ஏன் தான் கண்டுபிடிச்சோமோ.? மண்டைய குழப்பும் மர்மங்கள்.!
"பழம் தின்னு கொட்டைப்போட்ட" விண்வெளி விஞ்ஞானிகளுக்கே சிம்ம சொப்பனமாய் விளங்கும் 'விண்வெளி மர்மங்கள்' பல உள்ளன. அவைகளில் சில உங்களையும் குழப்ப காத்திருக்கின்றன.
சில விடயங்களை அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவதை விட, அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறலாம். அப்படியாக நாம் எவ்வளவு முயன்றும் அறிந்துகொள்ள இயலாத பல மர்மங்கள் நம்மை சுற்றி நிறைய உள்ளன. பல சமயங்களில் அதுவொரு விளங்க முடியாத புதிர் என்பதைக்கூட அறிந்துகொள்ளாத நிலைப்பாட்டில் தான் உலாவிக்கொண்டிருக்கிறோம்.
அவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சியானது பூமியையே சுருக்கும் அளவு வளர்ந்தாலும் கூட, பூமியை சேர்த்து தன்னுள் உள்ளடக்கி வைத்திருக்கும் இந்த அண்டம் சார்ந்த பல மர்மங்களை இன்னும் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.
அப்படியாக "பழம் தின்னு கொட்டைப்போட்ட" விண்வெளி விஞ்ஞானிகளுக்கே சிம்ம சொப்பனமாய் விளங்கும் 'விண்வெளி மர்மங்கள்' பல உள்ளன. அவைகளில் சில உங்களையும் குழப்ப காத்திருக்கின்றன.

மர்மம் 01
ஸீரஸ் (Ceres) கிரக்தில் உள்ள பிரகாசமான மர்ம புள்ளிகள்.
மிகவும் சிறிய கிரங்களை ட்வார்ஃப் பிளானட் (dwarf planet) என்பார்கள், அதாவது குள்ளமான கிரகம். ஸீரஸ் கிரகம் ஒரு 'ட்வார்ஃப் பிளானட்' என்பதும், செவ்வாய் மற்றும் வியாழன் கிரக சுற்று வட்டப்பாதையில் இது தான் மிகவும் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸீரஸ் கிரக்தில் உள்ள பிரகாசமான புள்ளிகள் சார்ந்த விளக்கம் ஏதுமில்லை. எதனால் இந்த கிரகத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பிரகாசிக்கிறது.? அதன் பின்னணி என்ன.? என்பது இன்றுவரை மர்மம் தான்.

மர்மம் 02
மிகப்பெரிய மோதல்களை சந்தித்தது போல காட்சி அளிக்கும் மெர்க்குரி கிரகத்தின் சரிவுகள் (Mercury scarps).
நாசாவின் மெசேன்ஜர் (MESSENGER) விண்கலம் பல ஆண்டுகளாக மெர்க்குரி கிரகத்தை சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும்கூட 1000 கிலோ மீட்டர்கள் மற்றும் 3000 மீட்டர் அளவு உயரம் கொண்டுள்ள இந்த மெர்க்குரி சரிவுகள் பற்றிய சரியான விளக்கம் இதுவரை கிடையாது.

மர்மம் 03
செவ்வாய் கிரகத்தின் மர்மமான மேகம் போன்ற மண்டலங்கள்.
மார்ச் 2012-ஆம் ஆண்டு தெளிவாக பார்க்கப்பட முடியாத வண்ணம் தோன்றிய இந்த மேகம் போன்ற மண்டலமானது, ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு மிகவும் விளக்கமாக காட்சியளித்தது. பின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றை ஆராய்ந்து பார்த்த பின்தான், 1997-ஆம் ஆண்டிலும் ஒருமுறை இது போன்ற மண்டலம் தோன்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இந்த மர்மமான செவ்வாய் கிரக மண்டலம் சார்ந்த தெளிவான காரணம் எதுவுமில்லை.

