ஆப்பு வைக்கும் அறிவியல் ஆய்வுகள், தெரிந்தே செய்யப்படும் துரோகம்.!!

By Gizbot Bureau
|

தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படுவது தான் ஆய்வு ஆகும். இவை மக்களுக்கு நன்மையாகவும் அமையும், தீங்கையும் விளைவிக்கும். இது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பொருத்ததாகும்.

நன்மை விளைவிக்கும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகள் தீமையில் முடிந்த பல்வேறு எடுத்துக்காட்டு வரலாற்றில் இருக்கின்றது. பொதுவாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இது அதிகமாக நடந்திருக்கின்றது.

<strong>இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.!</strong>இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.!

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலகில் தினமும் நடத்தப்பட்டு வருவதை அறிவீர்களா.?

1

1

ஆப்பு #1 : இன்டர்ஸ்டெல்லார் டிராவல்

2

2

இன்டர்ஸ்டெல்லார் டிராவல் என்பது ஒளியாண்டுகளை கடந்து பயணம் மேற்கொள்வது ஆகும். அதாவது சூரிய குடும்பத்தை தாண்டி வேற்று கிரகங்களுக்கு பயணம் மேற்கொள்வது.

3

3

தற்சமயம் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் மூலம் இது நிச்சயம் சாத்தியம் இல்லை என்றாலும், 3107 ஆம் ஆண்டு வரை இன்டர்ஸ்டெல்லார் பயணம் மேற்கொள்வது நிச்சயம் சாத்தியமற்றது என கணக்கிடப்பட்டுள்ளது.

1

1

ஆப்பு #2 : புற்று நோய் தீர்வு

5

5

மனிதர்களை மரணிக்க செய்வதில் இதய நோய்களுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் புற்று நோய் இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் மொத்தம் 1,050 கோடி பேர் புற்று நோய் மூலம் பாதிக்கப்படலாம் என ஐநா கணித்திருக்கின்றது.

6

6

மக்கள் தொகை அதிகம் இருப்பதால் தற்சமயம் பூமியில் இருக்கும் குறுகிய வளங்களை கொண்டு புற்று நோயினை குணப்படுத்த எவ்வித முயற்சியையும் திறம்பட மேற்கொள்ள இயலாது என கூறப்படுகின்றது.

7

7

ஆப்பு #3 : டெலிபோர்டேஷன்

8

8

ஒரு இடத்தில் இருந்து கொண்டு நம் உடல் மற்றும் மனதினை வேறு இடத்திற்கு தகவல் உருவில் அனுப்பவது தான் டெலிபோர்டேஷன் ஆகும்.

9

9

டெலிபோர்டேஷன் செய்வதில் இருக்கும் சிக்கல் மன ரீதியிலானது ஆகும். இதை மேற்கொள்ளும் போது இடையில் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது, இது எப்படி சாத்தியமாகும் என பல்வேறு கேள்விகள் டெலிபோர்டேஷன் செய்வதன் சிக்கலை உணர்த்துகின்றது.

10

10

ஆப்பு #4 : விண்வெளி வாழ்க்கை

11

11

விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மனிதர்கள் உண்மையில் வாழ தகுந்த கிரகங்கள் பூமியை விட பல ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது மட்டுமே இன்று வரை கண்டறியப்பட்டுள்ளது.

12

12

பல ஆயிரம் ஒளியாண்டு தூரம் பயணம் மேற்கொள்வது என்பதே தற்சமயம் சிக்கலாக இருக்கின்றது. இந்நிலையில் அங்கு மனிதர்கள் உண்மையில் வாழ முடியுமா என்பதும் கிட்டத்தட்ட கேள்விகுறியான விடயம் தான்.

