(வீடியோ)சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் கருந்துளை: அரிய நிகழ்வு!

|

பூமியில் இருந்து சுமார் 21.5 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் சூரியனை விட மிகப்பெரிய கோளை கருந்துளை விழுங்கும் அரிய நிகழ்வை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உலகிற்கு காண்பித்துள்ளனர்.

பிளாக் ஹோல் என்றழைக்கப்படும் கருந்துளை

பிளாக் ஹோல் என்றழைக்கப்படும் கருந்துளை

பால்வெளியில் இருக்கும் பிளாக் ஹோல் என்றழைக்கப்படும் கருந்துளை ஒன்று சூரியனை விட பெரிதான நட்சத்திரம் ஒன்றை விழுங்கும்படியான அரிய வானியல் நிகழ்வை விண்வெளி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

ஸ்பாகெட்டிபிகேஷன் என்றழைக்கப்படும் நிகழ்வு

ஸ்பாகெட்டிபிகேஷன் என்றழைக்கப்படும் நிகழ்வு

பூமியில் இருந்து சுமார் 21.5 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வை ஸ்பாகெட்டிபிகேஷன் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இதை ஈரோப்பியன் சவுத்தர்ன் அப்செர்வேட்டரியின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலமாக விஞ்ஞானிகள் இதை காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்

ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்திலிருந்து (European Southern Observatory) சக்திவாய்ந்த டெலஸ்கோப் பயன்படுத்தி, பூமியிலிருந்து 215 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் நடந்த அதிசிய நிகழ்வை படம் பிடித்த விஞ்ஞானிகள் உலகிற்கு காட்டியுள்ளனர்.

நட்சத்திரத்தை உறிஞ்சும் கருந்துளை

நட்சத்திரத்தை உறிஞ்சும் கருந்துளை

அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தை கருந்துளை ஒன்று உறிஞ்சும் இந்த காட்சி அறிவியல் புனைகதை போல் இருக்கிறது என ஆய்வின் முதன்மை ஆசிரியரான பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ராயல் வானியல் சங்கத்தின் ஆராய்ச்சியாளருமான மாட் நிக்கோல் கூறினார்.

ஜிமெயிலில் இதெல்லாம் பண்ணலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கருந்துளைகளின் ஈர்ப்பு விசை

கருந்துளைகளின் ஈர்ப்பு விசை

கருந்துளைகளின் ஈர்ப்பு விசை என்பது நாம் கணிக்க முடியாத அளவு இருக்கும். கருந்துளை அவற்றின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சிக்கிக் கொண்ட விண்வெளி பொருள்கள் அனைத்தையும் விழுங்கும்.

காட்சிகள் பிரகாசமாக இருக்கும்

காட்சிகள் பிரகாசமாக இருக்கும்

கருந்துளை நோக்கி உறிஞ்சப்படும் பொருட்கள் தீவிர வெப்பத்தால் சூடாகும். அப்போது அந்த காட்சிகள் பிரகாசமாக இருப்பதால் அவை பூமியில் இருந்து கண்டறியமுடியும். அதேபோல் ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு மிக அருகில் இருக்கும்போது அது கருந்துளையின் தனித்துவமான ஈர்ப்பு விசை காரணமாக உறிஞ்சி இழுக்கப்படுகிறது.

சக்தி வாயந்த தொலைநோக்கிகள்

அதிக சக்தி வாயந்த தொலைநோக்கிகள்(டெலஸ்கோப்) பயன்படுத்தி இந்த நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காட்சியாகியுள்ள நட்சத்திரம் சூரியனைப் போன்ற வெகு அமைப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த கருந்துளை அசுரன் என்று விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த கருந்துளை மில்லியன் மடங்கு மிகப்பெரியது என கூறப்படுகிறது.

100 மில்லியன் கருந்துளைகள்

100 மில்லியன் கருந்துளைகள்

அண்ட வெளியில் மட்டும் 100 மில்லியன் கருந்துளைகளுக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. கருந்துளை என்பது 1916 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருந்துளை என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை என்றாலும் 1971 ஆம் கருந்துளை உறுதிசெய்யப்பட்டு கண்டறியப்படுகிறது.

சக்தி வாய்ந்த டெலஸ்கோப்கள்

சக்தி வாய்ந்த டெலஸ்கோப்கள்

சூரியனை விட சில மடங்கு பெரிதாக இருக்கும் நட்சத்திரங்களும் நட்சத்திர கருந்துளையாக மாறக்கூடும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது இந்த காட்சிகளை சக்தி வாய்ந்த டெலஸ்கோப்கள் மூலம் கண்டறியப்பட்டு உலகிற்கு காட்டப்பட்டுள்ளது.

source: thedailystar.net

Most Read Articles
Best Mobiles in India

English summary
BlackHole Swallows a Star Bigger than the Sun

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X