இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் (ரத்த சிவப்பு நிறத்தில்): எப்போது?
குறிப்பாக ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் காலை நேரத்தில் கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்வென்றால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது, அது எப்போது வரும் என்று சில அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 27-ம் தேதி அன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சூரியன் மற்றும் பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், பின்பு சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

1மணி நேரம்:
வரும் ஜூலை 27-ம் தேதி தோன்றவுள்ள சந்திர கிரகணம் சுமார் 1மணி நேரம் 43 நிமிடங்கள் வரை காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வு மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா:
இந்த சந்திர கிரகணமானது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வடஅமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரம்
குறிப்பாக ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் காலை நேரத்தில் கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்தில் இந்த நேரத்தில் கிரகணம் தெரியும் என்று கூறப்படுகிறது.

அறிவியல் அறிஞர்கள்:
மேலும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தது என்னவென்றால் ஜூலை 27-ம் தேதி அன்று சூரிய அஸ்தமன நேரத்திற்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில்,ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம்:
கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அன்று முழு சந்திர கிரகணம் நிகழ்வு ஏற்பட்டது, அந்த சந்திர கிரகணத்தின் போது super moon, blue moon ஆகிய நிகழ்வுகளும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இப்போது வரும் சந்திர கிரகணம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications