பிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்: விண்வெளி ஆராய்சியாளர்கள் சாதனை.!
பார்க்க முடியாத ஒன்றை பார்துவிட்டோம் என்றும் பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம் என்றும் தெரிவித்தார்.
பிளாக் ஹோல் (கருந்துளை) முதல் புகைப்படம் எடுத்து ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது பிளாக் ஹோல் புகைப்படம்.

நம்மிடம் இருக்கும் தகவல்கள் வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரப் படங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது முதல் பிளாக் ஹோல் (கருந்துளை) முதல் புகைப்படம் எடுத்து ஆராய்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர்.

சுமார் 5.2 கோடி
சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் எம்87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது. இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது EHT குழு.

ஹெயினோஃபால்ஸ்
குறிப்பாக இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஹெயினோஃபால்ஸ் நாம் இப்போது பார்ப்பது நமது சூரிய குடும்பத்தைவிடப் பெரியது என்றும், சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு எடை உடையது என்றும், பின்பு இதைவிடப்
பெரிய பிளாக் ஹோல்லை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது என்றார்.

ஷெப்பர்ட் டோலேமேன்
மேலும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்டுப் பூரித்தார் இந்தத் திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன். அதில் பார்க்க முடியாத ஒன்றை பார்துவிட்டோம் என்றும் பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம் என்றும்
தெரிவித்தார்.

பெட்டாபைட்டுகள்
தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த புகைப்படம் பெட்டாபைட்டுகள் (petabytes) அளவில் இருந்தது. அது கிலோபைட்டுகளுக்கு குறைக்கப்பட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. மேலும் நடுவில் இருக்கும் பிளாக் ஹோலை
சுற்றி அடர்ந்த பிரகாசமான வாயு பார்க்கப்பட்டது.

செலவு
இந்த இந்த நுர்வு திட்டத்துக்கான செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26 மில்லியன் டாலர்களை National Science Foundation (NSF) அமைப்பு செலவழித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
குறிப்பாக ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு பெரிய பிளாக் ஹோல் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். இவற்றின் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால் இவற்றின் எல்லைக்குள் செல்லும்
ஒளி இல்லாத காரணத்தால் இவற்றை படம் படிக்கமுடியாமல் இருந்தனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். ஆனால் நேற்று தொழில்நுட்பத்தின் உதவியால் அது சாத்தியமாகியுள்ளது


Click it and Unblock the Notifications