எலான் மஸ்க்கை தூக்கி சாப்பிட்ட இஸ்ரோ; ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.!

  காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் சக்தியான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முனைப்பின்கீழ், மின்-வாகன திட்டமொன்றில் (e-vehicle project) உஇந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்துள்ளது

  எலான் மஸ்க்கை தூக்கி சாப்பிட்ட இஸ்ரோ; ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.!

  இதன் விளைவாக மிகவும் மலிவான விலையில் ஸ்பேஸ் பேட்டரிகள் உருவாக்கம் பெறவுள்ளது. அத்தோடு நின்று விடாமல், செயற்கைகோள்களுக்காக மற்றும் ராக்கெட்டுகளுக்காக உருவாக்கம் பெற்ற ஸ்பேஸ் பேட்டரிகளானது நாட்டின் இ-வாகனங்களையும் (Electric Vehicles) சக்தியூட்டவுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆண்டுக்கு 10,000 ஸ்பேஸ் பேட்டரிகள்.!

  அதனை உறுதிசெய்யும் வண்ணம், விண்வெளித் துறையின் அவுட்சோர்ஸிங் ஊக்குவிப்பை மேம்படுத்தும் இந்த திட்டத்தில், இஸ்ரோ - பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 10,000 ஸ்பேஸ் பேட்டரிகளை தயாரிக்கவுள்ளது.

  ஒரு ராக்கெட்டில், 500 முதல் 700 ஸ்பேஸ் பேட்டரிகள்.!

  ஜிஎஸ்எல்வி (GSLV) அல்லது பிஎஸ்எல்வி (PSLV) போன்ற ஒரு ராக்கெட்டில், 500 முதல் 700 ஸ்பேஸ் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே பேட்டரிகள் தான் செயற்கைக்கோள்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

  இஸ்ரோவின் மிகப்பெரிய ராக்கெட் மற்றும் சாட்டிலைட்டில் கூட.!

  இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் ஏவப்பட்ட இஸ்ரோவின் மிகப்பெரிய ராக்கெட் ஆன ஜிஸ்எல்வி மார்க்-3 மற்றும் மிகபெரிய எடை கொண்ட உள்நாட்டு செயற்கைக்கோளான ஜிசாட்-19 ஆகியவற்றில் கூட இந்த பேட்டரிகள் தான் பயன்படுத்தப்பட்டன.

  முதலில் சீனா-ஜப்பானிற்கு ஆப்பு.!

  இஸ்ரோவின் இந்த நடவடிக்கை மூலம் ஜப்பான் அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லி-அயன் பேட்டரிகளின் வரத்து குறையும். ஏனெனில் நாட்டில் வணிக ரீதியாக, லி-அயன் பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  நான்கு வகை பேட்டரிகள்.!

  இஸ்ரோ, அதன் விண்வெளி பயன்பாட்டிற்கான நான்கு வகை பேட்டரிகளை உருவாக்கியுள்ளது - 1.5ஏஎச், 5ஏஎச், 50ஏஎச் மற்றும் 100ஏஎச். இந்த நான்கு பேட்டரிகளில் இ-ஸ்கூட்டர் மற்றும் ஒரு இ-கார் உருவாக்கும் பணிகளுக்கு 50ஏஎச் மற்றும் 100ஏஎச் செல்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

  செயல்திறன் திருப்தியாக இருந்ததையடுத்து.!

  அதாவது இஸ்ரோ, ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவிற்கு (ஒரு தொழில்துறை ஆட்டோமொபைல் ஆராய்ச்சி சங்கம்) அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து உருவாக்கம் பெற்ற முன்மாதிரிகளின் செயல்திறன் திருப்தியாக இருந்ததையடுத்து, ஸ்பேஸ் பேட்டரிகள் தொழிற்துறைக்குள் நுழைகிறது.

  2 மணி நேர சார்ஜ்ஜில் 98 கிமீ.!

  கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மூலம், 50ஏஎச் பேட்டரி கொண்டு உருவாக்கம் பெற்ற இரு சக்கர வாகனமொன்று, வெறும் 2 மணிநேர சார்ஜில் சுமார் 40-50 கிமீ வேகத்தில் 98 கிமீ வரை இயங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

  நாசாவிற்கு பாடம், எலான் மஸ்க்கிற்கு சரியான போட்டி.!

  ராக்கெட் தொழில்நுட்ப்பதில் பலவகையான புதுமையை புகுத்தி வரும் எலான் மஸ்க்கின் சிந்தனைகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவே 100% முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாட்டில், அதேமாதிரியான ஸ்பேஸ் + எலெக்ட்ரானிக் வாகன தயாரிப்பில் இஸ்ரோவின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பது - நாசாவிற்கான ஒரு பாடமாகவும், எலான் மஸ்க்கிற்கான சரியான போட்டியாவும் பார்க்கப்படுகிறது.

