கூடும் இந்திய பலம் : 50-70 கிமீ வரை பாய்ந்து பறந்தடிக்கும் பராக்-8..!
ஒரு நாட்டிற்கு ஜனநாயகம், அமைதி என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவில் அந்த நாட்டின் பாதுகாப்பும், ஆயுத பலமும் முக்கியதத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் பிற உலக நாடுகளும் அண்டை நாடுகளும் அமைதியை வளர்ப்பதை விட ஆயுதங்களை தான் அதிகம் வளர்கிறது.
இதுபோன்ற உலக அரசியல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவைகளை மனதிற்க்கொண்டு ஆயுத வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் இந்தியா சமீபத்தில் இஸ்ரேல் உடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கான பராக்-8 ஏவுகணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது..!

மேற்பரப்பு ஏவுகணை :
நீண்ட அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணை (எல்ஆர்-சாம்) ஆனது இந்திய கடற்படைக்காகவும், நடுத்தர அளவிலான மேற்பரப்பு ஏவுகணை (எம்ஆர்-சாம் )ஆனது இந்திய விமானப்படைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிரி வான்வழி :
இந்த ஏவுகணை அமைப்பானது 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமானம் அல்லது எதிர் கப்பலில் இருந்து தாக்க உள்வரும் எதிரி வான்வழி ஏவுகணையை கண்டறியும் திறன் படைத்தது.

50 - 70 கிலோமீட்டர் :
உடன் 50 - 70 கிலோமீட்டர் தொலைவு வரம்பில் உள்ள இலக்குகளை அடையும் சக்தி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமான பாதுகாப்பு :
இந்த அமைப்பு மூலம் விமான பாதுகாப்பு திறனை வழங்கும் இந்திய ராணுவத்தின் சொத்துக்களின் மதிப்பு பெருகும் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி :
இந்திய விமானப்படைக்கான மீடியம் ரேன்ஞ் ஏவுகணை திட்டத்திற்கு மட்டுமே ரூ10075.68 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் :
இந்த ஏவுகணை திட்ட ஒப்பந்தமானது கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தானது.

மீடியம் ரேன்ஞ் சோதனை :
இதன் ஆரம்ப மற்றும் விமர்சன வடிவமைப்புகளை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜூன் இறுதியிலும், ஜூலை ஆரம்பத்திலும் வெற்றிகரமாக மூன்று மீடியம் ரேன்ஞ் சோதனைகளை வெற்றிகரமாய் நிகழ்த்தியது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் :
நம்பகமான மீடியம் ரேன்ஞ் விமான பாதுகாப்பு ஏவுகணைகளை உருவாக்க இந்தியாவின் டிஆர்டிஓ இஸ்ரேலின் ஐஏஐ-உடன் (இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம்) இணைந்து பாராக்-8 ஏவுகணைகளை வழங்க இருக்கிறது.

லாங் ரேன்ஞ் ஏவுகணை :
மறுபக்கம் இந்திய கப்பற்படைக்கான லாங் ரேன்ஞ் ஏவுகணை திட்டம் ரூ.2606.02 கோடி செலவில் முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

70 கி.மீ எல்லை :
இந்த ஏவுகணை 70 கி.மீ ஒரு எல்லை கொண்ட இலக்கை அடையும் வண்ணம் இந்தியாவினால் வெற்றிகரமாய் சோதனை செய்யப்பட்டது. இஸ்ரேலும் கடந்த நவம்பர் 2015-ல் மற்றொரு சோதனையை வெற்றிகரமாய் நடத்தியது.

ஐஎன்எஸ் கொல்கத்தா :
"இரண்டு செயல்பாட்டு விமானம் சோதனையானது வெற்றிகரமாக டிசம்பர் 2015-ல் ஐஎன்எஸ் கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துளார்.

ஏவுகணை இடைவெளி :
இவ்வகை நடுத்தர அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணைகளானது (எஸ்ஆர் -சாம் ) 50 - 70 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவைகள் என்பதும், இவைகள் இந்தியாவின் தற்போதைய ஏவுகணை இடைவெளியை நிரப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வலிமை :
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பெருமைப்பட வேண்டிய பிற நாடுகள் நெருங்க முடியாத 'இந்திய வலிமை'களை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே கிளிகே செய்யவும்..!

மேலும் படிக்க :
அதிர்ச்சி : இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்..!
உத்திரப்பிரதேசத்தில் உலாவிய பறக்கும் தட்டு, புகைப்படத்தில் சிக்கியது..??

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications