திடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.! காரணம் என்ன?

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி அந்தமான் - வங்கக்கடல் பகுதியில் பிரமோஸ் ஏவுகணையை இந்திய ராணுவனம் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியா -சீன இடையே லாடக் எல்லை பிரச்சனை உள்ளது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் இன்னும் சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாசலப்பிரதேசம்

அதேசமயம் அருணாசலப்பிரதேசம் மற்றும் லடாக் அருகே இந்திய ராணுவம் பிரமோஸ் ஏவுகணைகளை குவித்து உள்ளது. குறிப்பாக சீனா அத்துமீறாலாம் என்பதால் தரையில் இருந்து மற்றும் விமானத்தில் இருந்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா எல்லையில் குவித்து உள்ளது.

இருந்து இன்னொரு

இந்நிலையில் தரையில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று குறி வைத்து தாக்கும் அட்டகாசமான பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இன்று சோதனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

ஏற்கனவே எச்சரிக்கை

அதுவும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து வங்கக்கடல் அருகே இருக்கும் தீவு ஒன்றில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் வங்கக்கடலில் இப்போது நிவர் புயல் உருவாகி உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில்தான் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து சரக்கு கப்பல், போக்குவரத்து கப்பல்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 பிரமோஸ் ஏவுகணையின் துல்லியத

மேலும் இந்த வாரம் முழுவதும் இப்படி நிலைய ஏவுகணை சோதனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இன்று நடந்துள்ள பிரமோஸ் ஏவுகணை ஆனது தரையில் இருந்து இன்னொரு இடத்தில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகனை ஆகும். எனவே இந்த பிரமோஸ் ஏவுகணையின் துல்லியதன்மையை சோதனை செய்யும் வகையில் இந்த சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரமோஸ் ஏவுகணை

வெளிவந்த தகவலின்படி, இந்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இலக்குகளை தாக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு மேக் 3 வேகத்தில் செல்லும் உலகிலேயே வேகமான ஏவுகணை இது.

 450 கிலோ மீட்டர்

ஆனால் இந்தியாவிடம் சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளும் உள்ளது. ஆனால் அதை இந்தியா சோதனை மட்டுமே செய்து வருகிறது. பின்பு ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை அப்டேட் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

 800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்

அதன்படி 800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் வகையில் ரஷ்யாவுன் இந்தியா இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு முன்னோட்டமாக தான் பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியத்தன்மையை சோதனை செய்ய இந்திய முடிவெடுத்து, அந்தமான் பகுதியில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இப்போது செய்யப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Source: india.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
BrahMos supersosnic missile successfull test fire report: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X