செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!

|

ஏற்கனவே எக்கச்சக்கமான மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ள செவ்வாய் (Mars) கிரகத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் சிக்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்தால் தான், நாங்கள் எதைப்பற்றி பேசுகிறோம் என்பது உங்களுக்கு புரியும்!

செவ்வாய் கிரகத்தில் கரடி உருவம்.. NASA-வின் புகைப்படத்தால் பரபரப்பு!

பெண் நிற்பது போன்ற உருவம், பாறைக்குள் நண்டு ஒளிந்திருப்பது போன்ற உருவம், மலையில் குடையப்பட்ட கதவு என செவ்வாய் கிரகம் தொடர்பாக வெளியான பல விசித்திரமான மற்றும் மர்மமான புகைப்படங்களின் பட்டியலில் மேலுமொரு புகைப்படம் (Photo) இணைந்துள்ளது!

அதென்ன புகைப்படம்?

எம்ஆர்ஓ (MRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter), செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கரடி (Bear) போன்ற முக அமைப்பை கொண்ட ஒரு பகுதியை புகைப்படமாக பதிவு செய்துள்ளது!

செவ்வாய் கிரகத்தில் கரடி உருவம்.. NASA-வின் புகைப்படத்தால் பரபரப்பு!

இந்த புகைப்படம், மேற்குறிப்பிட்ட மார்ஸ் விண்கலத்தில் உள்ள ஹை ரெசல்யூஷன் இமேஜிங் சயின்ஸ் எக்ஸ்ப்ரிமென்ட் (High Resolution Imaging Science Experiment - HiRISE) கேமராவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இது ஒரு மங்கலான அல்லது கண்களை குழப்பும் ஒரு புகைப்படம் அல்ல!

மக்கள் மட்டுமல்ல.. விஞ்ஞானிகள் மத்தியிலும் பரபரப்பு!

உற்றுக்நோக்க வேண்டிய அவசியமே இல்லாமல், மேலோட்டமாக பார்த்தாலே தெரியும் இந்த கரடி உருவமானது, பொது மக்கள் மத்தியில் மட்டுமின்றி விண்வெளி ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியிலும் கூட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கரடி உருவம்.. NASA-வின் புகைப்படத்தால் பரபரப்பு!

ஏனெனில் முன்னரே குறிப்பிட்டபடி, இது செவ்வாய் கிரகத்தின் சாத்தியமான கட்டமைப்பை (Potential Martian Structure) வெளிப்படுத்தும் மிகவும் தெளிவான புகைப்படங்களில் ஒன்றாகும்!

45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல.. NASA செய்யும் விபரீதமான காரியம்!45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல.. NASA செய்யும் விபரீதமான காரியம்!

இந்த கரடியின் மூக்கு.. ஒரு சின்ன பாறை அல்ல!

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் தெரியும் கரடியின் மூக்கு பகுதியை ஒரு சிறிய பாறை என்றோ அல்லது ஒரு சிறிய கல் என்றே நினைத்துக்கொள்ள வேண்டாம்.

செவ்வாய் கிரகத்தில் கரடி உருவம்.. NASA-வின் புகைப்படத்தால் பரபரப்பு!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அது ஒரு எரிமலையாக இருக்கலாம் அல்லது மண் துவாரமாக (Mud vent) இருக்கலாம். மேலும் அதை சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பாக (Lava) அல்லது மண் சரிவாக (Mud flows) இருக்கலாம்.

இருப்பினும் கரடி முகம் போன்ற இந்த கட்டமைப்பை உண்மையில் உருவாக்கியது எது? இது எப்படி உருவானது என்பது பற்றி எந்த தெளிவும் இல்லை. அதை கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!

இது ஏலியன்களின் வேலையாக இருக்குமா?

ஒவ்வொரு முறையும், செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் ஒரு விசித்திரமான விஷயம் சிக்கும் போது, ஏலியன் (Aliens) தொடர்பான அதாவது வேற்றுகிரக வாசிகள் (Extra-terrestrials) தொடர்பான கேள்விகள் மேலோங்குவது மிகவும் சகஜம்.

செவ்வாய் கிரகத்தில் கரடி உருவம்.. NASA-வின் புகைப்படத்தால் பரபரப்பு!

அப்படியாக இம்முறையும் கூட சில கோட்பாடுகள் (Theories) மற்றும் கட்டுக்கதைகள் உருவாக்கப்படலாம்.

அதாவது இந்த கரடி முகம் (Bear Like Face) ஏலியன்களால் உருவாக்கட்டு இருக்கலாம், இது மனிதர்களுக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லது நம்மை தொடர்பு கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என பல வகையான யூகங்கள் கிளம்பும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதேபோல அவைகள் எல்லாமே ஆதாரமற்ற கற்பனைகளாக மட்டுமே இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

Photo Courtesy: NASA / Wikipedia

Best Mobiles in India

English summary
Bear on Mars NASA Orbiter Captured The Photo Of A Bear Like Face Structure On The Martian Surface

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X