31 ஒளியாண்டுக்கு அப்பால் 3 புதிய கோள் கண்டுபிடித்த நாசா சேட்லைட்.!
வானில் தினமும் புதிய புதிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறன. இந்நிலையில் வானில் நடக்கும் மர்மங்களையும், விளக்க முடியா புதிர்களையும் கோள்களின் நிலைகளையும் பல்வேறு நாடுகளும் பல மில்லியன் டாலர்களை கொட்டி
வானில் தினமும் புதிய புதிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறன. இந்நிலையில் வானில் நடக்கும் மர்மங்களையும், விளக்க முடியா புதிர்களையும் கோள்களின் நிலைகளையும் பல்வேறு நாடுகளும் பல மில்லியன் டாலர்களை கொட்டி ஆய்வு செய்து வருகின்றன.

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை அறிய பல்வேறு நாடுகளும் போட்டி சேட்லை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் நாசா ஆய்வு மையமும் அனுப்பி இருந்த டெஸ் செயற்கைகோள் 3 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில், 31 ஒளியாண்டுக்கும் தொலைவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு நாசா செயற்கைகோள் கண்டுபிடித்து காட்டியுள்ளது. விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

ஒளியாண்டு என்றால் என்ன?
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு.
ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

டெஸ் கடந்தாண்டு ஏவப்பட்டது:
சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களைக் கண்டறியவதற்காக டெஸ் எனப்படும் செயற்கோளை கடந்தாண்டு அனுப்பியது.

10 வெளிக்கோள் கண்டுபிடிப்பு:
இதுவரை இந்த செயற்கைகோள் 10 வெளிக்கோள்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது பதினோறாவதாக 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு கிரகதத்தை டெஸ் கண்டுபிடித்துள்ளது.

சூரியனை விட 70% பெரியது:
Hd 21749c எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியைப் போல் 89 விழுக்காடு பெரியதாகவும், இது சுற்றி வரும் நட்சத்திரம் சூரியனைப் போல் 70 விழுக்காடு பெரியதாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை:
மேலும் மேற்பரப்பு வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோளை பொது மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

டெஸ் செயற்கைகோள் ஆய்வு:
சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOI 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.

3 புதிய கோள்களை கண்டுபிடிப்பு:
இதுவரை 21 புதிய கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், 3 புதிய கோள்களை தற்போது டெஸ் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதில் ஒன்று 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அதற்கு GJ 357d என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமி போன்ற உருவாம்:
பூமியை போன்ற உருவத்தை உடைய அந்தக் கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. அந்த கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications