2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

|

அக்டோபர் 31 ஆம் தேதி வானில் ப்ளூ மூன் இருக்கும் என நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்ச்பை தெரிவித்துள்ளார். ப்ளூ மூன் விளக்கம் மற்றும் அவை தெரியும் காலங்கள் குறித்து பார்க்கலாம்.

இரண்டாவது பௌர்ணமியை குறிக்கும் சொல்

இரண்டாவது பௌர்ணமியை குறிக்கும் சொல்

ப்ளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.

ப்ளூ மூன் அளவு

ப்ளூ மூன் அளவு

ப்ளூ மூன் அளவை பொறுத்தவரை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தெரிந்த சூப்பர் மூனை விட அளவில் சிறியதாக இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும்பட்சத்தில் அதை ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. இந்த அக்டோபரில் இரண்டு முழுநிலவுகள் இருக்கிறது.

நேரு கோளரங்கத்தின் இயக்குனர்

நேரு கோளரங்கத்தின் இயக்குனர்

இதுகுறித்து நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்ச்பை கூறுகையில், இந்த மாதம் முதல் பௌர்ணமி அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏற்பட்டது. இரண்டாவது பௌர்ணமி அக்டோபர் 31 ஆம் தேதி இரவு 8.19 மணிக்கு நடக்கும். அதேபோல் 30 நாட்களில் ஒரு ப்ளூ மூன் இருப்பது (அதாவது இரண்டு பௌர்ணமி) பொதுவான விஷயமல்ல என்ன தெரிவித்தார்.

30 நாட்களுக்குள் காணப்பட்ட ப்ளூமூன்

30 நாட்களுக்குள் காணப்பட்ட ப்ளூமூன்

கடைசியாக 30 நாட்களுக்குள் காணப்பட்ட ப்ளூமூன் 2007 ஜூன் 30 ஆம் தேதி ஆகும். அந்த மாதத்தில் 30 நாட்களுக்குள் இரண்டு ப்ளூ மூன்கள் இருந்தது. அதேபோல் அடுத்ததாக 30 நாட்களுக்குள் ப்ளூ மூன் என்பது செப்டம்பர் 30, 2050-ல் தான் காண முடியும் என பரஞ்ச்பை கூறினார்.

அமேசான் வேலை வாய்ப்பு: 1 லட்சம் பருவகால ஊழியர்கள் பணியமர்த்த திட்டம்!

31 நாட்களுக்குள் காணப்படும் ப்ளூ மூன்

31 நாட்களுக்குள் காணப்படும் ப்ளூ மூன்

கடைசியாக 31 நாட்களுக்குள் ப்ளூ மூன் காணப்பட்டது, 2018 ஜனவரி 31 மற்றும் இரண்வாதாக அதே வருடம் மார்ச் 31 ஆம் தேதி காணப்பட்டது எனவும் ஒரு சந்திர மாதம் 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகள் கொண்டது எனவும் குறிப்பிட்டார்.

ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி

ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி

ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி நிகழ அந்த மாதத்தின் முதல் இரண்டு தேதிகளில் முழு நிலவுகள் இருக்க வேண்டும் என பரஞ்ச்பை தெரிவித்தார். அதேபோல் ஒரு ஆண்டில் ஒரு ப்ளூமூன் ஏற்படும் போது அந்த காலண்டர் ஆண்டில் சராசரியான 12 முழு நிலவுகளுக்கு பதிலாக 13 முழு நிலவுகள் இருக்கும் என குறிப்பிட்டார்.

அக்டோபர் 31 ஆம் தேதி ப்ளூ மூன்

அக்டோபர் 31 ஆம் தேதி ப்ளூ மூன்

அக்டோபர் 31 ஆம் தேதி ப்ளூ மூன் எனப்படும் இரண்டாவது முழுநிலவு காணப்பட உள்ளது. பெரும்பாலான ப்ளூ மூன்கள் வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்திலேயே காணப்படுகின்றன. இதுவும் வேறு சமயத்தில் பார்க்கப்படும் நிலவும் பிரித்தறிய முடியாதவையாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த நிகழ்வாக 31 நாட்களுக்குள் தெரியும் இரண்டு முழுநிலவு நிகழ்வு 2023, ஆகஸ்ட் 31 ஆம் தேதி காணப்படும் என பரஞ்ச்பை கூறினார்.

source: indianexpress.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Blue Moon on October 31: Interpretation by Nehru Planetarium Director

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X