மர்மம் 04
பிப்ரவரி, 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்து, சுமார் 1200-க்கும் மேற்பட்டோர்களை காயப்படுத்திய மர்மமான எரி நட்சத்திரம். 20 மீட்டர் அகலம் கொண்டிருந்த அந்த எரி நட்சத்திரத்தின் பிறப்பிடம் எதுவென்று இன்றுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

மர்மம் 05
மிகவும் அசாத்தியமான, ப்ளூட்டோவின் சிறிய சூரிய குடும்பம்.
ப்ளூட்டோ கிரகம் மற்றும் அதன் 5 நிலவுகளும் சேர்ந்து ஒரு சிறிய சூரிய குடும்பம் போல காட்சி அளிக்கிறது. இது சாத்தியமாக காரணமாக திகழும் ப்ளூட்டோவின் நிலவுகள் எப்படி உருவானது என்பதில் எந்த விதமான தெளிவுமே கிடையாது.

மர்மம் 06
நமது சூரியகுடும்பத்தின் கடைக்கோடி புள்ளியில் உள்ள ப்ளூட்டோ கிரகத்திற்கு பின்னால் இருப்பதாக நம்பப்படும் ஒரு கிரகம் தான் - பிளானட் எக்ஸ் (Planet X).
பிளானட் எக்ஸ் கிரகமானது நாம் வாழும் சூரிய குடும்பத்தின் ஒரு அங்கமெனவே கருதப்படுகிறது மற்றும் பூமியை விட பெரிய அளவில் இருக்கக்கூடிய பிளானட் எக்ஸ், பிளானட் வ்வைய் (Planet Y) என ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ப்ளூட்டோவிற்கு பின்னால் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரங்கள் இல்லை.

மர்மம் 07
விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட மர்மமான சப்தங்கள். இதுவரை விண்வெளியில் பதிவு செய்யப்பட்டுள்ள பல வைகையான சப்தங்களில், குறிப்பிடத்தக்க 5 சப்தங்கள் மிகவும் மர்மமானவைகளாக திகழ்கிறது. (பின் குறிப்பு : கட்டுரையின் முடிவில் இந்த ஐந்து மர்மமான சப்தங்கள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

மர்மமான சப்தம் 01
ஏப்ரல் 2002-ஆம் ஆண்டு நாசாவின் கஸ்ஸினி (Cassini) விண்கலம் இதை பதிவு செய்யப்பட்ட சாட்டர்ன் கிரகத்தின் ரேடியோ கதிர் உமிழ்வு சப்தம் (Radio emissions from Saturn's poles).

மர்மமான சப்தம் 02
சூரிய வெடிப்பு சப்தம் (Eruption on the Sun) - 2012-ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 (Voyager I) விண்கலம் இதை பதிவு செய்தது.

மர்மமான சப்தம் 03
காந்த சக்தி அலைவு சப்தம் (Oscillations in the magnetic field ) - வால் நட்சத்திரமான 67பி (Comet 67P)-யின் காந்த சக்தி அலைவில் இருந்து பதிவு செய்யப்பட்ட சைலோபோன் இசை போன்ற சப்தம்.

மர்மமான சப்தம் 04
ஜுப்பிட்டர் மின்னல்கள் சப்தம் - நாசாவின் வாயேஜர் (Voyager) விண்கலம் பதிவு செய்த ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்படும் பயங்கரமான மின்னல்களின் சப்தம்.

மர்மமான சப்தம் 05
பிளாக் ஹோல் உட்கொள்ளும் சப்தம் (feeding black hole) - மனித நாடித்துடிப்பை போன்றே மேலும் கீழும் ஏறி இறங்கும்படியாக இருக்கும் பிளாக் ஹோல் சப்தம்.
ஒலி வீடியோ
மிகவும் மர்மமான 5 சப்தங்களின் தொகுப்பு.!


Click it and Unblock the Notifications