Home
Scitech

விக்ரம் லேண்டர் நிலமை என்ன? நாசா விஞ்ஞானியிடம் நேரடியாக விசாரித்த பிராட் பிட்.!

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது

பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து சரியாக 2.1கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுபட்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ஹார்டாக லேண்ட் ஆனதுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். அப்படி லேண்ட் ஆன காரணத்தினால் லேண்டர் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்

இந்நிலையில் சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் குறித்த சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விஞ்ஞானியிடம் விசாரத்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட். இந்த செய்தி வைரலாக இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

 நாசா விஞ்ஞானி நிக் ஹேக்

நாசா விஞ்ஞானி நிக் ஹேக்

நடந்தது என்னவென்றால், விண்வெளிப் பயணத்தை மையமாக வைத்து நடிகர் பிராட் பிட் நடித்துள்ள அட் அஸ்ட்ரா படத்துக்கான புரமோஷன் வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒருபகுதிய சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விஞ்ஞானி நிக் ஹேக் உடன் பேசினார்.

நாசா அமைப்பு நேரலையில் ஒளிபரப்பியது

நாசா அமைப்பு நேரலையில் ஒளிபரப்பியது

அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துஉறையாடினார். இந்த உரையாடலை நாசா அமைப்பு நேரலையில் ஒளிபரப்பியது.

பார்க்க முடிந்ததா என்று கேட்டார்

குறிப்பாக நடிகர் பிராட் பிட் பேசுகையில் இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் குறித்து நாசா விஞ்ஞானி நிக் ஹேக்கிடம் கேட்டார். பிராட் பிட் கேட்டது என்வென்றால், கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜேபிஎல் ஆய்வகத்திற்கு
கடந்த வாரம் சென்றிருந்தேன், இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தலையிறங்க முயற்சி செய்த நாள்அது. அவர்களுக்கு அமெரிக்காவும உதவி செய்தது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதை உங்களால் பார்க்கமுடிந்ததா என்று கேட்டார்.

பதில் கூறிய ஹேக்

பதில் கூறிய ஹேக்

இதற்கு பதில் கூறிய ஹேக், நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அதை பார்க்க முடியவில்லை எனக் கூறினார். மேலும்செய்திகள் வாயிலாகவே அதை தெரிந்துகொண்டதாகவும் ஹேக் கூறினார். பின்பு விண்வெளி மையத்தில் இருப்பதுகுறித்து பிராட் பிட்டிடம் பேசிய நிக் ஹேக் பாதத்தைத் தரையில் ஊன்றி நடந்தே பல நாட்கள் ஆனதால், அதுஇல்லாததுபோல் உணருகிறேன் என்றார்.

2விஞ்ஞானிகளும்

தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 3அமெரிக்க விஞ்ஞானிகளுடன் ரஷ்யாவை சேர்ந்த 2விஞ்ஞானிகளும் இத்தாலியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் தங்கியருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Brad Pitt Quizzes NASA Astronaut About ISRO’s Chandrayaan 2: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X