  How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
  டெஸ்லா காரோடு சேர்த்து விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட மர்ம பொருள்.!

  டெஸ்லா காரோடு சேர்த்து விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட மர்ம பொருள்.!

  கடந்த மாதம், உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஆன ஃபால்கோன் ஹெவி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதும், அது எலான் மஸ்க்கின் கனவு காரான டெஸ்லா ரோட்ஸ்டரை சுமந்துஸ் சென்று விண்ணில் விட்டதென்பதும் நாம் நன்கு அறிவோம். ஆனால், நம்மில் பலர் அறியாத ஓரு விடயம் உள்ளது. அது என்னவெனில் - ஃபால்கோன் ஹெவி ராக்கெட் ஆனது டெஸ்லா காரை மட்டும் விண்ணிற்கு கொண்டு செல்லவில்லை. உடன் ஒரு பொருளையும் கொண்டு சென்றுள்ளது. அது என்னது.?

  டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர்

  முதலில் விண்ணிற்குள் செலுத்தபட்ட டெஸ்லா காரின் டிரைவர் செட்டில் அமர்ந்திருக்கும் 'டம்மி' விண்வெளி வீரரை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன், அந்த டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர். இந்த பெயரானது டேவிட் போவியின் பாடல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும்.

  பெரிய காருக்குள் ஒரு குட்டி கார் + குட்டி டிரைவர்.!

  கூடுதலாக, காரின் டாஷ்போர்டில் டெஸ்லா காரை சித்தரிக்கும் ஒரு சிறிய சிவப்பு மாடல் கார் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியம் என்னவெனில் அந்த குட்டி காருக்குள் ஒரு குட்டி டம்மி கார் டிரைவர் இருப்பார். அதாவது ஒரு மெட்டா ஜோக் போல.!

  பயப்பட வேண்டாம்.!

  நீங்கள் இன்னும் கழுகுக் கண்கள் கொண்டு பார்த்தால், காரின் டாஷ்போர்ட்டில் ஒரு சுவரொட்டையும் மஸ்க் இணைத்துள்ளதை காண்பீர்கள். அதுவொரு எளிமையான வாசகமகும் - "டோன்ட் பேனிக்" (Don't Panic) அதாவது பயப்பட வேண்டாம் என்று பொருள்.

  எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம்.!

  "டோன்ட் பேனிக்" (Don't Panic) என்கிற வாசகம் புகழ்பெற்ற எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ்-ன் நகைச்சுவை அறிவியல் புனைகதையான 'தி ஹட்ச்ஹிக்கர்ஸ் கைட் டூ தி கேலக்ஸி'யின் பிரதான கதாபாத்திரம் எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  அந்த மர்ம பொருள் என்ன.?

  அதெல்லாம் சரி, டெஸ்லா காருடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பட்ட அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியுமா.?அது ஒரு டிஜிட்டல் "புத்தகமாகும்". ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் காரவின் க்ளோவ் கம்பார்ட்மெண்டில் சிறிய ஆப்டிகல் டிஸ்க்கையும் வைத்திருந்துள்ளது. அந்த டிஸ்க்குகள் ஐசக் அசிமோவின் 'ஃபவுண்டேஷன்' தொடரின் முழுமையான பகுதியும் என்கோட்ட் செய்யப்பட்டுள்ளது.

  கற்பனையான கலைக்களஞ்சிம்

  20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ஆன அசிமோவ், அவரது விஞ்ஞான புனைகதை படைப்புகள், குறிப்பாக ஒரு விண்மீன்-பரவிய நாகரிகம் மூலம் திரட்டப்பட்ட அனைத்து அறிவையும் கொண்ட ஒரு கற்பனையான கலைக்களஞ்சியமான 'என்சைக்ளோபீடியா கேலக்டிகா' மிகவும் போற்றப்படுமொரு படைப்பாகும்.

  அதுவொரு "ஆர்க்" ஆகும்.!

  உடனே அதுவொரு ஆப்டிகல் டிஸ்க் மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதுவொரு "ஆர்க்" ஆகும். அதாவது குவார்ட்ஸ் சிலிக்கா கண்ணாடியில் பெண்டெக்டிகோட் லேசர் கொண்டு 20 நானோமீட்டர் அளவில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆர்க் ஆகும்.

  இது ஏலியன்களுக்கான தூதா.?

  தொழில்நுட்ப வழியில் கூறவேண்டுமெனில் இது 360 டிபி அளவிலான தத்துவார்த்த திறனைக் கொண்டுள்ளது. மேலும் 14 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் வரை இதனுள் இருக்கும் தரவு சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இது ஏலியன்களுக்கான தூதா.? என்று கேட்டால், அதற்கு பதில் கிடையாது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Batteries That ISRO Developed For Satellites Will Soon Power Electric Vehicles In India. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more