Home
Scitech

ரஷ்யா விமானத்தை வைத்து பாகிஸ்தான் ரேடாருக்கு சாணி- தெறிக்கவிட்ட இந்தியா.!

பாகிஸ்தான் ரேடாருக்கு சிக்காமல், 12 போர் விமானங்களும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்களையும் இனி காணலாம்.

புல்வாமா தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா போர் விமானம் மிராஜ் 2000 குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யா விமானத்தை வைத்து பாகிஸ்தான் ரேடாருக்கு சாணி- தெறிக்கவிட்ட இந்திய

பாகிஸ்தான் ரேடாருக்கு சிக்காமல், 12 போர் விமானங்களும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்களையும் இனி காணலாம்.

மிராஜ் 2000 விமானங்கள் 12 பாகிஸ்தான் எல்லையில் நுழைய இந்தியா ரஷ்யாவிடம் வாங்கியிருந்த A-50 AWAC பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகாலையில் தாக்குதல்:

அதிகாலையில் தாக்குதல்:

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர் விமானம் மிராஜ் 2000 நுழைந்து அதிவேக தாக்ககுதலை நடத்தியது. முசாபர், பாலக்கோடு உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் கூண்டு அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் இருந்த 350 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த முறையும் பாகிஸ்தான் மறுப்பு:

இந்த முறையும் பாகிஸ்தான் மறுப்பு:

முதலில் இந்திய விமானங்கள் தங்கள் நாட்டில் நுழைய வில்லை என்று முதலில் சப்பை காட்டு கட்டின. சிறிது நேரம் கழித்து இந்திய விமானங்கள் எல்லைக்குள் வந்தது. எங்களின் போர்விமானங்களை பார்த்து திரும்பின என்று கதை விட்டன. பிறகு, இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் யாரும் சாகவில்லை என்றும் கூறியது. வெற்று இடத்தில் தாக்குதல் நடத்தியது என்று பாகிஸ்தான் கூறியது.

ஆயிரம் கிலோ வெடி மருந்து:

ஆயிரம் கிலோ வெடி மருந்து:

இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு 1000 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் போர் விமானங்கள் வழி மறித்தால், அவற்றை தீர்த்துக் கட்ட ஏவுகணைகளையும் விமானங்களில் பொருத்தப்பட்டிருந்தது.

இந்திய விமானங்கள் சுட்டப்பவில்லை:

இந்திய விமானங்கள் சுட்டப்பவில்லை:

இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வழியில் நுழைந்து எவ்வாறு வெளியேறின என்றும், பாகிஸ்தானால் ஏன் தாக்குதல் நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
பாகிஸ்தானின் மக்களும், `இந்திய விமானங்களை ஏன் சுட்டு வீழ்த்த முடியவில்லை` என்ற கேள்வியை தங்கள் நாட்டு இராணுவத்தின் முன் வைக்கின்றனர்.

பராஸ் ஜாவேத் என்பவர், தனது ட்விட்டர் பதிவில்," ஆக, அவர்கள் நமது வான்வழியில் நுழைந்துள்ளனர். ஆனால், நம் ராணுவமோ, விமானப்படையோ அவர்களை சுடவில்லை. இப்போது, ட்விட்டர் பதிவுகள் மூலமாக மட்டுமே சுடுகிறோம்" என்று கோபமாக கேள்வியை எழுப்பியுள்ளார்.

 பாகிஸ்தான் ரேடாரில் சிக்கவில்லை:

பாகிஸ்தான் ரேடாரில் சிக்கவில்லை:

பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பால், ஏன் இந்த நுழைவை கண்காணிக்க முடியவில்லை?
`தி இன்ஸ்டிடூட் ஆஃப் டிபன்ஸ் அண்ட் அனாலிஸ்` (The insitutue of defense studies and analysis) இயக்குநராக இருக்கும், லஷ்மண்குமார் பஹேரா, "இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் படையை விட வலிமையானது" என்கிறார்.

எதிர்பார்க்காத பாகிஸ்தான்:

எதிர்பார்க்காத பாகிஸ்தான்:

பாகிஸ்தான் விமானப்படை, இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் வலிமையை கொண்டவை அல்ல. இந்திய விமானப்படை மிகவும் தயாரான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் இதை எதிர்பார்த்திருக்கவில்லை." என்று கூறுகிறார்.

 பாகிஸ்தான் ஜாமர் இயங்காது:

பாகிஸ்தான் ஜாமர் இயங்காது:

பாகிஸ்தான் ஜாமர் இயங்காது: இந்திய விமானப்படை இந்த தாக்குதலை மிகவும் குறைவான நேரத்தில் நடத்தி முடித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பும், ஜாமர்களும், திறம்பட செயல்படுபவை அல்ல. இவ்வளவு குறைந்த நேரத்தில், இத்தகைய தாக்குதலை கண்டறிந்து செயல்படுவதற்கான திறனை பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பு பெற்றிருக்கவில்லை."

12 நிமிடத்தில் திரும்பியது:

12 நிமிடத்தில் திரும்பியது:

12 மிராஜ் விமானங்கள், பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து, 19 நிமிடங்களில் தாக்குதலை முடித்து திரும்பியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ரஷ்யாவின்   A-50 AWAC விமானங்கனங்கள்:

ரஷ்யாவின் A-50 AWAC விமானங்கனங்கள்:

1971க்கு பிறகு, முதன்முறையாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்துள்ளது. 2000ஆம் ஆண்டின், ஏப்ரல் மாதத்தில், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து இரண்டு A-50 AWAC விமானங்களை வாங்கியது.
ராடார் மற்றும், மின்னணு கண்காணிப்பு ஆகிய விஷயங்களுக்கு இவை முக்கியமானவையாகும்.

பாகிஸ்தானை கண்காணிக்கும்:

பாகிஸ்தானை கண்காணிக்கும்:

பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல், அயாஸ் அகமது கான், பாகிஸ்தானிற்கு இவை பயங்கரமானவையாக இருக்கும் என்று அப்போதே கூறினார்.

இந்த விமானங்கள், பாகிஸ்தானின் வான்வெளியில், இந்தியா உளவு பார்க்க ஏதுவாக அமையும் என்று கவலை தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் நடக்கும் விஷயங்களை இந்தியா தெரிந்துகொள்ள உதவியாக அமையும் என்று எச்சரித்தார்.

பாகிஸ்தான் ரேடார் அமைப்பு :

பாகிஸ்தான் ரேடார் அமைப்பு :

அவர், "பாகிஸ்தானின் ஏவுகணைகள், ரடார் அமைப்பு இருக்குமிடம், விமானப்படை நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தியா தெரிந்துகொள்ள இந்த A-50 AWAC விமானம் வாய்ப்பு ஏற்படுத்தி தரும்" என்று கூறியிருந்தார்.

மேலும், defencedotpk, என்ற பாகிஸ்தானின் இணையதளம், தனது அறிக்கையில், பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மேம்பட்டவையாக இல்லாமல், வழக்கற்று போனவையாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா அதிக முதலீடு :

இந்தியா அதிக முதலீடு :

இந்தியா, வான்வெளி கண்காணிப்பில் அதிக முதலீடுகள் செய்துள்ளது. அதே சூழலில், அத்தகைய மேம்பட்ட அமைப்புகளைப்பெற பாகிஸ்தானும் முயன்றுள்ளது. இந்தியா மிகப்பெரிய நாடு. ஆனால், பகிஸ்தானின் கண்காணிப்பு அமைப்பில் இன்னும் பல குறைகள் உள்ளன. அவை காலத்திற்கு ஏற்றவாறு இல்லை."

சீனாவை நம்பும் பாகிஸ்தான்:

சீனாவை நம்பும் பாகிஸ்தான்:

உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வான்வெளி கண்காணிப்பு அமைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. பாகிஸ்தான், தனது பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில், அதிகளவில் சீனாவை நம்பியுள்ளது. ஆனால், வான்வெளியைப் பொறுத்தவரையில், சீனாவிடமிருந்து அவர்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு உதவிகளை நிறுத்தியது:

பாகிஸ்தானுக்கு உதவிகளை நிறுத்தியது:

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறைக்கான உதவிகளை செய்வதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. ஒபாமா அரசு, தமது கடைசி சில மாதங்களில், F16 ரக விமானங்களை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதை நிறுத்தியது. இதனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளுடன் இணைந்து, பாதுகாப்பு அமைப்புகளை தயாரிக்க கவனம் செலுத்தியது.

இதனால், சீனாவுடன் இணைந்து JF-17 ரக விமானத்தை தயாரிக்க பாகிஸ்தான் தொடங்கியது.

இந்தியாவிடம் 2,185 விமானங்கள்:

இந்தியாவிடம் 2,185 விமானங்கள்:

அமெரிக்காவின் பாதுகாப்பு இணையதளமான Global fire power, பாகிஸ்தானிடம் 1,281 பாதுகாப்பு விமானங்கள் உள்ளன என்றும், இந்தியாவிடம் 2,185 விமானங்கள் உள்ளன என்றும் கூறுகிறது. ஆதலால், லஷ்மண் குமார், "அணு ஆயுத திறன் இருந்த போதிலும், பாதுகாப்பு திறனை பார்க்கும்போது, பாகிஸ்தான் வலிமை இழந்தே உள்ளது."என்று கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
Balagot Air Attack: How did Indian flights depart from Pakistan? : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X