பெரும் திருப்புமுனையான விடயத்தை கண்டறிந்துள்ளார்.

3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில்

3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில்

ஐந்து மணி நேர நீளமான கவனிப்பில் ஈடுபட்ட இந்திய விஞ்ஞானியான டாக்டர் விஷால் கஜ்ஜார் பூமி கிரகத்தில் இருந்து சுமார் 3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு குள்ள விண்மீனில் இருந்து வெளியான 15 ரேடியோ வெடிப்புகளை கண்டறிந்துள்ளார்.

விண்கலங்களுக்கு ஆற்றல்

விண்கலங்களுக்கு ஆற்றல்

இதுவரை கிடைக்கப்பெற்ற விவகாரங்களிலிருந்து இவ்வகை ரேடியோ வெடிப்புகளானது - வேற்றுகிரகவாசி நாகரிகங்களால் பயன்படுத்தப்படும் - விண்கலங்களுக்கு ஆற்றல் வழங்கும் ஒரு மூலமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுக்கிறது.

விண்மீனை விட்டு வெளியேறியபோது

விண்மீனை விட்டு வெளியேறியபோது

குறிப்பிட்ட கிரகத்தில் இருந்து வெளியான பாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் (fast radio bursts- FRB) அதன் பெருந்திரள் விண்மீனை விட்டு வெளியேறியபோது, நமது முழு சூரிய குடும்பத்தின் வயது வெறும் 2 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையானதாக இருந்துள்ளது. அதாவது உயிரினங்களும், பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களும் பூமியில் தொடங்குவதற்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கும்.

ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள்

ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள்

இந்த ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் என்பது தொலைதூர கேலக்ஸிகளில் இருந்து வெளியாகும் ரேடியோ உமிழ்வின் சுருக்கமான, பிரகாசமான பல்ஸ்கள் (துடிப்புகள்) ஆகும். ஆஸ்திரேலியாவில் உள்ள பார்க்ஸ் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் ஆனது, இப்போது உலகம் முழுவதும் உள்ள பல ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் காணப்படுகிறது.

வெடிப்பின் லோக்கேஷன்

வெடிப்பின் லோக்கேஷன்

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் (ஆகஸ்ட் 26) யூசி பெர்க்லி போஸ்ட்டாக்டரல் ஆராய்ச்சியாளரான டாக்டர் விஷால் கஜார் எப்ஆர்பி121102 ரெடியா வெடிப்பின் லோக்கேஷன் மேற்கு விர்ஜினியாவில் உள்ள கிரீன் பாங்க் தொலைநோக்கியின் வழியாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த ஆய்வில் மொத்தம் 400டிபி அளவிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக செயல்படும் நிலை

புதிதாக செயல்படும் நிலை

டாக்டர் விஷால் கஜ்ஜார் மற்றும் அணி நிகழ்த்திய பகுப்பாய்விற்கு பின்னர், எப்ஆர்பி121102-இலிருந்து 15 புதிய பல்ஸ்கள் வெளிப்பட்டுள்ளது மற்றும் அது புதிதாக செயல்படும் நிலையில் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எப்ஆர்பி 121102 ஆனது, முதன்முதலில் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2015-ஆம் ஆண்டில் மறுபடியும் இந்த எப்ஆர்பி பார்க்கப்பட்டது. இதுதான் மறுபடியும் வெளிப்பட்ட முதல் ரேடியோ வெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நுண்ணறிவைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள்

நுண்ணறிவைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள்

2016-ஆம் ஆண்டில், ரேடியோ வெடிப்புகள் எந்த பெருந்திரள் விண்மீனில் இருந்து வெளிப்பட்டது என்பது அடையாளம் காணப்பட்டு, அது பூமியில் இருந்து சுமார் 3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு குள்ள விண்மீன் மண்டலம் என்று அறியப்பட்டது. அப்போதிருந்து, உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அந்த விண்மீன் இலக்காக அமைந்தன. எப்ஆர்பி (FRB) உருவாகும் நுண்ணறிவைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தான் இந்த 15 புதிய பல்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அண்டவியல் நிபுணர் ஸ்டீபன் ஹாக்கிங்

அண்டவியல் நிபுணர் ஸ்டீபன் ஹாக்கிங்

இந்த பிரேக்த்ரோ லிசன் ஆய்வு கடந்த 2015-ஆம் ஆண்டு இண்டர்நெட் முதலீட்டாளர் மற்றும் தொண்டு நிறுவனராபா யூரி மில்னர் மற்றும் அண்டவியல் நிபுணர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரால் தொடங்கப்பட்ட உலகளாவிய வானியல் முயற்சி என்பதும், அருகில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவற்றை ஆராய்வதுதான் இதன் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
பூமி கிரகத்தில் இருந்து சுமார் 3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு குள்ள விண்மீனில் இருந்து வெளியான 15 ரேடியோ வெடிப்புகளை கண்டறிந்துள்ளார்

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X