13

13

ஆப்பு #5 : ரோபோட்

14

14

இன்றைய தொழல்நுட்ப உலகில் ரோபோட் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. கிட்டத்தட்ட போர் களம் முதல், நமக்கு போரடிக்காமல் இருக்க பாட்டு பாடுவது முதற்கொண்டு செய்ய ரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

15

15

தொழில்நுட்ப பட்டறைகளில் ஏற்கனவே ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இன்று நாம் செய்யும் பணிகளில் சுமார் 50% பணிகளை ரோபோட்கள் செய்து முடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பலர் வேலைகளை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

16

16

ஆப்பு #6 : ரோபோட் போர்களம்

17

17

இன்று பல்வேறு நாடுகளும் போர் களங்களில் பல்வேறு பணிகளை செய்து முடிக்கும் திறன் கொண்ட ரோபோட்களை சோதனை செய்து வருகின்றன. இவை போர்களத்தில் மனித உயிர்களை காப்பாற்றும் நோக்கில் தான் மேற்கொள்ளப்படுகின்றன என கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் பேராபத்து நிறைந்துள்ளது மட்டுமே உண்மை.

18

18

ஒருவேலை எதிர்காலத்தில் ரோபோட்களை கொண்டு போர் செய்யும் நிலைமை ஏற்பட்டால் பல்வேறு அப்பாவி மக்கள் உயிர் இழக்க நேரிடும். இது இன்று நடப்பதை விட அதிகளவு உயிர்களை காவு வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

19

19

ஆப்பு #7 : தானியங்கி மகிழுந்துகள்

20

20

ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் திறன் கொண்ட மகிழுந்துகளை தான் தானியங்கி மகிழுந்து அதாவது டிரைவர்லெஸ் கார் என அழைக்கின்றோம். தற்சமயம் புதுமையாகவும், பயன்படுத்த ஆவலாகவும் இருக்கும் தானியங்கி மகிழுந்துகள் மனிதன் செய்யும் தவறுகளை நடக்காமல் பார்த்து கொள்ளும் என்கின்றனர் இக்காலத்து பொறியாளர்கள்.

21

21

இன்று தானியங்கி கார்களை தயாரிக்கும் பொறியாளர்கள் எத்தனை வித்தியாசமாகவும், பாதுகாப்புடனும் கணினிகளை கொண்டு ப்ரோகிராம் செய்தாலும், மனிதனை போன்று கன நொடியில் புதிய சிந்தனைகளை கணினிகளால் மேற்கொள்ள முடியாது என்பதே உண்மை. இந்த விடயத்தில் இவை பல்வேறு வழிகளில் மக்களுக்கு பாதகமாக அமையும்.

22

22

ஆப்பு #8 : செயற்கை விரிவாக்கம்

23

23

செயற்கை விரிவாக்கம் என்பது சைபர்நெடிக் இம்ப்ளான்ட் மற்றும் ஜெனிடிக் மாடிஃபிகேஷன் என இரு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் சைபர்நெடிக் இம்ப்ளான்ட் என்பது இன்றைய ஸ்மார்ட் கருவிகளை போன்றதாகும். ஜெனிடிக் மாடிஃபிகேஷன் என்பது நம் உடலில் செலுத்தப்படுவதாகும்.

24

24

இது போன்ற தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் அதிக பணம் செலவழிக்க செய்யக்கூடியதாகவே இருக்கும். மேலும் இவை பயன்பாட்டிற்கு வரும் போது நம்மிடையே மாற்றங்கள் ஏற்படுவதோடு இவை நம்மை ஒரு வித இயந்திரம் போல் உணர செய்யும்.

25

25

ஆப்பு #9 : வேற்றுகிரக வாச தேடல்

26

26

வேற்றுகிரக வாச தேடல் அதாவது ஏலியன் தேடல் தான். சிலர் ஏலியன் இருக்கின்றது என்றும் இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்த மர்மம் மற்றும் குழப்பம் மட்டும் நீடித்து கொண்டே தான் இருக்கின்றது.

27

27

ஒரு வேலை ஏலியன்கள் இருப்பது உண்மை என தெரியவந்தால், இரு விடயங்கள் நிச்சயம் நடக்கும். ஒன்று ஏலியன்கள் நம்மை தாக்கும், மற்றொன்று நாம் அதனினை தாக்குவது. இதில் எது நடந்தாலும் ஆப்பு நமக்கே.

Best Mobiles in India

English summary
Big Problems With Scientific Breakthroughs Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X