மார்ச் மாதத்தில் மீண்டுமொரு ப்ளூ-மூன் நிகழ்வு; என்ன தேதி? என்ன நேரம்.?
அதுவும் இந்த மார்ச் மாதத்திலேயே நிகழ்வுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. அது என்று.? எப்போது தோன்றும்.? யாரெல்லாம் பார்க்கலாம்.? எப்படி பார்க்கலாம்.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.
இந்த 2018-ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதியில் தோன்றிய மிகவும் அரிய ரெட்-ப்ளூ மூன் (சிவப்பு நீல நிலா) விண்வெளி நிகழ்விற்கு நம்மில் பெரும்பாலானோர்கள் சாட்சியானோம்.

அந்த நம்பமுடியாத சந்திர நிகழ்வை தொடர்ந்து அடுத்ததும் ஒரு ப்ளூ-மூன் நிகழ்வு ஏற்படவுள்ளதை நீங்கள் அறிவீர்களா.?
அதுவும் இந்த மார்ச் மாதத்திலேயே நிகழ்வுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. அது என்று.? எப்போது தோன்றும்.? யாரெல்லாம் பார்க்கலாம்.? எப்படி பார்க்கலாம்.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

இரண்டாவது அழகான சந்திர நிகழ்வு.!
இந்த 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது அழகான சந்திர நிகழ்வு அல்லது மிகவும் திகைப்பூட்டும் ஒரு விண்வெளி காட்சியானது வருகிற மார்ச் 31-ஆம் தேதி நிகழவுள்ளது.

சம்பந்தம் இருக்காது ஆனால்.?
பொதுவாக ப்ளூ மூன் என்பது ஒரு காலண்டர் மாதத்தில் நிகழும் இரண்டாவது முழு நிலவுக்கான பெயராகும். இந்த பெயரில் இடம்பெறும் நீல வண்ணத்திற்கும் நிலவிற்கும் மாதந்தோறும் சம்பந்தம் இருக்காது ஆனால் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

கடைசியாக 1999-ல் நடந்தது.!
ஆனால் இந்த 2018 ஆம் ஆண்டில் வாழும் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகளானோம். அதவாது இந்த 2018-ல் இரண்டு ப்ளூ-மூன் நிகழ்வு நிகழுமாம். இதுபோன்றே தொடர்ச்சியான நிகழ்வானது, கடைசியாக 1999-ல் நடந்தது. இந்த 2018-ஆம் ஆண்டிற்கு பின்னர் இதே நிகழ்வு அடுத்த 2037-ல் மீண்டும் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மார்ச் மாதத்தில் ப்ளூ மூன் எப்போது தோன்றும்.?
முன்னர் குறிப்பிட்டபடியே, அடுத்த ப்ளூ-மூன் ஆனது மார்ச், 31 ம் தேதி நிகழும்.சரியாக 1:37 மணியளவில் நீங்கள் அதை முழுமையாக பார்க்க முடியும். மாதத்தின் முதல் முழு நிலவந்து மார்ச், 2 ம் தேதி நடந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்படி அதை பார்க்க முடியும்.?
வானிலை நிலைமை தெளிவாக இருந்தால், நிலவு வானின் உயர்நிலைக்கு சென்று உட்கார்ந்து முழுமையாக காட்சிப்படும். எனினும், நீங்கள் ஒரு விரிவான பார்வையை விரும்பினால் ஒரு தொலைநோக்கி கொண்டு நிலவின் ஒளியும் இருளும் சந்திக்கும் எல்லை மீது கவனம் செலுத்தியும் காணலாம்.

அடுத்த பெரிய வானியல் நிகழ்வு எப்போது?
வருகிற ஏப்ரல் மாதத்தின் ஏப்ரல் 16 (திங்கள்) தொடங்கி ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமைக்கு) ஆகிய தேதிகளுக்கு இடையே லீரிட் விண்கல் மழைகளை (Lyrid meteor shower) அதிர்ஷ்டம் உள்ளவர்கள் பார்க்கலாம்.


பழமையான விண்கல் மழைகளில் ஒன்று.!
இன்னும் குறிப்பாக ஏப்ரல் 22 (வியாழன்) மற்றும் ஏப்ரல் 23 (வெள்ளிக்கிழமைக்கு) அதிகாலை பொழுதில் இந்த லீரிட் விண்கல் மழையின் உச்சநிலையை எதிர்பார்க்கலாம். லீரிட் மிகவும் பழமையான விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லிரா எனும் நட்சத்திரக் கூட்டத்தின் பெயரின் அடிப்படியில் இந்த விண்மீன் 'லீரீட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதன்முதலில் 1861-ல் கண்டுபிடிக்கப்பட்டது.!
சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை நிகழ்வு ஏற்படுகிறது. இது முதன்முதலில் 1861-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் விளக்கமாக கூற வேண்டுமெனில் சி/186 தாட்சர் எனும் வால்மீனின் குப்பைகள் தான் இந்த விண்கல் மழை பொழிவாகும்.

மணிக்கு 20 விண்கற்கள் உருவாகும்.!
ஒரு வண்ணமயமான விண்கல் மழையான இந்நிகழ்வில் பொதுவாக மணிக்கு 20 விண்கற்கள் உருவாகும். மேலும் பல சுவாரசியமான அறிவியல் தமிழ் அல்லது விண்வெளி சார்ந்த கட்டுரைகளை படிக்க தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications