பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

|

நாம் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த அற்புதமான பூமியில், மனிதர்களுக்கு முன்னாள் டைனோசர்கள் வாழ்ந்து வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால், எத்தனை கோடி டைனோசர்கள் இந்த பூமியில் வாழ்ந்தது என்ற கேள்வி சமீபத்தில் எழுப்பப்பட்டது. அதற்கு நம்ப முடியாதா அறிவியல் பூர்வமான பதிலை விஞ்ஞானிகள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் பில்லியன் கணக்கான டி.ரெக்ஸ் டைனோசர் இருந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராட்சஸன் டி.ரெக்ஸ் டைனோசர் பற்றி உங்களுக்கு தெரியும் தானே?

இராட்சஸன் டி.ரெக்ஸ் டைனோசர் பற்றி உங்களுக்கு தெரியும் தானே?

டி.ரெக்ஸ் டைனோசர் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது, ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் மிகவும் கொடூரமான இராட்சஸ டைனோசர் வகையாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு வகை டைனோசர் இனம் தான் டி.ரெக்ஸ் டைனோசர் இனமாகும். உண்மையில், பூமியில் வாழ்ந்த மிகவும் கொடூரமான உயிர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தை இந்த டி.ரெக்ஸ் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுக்குத் தலைவன் சிங்கம் என்பது போல, டைனோசர் காலத்தில் பூமியை ஆண்ட இராட்சஸன் தான் இந்த டி.ரெக்ஸ்.

டைரனோசொரஸ் ரெக்ஸ்சஸ் (Tyrannosaurus rexes)

டைரனோசொரஸ் ரெக்ஸ்சஸ் (Tyrannosaurus rexes)

டைரனோசொரஸ் ரெக்ஸ்சஸ் (Tyrannosaurus rexes) என்று அழைக்கப்படும் டி.ரெக்ஸ், பூமியில் சுற்றித் திரிந்து அவற்றின் கூர்மையான பற்களைக் கொண்டு சுவையான இரையை வேட்டையாடி, மற்ற டைனோசர் இனங்களை நடுங்க வைத்த ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். சுமார் 2.5 பில்லியன் டைனோசர்களின் உலகத்தை இப்போது கற்பனை செய்து பாருங்கள். 100 ஜுராசிக் பார்க் படத்தை ஒரே இடத்தில் பார்த்த அனுபவம் வந்து போகிறது தானே. நினைக்கவே கொஞ்சம் பதட்டமாகத் தான் இருக்கிறது.

பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

எத்தனை டைரனோசொரஸ் ரெக்ஸ்கள் வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்தன?

எத்தனை டைரனோசொரஸ் ரெக்ஸ்கள் வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்தன?

"கிரெட்டேசியஸ் காலத்தில் (Cretaceous period) எத்தனை டைரனோசொரஸ் ரெக்ஸ்கள் வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்தன?" என்ற கேள்விக்கு, யு.சி. பெர்க்லியில் உள்ள பழங்காலவியலாளர்கள் குழு இந்த கேள்விக்கான பதில்களைத் தோண்டியது. எதோ ஒரு காலத்தில் நிச்சயமாக சுமார் 20,000 வயதுவந்த டி.ரெக்ஸ்கள் பெரும்பாலும் இந்த வட அமெரிக்க நிலங்களில் சுற்றித் திரிந்திருக்க வேண்டும் என்பதைக் குழு கண்டுபிடித்தது. இரண்டையும்-இரண்டையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் இந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

2.5 பில்லியன் டி.ரெக்ஸ் டைனோசர்கள் உயிருடன் இருந்தன

2.5 பில்லியன் டி.ரெக்ஸ் டைனோசர்கள் உயிருடன் இருந்தன

பூமியில் இரண்டரை மில்லியன் ஆண்டுகளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் டி.ரெக்ஸ் டைனோசர்கள் உயிருடன் இருந்தன என்று குழு முடிவு செய்துள்ளது. விஞ்ஞானிகள் இந்த எண்களை இந்த வழியில் கணக்கிடுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், அவர்களின் முடிவு பரந்த அளவிலான புள்ளிவிவரங்களுடன் வருகிறது.

வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!

குழு டி.ரெக்ஸ் டைனோசர்களின் எண்களை எவ்வாறு கணக்கிட்டது?

குழு டி.ரெக்ஸ் டைனோசர்களின் எண்களை எவ்வாறு கணக்கிட்டது?

யு.சி. பெர்க்லியின் பேராசிரியரும், சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சார்லஸ் மார்ஷல் குறிப்பிட்டது போல, டி. ரெக்ஸ்களின் எண்ணிக்கை 140 மில்லியனிலிருந்து 42 பில்லியனுக்கு இடையில் மாறுபடும் என்று கூறியுள்ளார்.

குழு டி.ரெக்ஸ் டைனோசர்களின் எண்களை எவ்வாறு கணக்கிட்டது?
புள்ளிவிவரங்களின் மிகப்பெரிய மாறுபாட்டைக் குறைக்க மார்ஷலும் அவரது குழுவும் எண்களைக் கணினி உருவகப்படுத்துதல்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நம்ப முடியாத பெரிய மாறுபாடு எண்ணிக்கை

நம்ப முடியாத பெரிய மாறுபாடு எண்ணிக்கை

மார்ஷல் சுட்டிக்காட்டியபடி, "சுற்றுச்சூழல் வேறுபாடுகள் ஒரே உடலியல் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்ட விலங்குகளுக்கான எண்ணிக்கை தொகை அடர்த்திகளில் பெரிய மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. எங்கள் கணக்கீடுகள் உயிருள்ள விலங்குகளின் உடல் நிறை மற்றும் அவற்றின் இனவிருத்தி அடர்த்திக்கு இடையிலான இந்த உறவைப் பொறுத்தது. ஆனால், உறவின் நிச்சயமற்ற தன்மை இரண்டு ஆர்டர்களைப் பிரித்துப் பரவியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

அதிகரித்துக்கொண்டே இருக்கும் புதைபடிம எண்ணிக்கை

அதிகரித்துக்கொண்டே இருக்கும் புதைபடிம எண்ணிக்கை

அப்படிக் கணக்கிடப்பட்ட வகையில், பரந்த அளவிலான டி. ரெக்ஸ் டைனோசர்கள் பூமியில் சுற்றி திரிந்தது என்று அறிவியல் கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில், அணியின் சிறந்த யூகமாக மொத்தம் சுமார் 2.5 பில்லியன் டி.ரெக்ஸ் டைனோசர்கள் பூமியில் உயிர் வாழ்ந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நம்ப முடியாத அளவுக்கு இருந்தாலும் கூட, டி.ரெக்ஸ்கள் மற்றும் பிற டைனோசர்களைப் பற்றி மேலும் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், அதிக புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Billions Of T. Rexes On Earth Over The 2 5 Million Years Dinosaurs Lived On Our Planet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X