பிளாக் ஹோல்களுக்கு இதயம் உண்டு, அவைகள் ஒரு பின் கதவுகள்..!?

|

கருந்துளையின் உள்ளே ஆழமான ஈர்ப்பியல் ஒருமைத்தன்மை என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது, அதாவது விண்வெளி நேரம் முடிவிலியை நோக்கி வளையும் ஒரு இடம், உடன் உட்புகுந்த எந்தவொரு விடயமும் வெளியேறாத சக்தி கொண்டவைகள் - பிளாக் ஹோல் (Black Hole) எனபப்டும் கருந்துளை அல்லது கருப்பு ஓட்டை.

அனுதினமும் மேற்கொள்ளப்படும் மிகவும் மர்மமான கருந்துளைகள் பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது சில விசித்திரமான முடிவுகளை வெளியிடுவதுண்டு. அப்படியான ஒரு பிளாக் ஹோல் மர்மம் ஒன்று பற்றிய தொகுப்பு தான் இது..!

பாதை :

பாதை :

ஒரு புதிய ஆய்வின்படி கருப்பு துளையின் மையத்தில் உள்ள பரவெளி அனுமான இணைப்பின் வழியாக ஒரு வழியாக அதாவது ஒரு பாதையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வேறு பக்கம் :

வேறு பக்கம் :

அதாவது கருந்துளைகள் ஆனது அளக்க முடியாத பிரபஞ்சத்தின் வேறு பக்கத்திற்கு நம்மை கொண்டு செல்லும் 'பின் கதவு'களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.

மீண்டும் :

மீண்டும் :

இந்த கோட்பாடின் மூலம், கருப்பு துளை வழியாக பயணிக்கும் எந்தவொரு பொருளும் மிக தீவிரமான அளவில் நீட்டிக்கப்பெறும் ஆனால் அது பிரபஞ்சத்தின் வேறு பகுதியில் வெளிப்படும்போது மீண்டும் தனது வழக்கமான அளவிற்கு திரும்பும்.

துகள் இயற்பியல் :

துகள் இயற்பியல் :

விண்வெளி நேரம் வடிவியல் கட்டமைப்பில் ஒருமை என்பது அளவில் குறைபாடு கொண்டது ( singularity as an imperfection in the geometric structure of space-time) என்ற ஒரு புதிய கருத்தை துகள் இயற்பியல் நிறுவனத்தின் இயற்பியலாளராகள் முன்மொழிந்துள்ளானர்.

அசாதாரணமான அணுகுமுறை :

அசாதாரணமான அணுகுமுறை :

இந்த யோசனையை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் அசாதாரணமான அணுகுமுறையை கையாண்டனர். கருப்பு துளையின் உள்ளே நடக்கும் நடவடிக்கைக்கு பொருத்தமான அளவிலான கிராபெனின் அடுக்கு படிகத்தை ஒத்த வடிவியல் கட்டமைப்புகளை உருவாக்கினர்.

இதயம் :

இதயம் :

அந்த புதிய வடிவகணிதங்கள் பகுப்பாய்வு மூலம், பரவெளி அனுமான இணைப்பை குறிக்கும் ஒரு சிறிய மையப் புள்ளியை, கோள மேற்பரப்பில் உள்ள கருமையான இதயம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கதவு வழியாக :

கதவு வழியாக :

இந்த ஆய்வில் முதலில், ஒருமை என்பது தீர்க்கப்பட்டது பின்பு கருப்பு துளையின் மையம் இதயப்பகுதி கண்டறியப்பட்டது,பரவெளி அனுமான இணைப்பின் மையத்தில் உள்ள அந்த கதவு வழியாக விண்வெளி நேர பயணத்தை தொடரலாம்.

அணுக்கரு :

அணுக்கரு :

இந்த சமன்பாடுகள் மூலம் கருந்துளை மையத்தில் அணுக்கருவை விட சிறிய அளவில் ஒரு பரவெளி அனுமான இணைப்பு இருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

உட்புறம் :

உட்புறம் :

அதே சமயம் சேமிக்கப்படும் கருந்துளையின் உட்புறம் சேமிக்கப்படும் பொருட்களின் அளவை பொறுத்து அந்த வழியானது பெரிதாகவும் செய்யலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நுழையும் வண்ணம் :

நுழையும் வண்ணம் :

உள்ளே புகும் எந்தவொரு விடயமும் மையத்தில் உள்ள பரவெளிக்குள் நுழையும் வண்ணம் மிகத்தீவிரமான அளவில் நீட்டிக்கப்படும், பின் மறுபுறம் வெளியே வரும் போது அது சுருக்கப்பட்டு இருக்கும்.

செயல்முறையில் ஒரு மனிதன் :

செயல்முறையில் ஒரு மனிதன் :

இந்த செயல்முறையில் ஒரு மனிதன் வாழ சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் கூட கருப்பு துளை உள்ளே சென்ற விடயம் இழக்கப்படும் என்று அர்த்தம் இல்லை, ஒரு வழியாக நுழைந்து வேறொரு வழியாக வேறு மாதிரியாக வெளியேறும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்னர்.

ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கோட்பாடு :

ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கோட்பாடு :

உடன் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கோட்பாடு குறிப்பிடுவதுபோல் பரவெளி அனுமான இணைப்பு உருவாக்க ஆற்றல் தேவை இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாதாரண பருப்பொருள் :

சாதாரண பருப்பொருள் :

இந்த கோட்பாடின் படி, பரவெளி அனுமான இணைப்பானது ஒரு மின் புலத்தை போன்ற சாதாரண பருப்பொருள் மற்றும் ஆற்றல் கொண்டது தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலகெங்கிலும் எரிமலைகள் அருகே யுஎஃப்ஓ காணப்படுவது இதனால் தான்..!

நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும் க்யூரியாசிட்டி ரோவர்..!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Black holes may be 'back doors' to other parts of the universe, researchers claim. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more