முதல் முறையாக இன்று மாலை கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்படும்.!
மனிதக்குலத்தின் விண்வெளி தேடலில் ஒரு முக்கிய சாதனையாக இன்று முதல் முறையாகக் கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்படவுள்ளது.
மனிதக்குலத்தின் விண்வெளி தேடலில் ஒரு முக்கிய சாதனையாக இன்று முதல் முறையாகக் கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்படவுள்ளது.

ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து கருந்துளை பற்றி நடத்திய ஆய்வில், முதல் முறையாக இரண்டு கருந்துளைகளின் புகைப்படங்களைப் படம் பிடித்துள்ளனர். இந்த கருந்துளைகளின் உண்மையான புகைப்படங்கள் இன்று மாலை 6:30 மணி அளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி இரண்டு கருந்துளைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் முதல் கருந்துளையான சாகிட்டாரிஸ் ஏ (Sagittarius A) சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இரண்டாவது கருந்துளை விர்கோ விண்மீன் மண்டலத்தில் மிகப்பெரிய நீளமான M87 கோள்களுக்கு மையத்தில் அமைத்துள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த இரண்டு கருந்துளைகளின் ஈர்ப்பு சக்திகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதாகவும், சூரியன் போல் உள்ள நட்சத்திரங்களை வெறும் 48 மணி நேரத்தில் தன்வசம் ஈர்த்து விழுங்கிவிடும் வல்லமை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருந்துளைகள் புகைப்படங்களை மலை 6:30 மணிக்கு வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








