700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

|

கருந்துளைகள் மிக நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிரான விஷயமாக இருந்து வருகின்றன. மேலும் ஒரு கருந்துளையின் நேரடிப் படங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு பிறகு, வானியலாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்திய முன்னேற்றங்களில் மிகப் பெரிய கருந்துளை விஞ்ஞானிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

இந்த மிகப்பெரிய கருந்துளையை மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட்-ஐ சேர்ந்த கியானஸ்ச் மெஹர்கன் மற்றும் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 700 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஹோல்ம் 15 ஏ என அழைக்கப்படும் ஒரு விண்மீன் கூட்டத்தின் மையத்தில் இந்த கருந்துளை அமைந்துள்ளது.

இதன் அளவை பொறுத்தவரை, முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளையின் அளவை காட்டிலும் இரு மடங்கு அளவைக் கொண்டுள்ளது மற்றும் இது சூரியனின் நிறையை காட்டிலும் 40 பில்லியன் மடங்கு ஆகும். மேலும் நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையை காட்டிலும் 10,000 மடங்கு நிறையை கொண்டுள்ளது.

700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

சில பெரிய தொலைநோக்கி வரிசை மூலம் கைப்பற்றப்பட்ட மூலம் தரவுகள் மற்றும் சிலி ஆய்வகத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளை இக்குழு பயன்படுத்தியது. இந்த தகவலைப் பயன்படுத்தி ஒப்பிட இயலாத தரவுகளுடன் ஹோல்ம் 15ஏ கட்டமைப்பை இக்குழுவால் உருவாக்க முடிந்தது. இது கேலக்ஸி உருவாக்கம் மற்றும் அதன் தெளிவான மையத்தை ஆராய உருவகப்படுத்துதலை இயக்க அனுமதித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை 790AU அளவிற்கு மிகப்பெரிய ஆரத்தை கொண்டுள்ளது. இந்த கருந்துளை சுற்றியுள்ள நட்சத்திரங்களை விழுங்கியிருக்கலாம் அல்லது அவற்றை தள்ளிவிட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

சமீபத்தில் கண்டறியப்பட்ட மற்ற கருந்துளைகள்

சமீபத்தில் ஜப்பானிய விஞ்ஞானிகள் டைசி சுனா மற்றும் நோரிடா காவனகா இருவரும் பால்வெளி அண்டத்தில் இரண்டு கருந்துளைகள் கண்டுபிடித்தனர். "நமது அண்டத்தில் உள்ள கருந்துளைகள் வெளியிடும் ரேடியோ அலைகள்"(Radio Emission from Accreting Isolated Black Holes in Our Galaxy) என்றழைக்கப்படும் இந்த ஆராய்ச்சியானது, 10^8 தனித்தனி கருந்துளைகள் (isolated black holes- IBHS) நமது அண்டத்தில் மறைந்துள்ளதை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Largest Ever Black Hole Discovered Around 700 Million Light-Years Away: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X