நாசா : 'என்னமா இப்படி பண்றீங்களே மா'?

By Meganathan
|

முதல் முறை நிலவில் கால் பதித்து விட்டுப் பல ஆண்டுகளாகச் சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா.

ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரக வாசம் துவங்கி அவர்கள் பயன்படுத்தும் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வரை பல்வேறு தகவல்களை நாசா மறைப்பதாக நீண்ட காலமாக சர்ச்சைகள் நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாசா நிலவில் விட்டு வந்த பொருள்கள் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவை எந்தளவு சர்ச்சைகளை கிளப்பும் என்பதைத் தாண்டி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது அவர்கள் விட்டு வந்திருக்கும் பொருள்கள்.

கொல்ஃப் பந்துகள்

கொல்ஃப் பந்துகள்

நிலவில் கால் பதித்த ஐந்தாவது மனிதர், வயது முதிர்ந்தவர் என்பதோடு நிலவில் கொல்ஃப் விளையாடிய முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அலான் ஷெப்பார்டு.

பொம்மை

பொம்மை

பெல்ஜியத்தை சேர்ந்த பால் வான் ஹொய்டான்க் என்பவர் வடிவமைத்த 3.3 இன்ச் அலுமினியம் சிலை அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் குழுவினரால் நிலவில் வைக்கப்பட்டது.

எரிமலை கல்

எரிமலை கல்

அப்போலோ 15 விண்வெளி வீரரான ஜேம்ஸ் இர்வின் சிறிய அளவு எரிமலை கல் ஒன்றை நிலவில் வைத்துள்ளார். இந்தக் கல் ஆரிகான் பகுதியின் அருகே எடுக்கப்பட்டதாகும். இதற்கான சாட்சியாக இதன் புகைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சான்று

சான்று

எரிமலை கல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலுமினி அசோசியேஷனின் சான்றிதழ் ஒன்றும் அங்கு வைக்கப்பட்டது. அந்த சான்றிதழில் "This is to certify that The University of Michigan Club of The Moon is a duly constituted unit of the Alumni Association and entitled to all the rights and privileges under the Association's Constitution." குறிப்பிடப்பட்டிருந்தது.

புகைப்படம்

புகைப்படம்

விண்வெளி வீரர் டியூக் தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை நிலவில் வைத்துள்ளார். இவர் நிலவில் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரையிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரைபடம்

வரைபடம்

ஆறு பிரபலமான கலைஞர்கள் வரைந்த ஓவியம் கொண்ட தட்டு ஒன்றினை அப்போலோ 12 விண்வெளி வீரர்கள் நிலவில் வைத்துள்ளனர். இவர்கள் 1969 ஆம் ஆண்டு நிலவில் கால் பதித்தனர்.

தகவல்

தகவல்

பூமியில் இருந்து நிலவு சென்றதை உறுதி செய்யும் தகவல் பட்டையம் ஒன்று நிலவில் வைக்கப்பட்டுள்ளது. முதல் முறை நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஸ் ஆல்ட்ரின் போன்றோர் இந்தப் பட்டையத்தை வைத்தனர்.

Best Mobiles in India

English summary
Bizarre Things That Have Been Left On the Moon Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X