Home
Scitech

நிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்! எதற்கு என்று தெரியுமா?

அமேசான்.காம் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் சந்திரனில் உள்ள அனைத்து நீர் பனிகட்டிலையும் அறுவடை செய்து ராக்கெட் ப்ராபெலன்ட்டாக பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார்.

நிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்!

நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை ஆராயச் சந்திரனை முக்கிய தளமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மற்றும் தென் துருவங்களில் நீர் பனிக்கட்டிகள்

வடக்கு மற்றும் தென் துருவங்களில் நீர் பனிக்கட்டிகள்

சந்திரனில் நீர் பனிக்கட்டிகள் ஏராளமாக உள்ளது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நீர் பனிக்கட்டிகள் பெரும்பாலும் சந்திரனின் குளிர்ந்த வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு அருகிலுள்ள பள்ளங்களின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

அப்பல்லோ திட்டத்தின் போது தெரியவராத உண்மை

அப்பல்லோ திட்டத்தின் போது தெரியவராத உண்மை

அமெரிக்கர்களைச் சந்திரனில் தரையிறக்கிய அப்பல்லோ திட்டத்திற்குப் பின்னர், நிலவு பற்றி நாம் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், சந்திரனில் உள்ள பள்ளங்களின் அடிப்பகுதியில் நீர் பனிக்கட்டி படிவுகள் உள்ளது என்பது தான். நிலவில் நீர் பனிக்கட்டிகள் இருப்பது முன்பே தெரிந்திருந்தால் தற்பொழுது அது நமது கைகளிலிருந்திருக்கும் என்று பெசோஸ் தெரிவித்தார்.

நிலவில் நீர் உள்ளதற்கான ஆதாரம்

நிலவில் நீர் உள்ளதற்கான ஆதாரம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் முதல் முறையாக நிலவில் நீர் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சந்திரனைச் சுற்றிவரும் இந்தியாவின், சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள நாசாவின் 'மூன் மினரலஜி மேப்பர்' கருவி தான் சந்திரனில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதை உறுதிப்படுத்தி, அதை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.

நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்ய போவதாக ஜெஃப் பெசோஸ்

நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்ய போவதாக ஜெஃப் பெசோஸ்

அதுமட்டுமின்றி மேலும் குறிப்பாக, சந்திரனின் வடக்கு மற்றும் தென் துருவங்களைச் சுற்றி உள்ளபள்ளங்களின் அடிப்பகுதியில் தான் நீர் பனிக்கட்டிகள் அதிகப்படியாக இருப்பதையும் கருவி கண்டுபிடித்திருந்தது. இந்த நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்து ராக்கெட் ப்ராபெலன்ட்டாக பயன்படுத்தப் போவதாக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்திருக்கிறார்.

நிலவில் எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன்கள்

நிலவில் எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன்கள்

நீர் பனிக்கட்டியில் உள்ள ஹைட்ரொஜென் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களை சோலார் பேனல்கள் கொண்ட எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன் அல்லது நூக்ளியர் ஜெனரேட்டரால் இயக்கப்படும் எலக்ட்ரிக் மின் நிலையங்கள் மூலம் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று ஜெஃப் பெசோஸ் தெரிவித்திருக்கிறார். இவ்வகை எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன்களை நிலவில் நிறுவ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

BE-7 திரவ ஹைட்ரஜன் என்ஜின்

BE-7 திரவ ஹைட்ரஜன் என்ஜின்

ப்ளூ மூன் லேண்டர், BE-7 திரவ ஹைட்ரஜன் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. ப்ளூ மூன் லேண்டர், திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. BE-7 என்பது புதிய ஹைட்ரோலாக்ஸ் இயந்திரமாகும், இவை பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பல்துறை திறன் கொண்டது என்பதும், இது 40 kN வேக உந்துதலை வழங்கக் கூடிய ராக்கெட் இயந்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ளூ மூன் லேண்டர்

ப்ளூ மூன் லேண்டர்

ப்ளூ மூன் லேண்டரில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், நிச்சயம் எதிர்காலத்தில் நிலவில் தளம் அமைக்கப்பட்டு, இந்த வாகனங்களுக்கு நிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகள் எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்பதனால் தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முதல் மனித நிலவு தளம் அமையும் இடம்

முதல் மனித நிலவு தளம் அமையும் இடம்

நீர் பனிக்கட்டிகள் அதிகம் உள்ள தென் துருவத்திற்கு அருகில் தான் தனது முதல் மனித நிலவு தளத்தை நாசா நிறுவப் போவதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எலன் மஸ்க்கை தொடர்ந்து அமேசான் நிறுவுனரும் நிலவில் கால் பதிக்க, தனதுமுயற்சிகளை மும்முரமாக நடத்தி வருகிறார்.

Best Mobiles in India

English summary
Blue Origin To Use Moon Ice Water As Rocket Fuel And Planning For Bulding Space Station On Moon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X