முதல்முறையாக விண்வெளியில் தயாரான சாக்லேட் பிஸ்கட்!

|

சாக்லேட் சிப்ஸ் குக்கீ எனும் பிஸ்கட்கள் விண்வெளியில் ஃபேக்கிங் முறையில் தயாரிக்கப்பட்ட முதல் உணவு என பெயர்பெற்றுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புவியீர்ப்பு விசை இல்லாத ஓவன் அடுப்பில்' இந்த பிஸ்கட்களை தயாரிக்க இரண்டு மணி நேரம் ஆனது.

விண்வெளி வீரர்கள்

விண்வெளி வீரர்கள்

கிறிஸ்மஸ் நாளுக்கு முன்னர் விண்வெளி வீரர்கள் ஐந்து தனித்தனி பிஸ்கட்டுகளை தயாரித்த நிலையில், அவற்றின் சுவை எப்படி இருக்கும் என்பது அவர்கள் யாருக்கும் தெரியாது ஏனெனில் அவையனைத்தும் சோதனைக்காக ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் பூமிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓவன்

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓவன்

எதிர்காலத்தில் செவ்வாய் கிரக உள்பட, பல நீண்ட தூர விண்வெளி பயணங்களின் போது சமையல் செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் பரிசோதனையின் ஒரு பகுதியாக, அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓவன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலையத்தில் நிறுவப்பட்டது.

பேஸ்புக் ஊழியர்களை வீட்டிலே இருக்க சொல்லி அதிரடி அறிவிப்பு: ஏன் தெரியுமா?பேஸ்புக் ஊழியர்களை வீட்டிலே இருக்க சொல்லி அதிரடி அறிவிப்பு: ஏன் தெரியுமா?

ஐ.எஸ்.எஸ் தளபதி லூகா பர்மிடானோ

ஐ.எஸ்.எஸ் தளபதி லூகா பர்மிடானோ

சமையல் செய்வதற்கான சரியான வெப்பநிலை மற்றும் நேரத்தைக் கண்டறியும் வகையில், ஐ.எஸ்.எஸ் தளபதி லூகா பர்மிடானோ பல நாட்கள் செய்த பரிசோதனையின் போது இந்த பிஸ்கட்களை அவர் தயாரித்தார்.

அதிகமான நேரம் தேவைப்பட்டது

அதிகமான நேரம் தேவைப்பட்டது

குக்கீகள் பூமியில் தயாரிப்பதற்காக எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் 'கணிசமாக அதிக நேரம்' எடுத்தன. பூமியில் எடுத்துக்கொள்ளும் 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்துடன் ஒப்பிடும்போது, இங்கு ​​'சரியான' பிஸ்கட்டுகளை தயாரிக்க இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது.

இந்த பிஸ்கட்கள்

இந்த பிஸ்கட்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அனுப்ப நிலையில், இன்னும் மூன்று குக்கீகள் ஹூஸ்டன் ஆய்வகத்தில் தனிப்பட்ட ஃபேக்கிங் பைகளில் மூடப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளன.

"இந்த பிஸ்கட்களில் உள்ள வித்தியாசத்தை உண்மையில் கண்டுபிடிப்பதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படும். ஆனால் நிச்சயமாக ஒரு சிறந்த தயாரிப்பு. ஒட்டுமொத்தமாக கூறவேண்டுமானால், இது ஒரு அழகான அற்புதமான முதல் பரிசோதனை என்று நான் நினைக்கிறேன்" என்று டெக்சாஸைச் சேர்ந்த நானோராக்ஸின் மேலாளர் மேரி மர்பி கூறுகிறார்.

கூகுள் பே பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.!கூகுள் பே பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.!

இது பெரிதும் உதவும் என்றனர்

பரிசோதனையின் இறுதி முடிவுகளை தீர்மானிக்க குக்கீகள் விரைவில் உணவு அறிவியல் நிபுணர்களால் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த சோதனைகளுக்கு பின்னால் உள்ள குழுவினர் கூறுகையில், இது நீண்ட கால விண்வெளி பயணத்தை அதிக சவுகரியமாக மாற்ற எதிர்காலத்தில் முயற்சிக்கும் நிபுணர்களுக்கு இது பெரிதும் உதவும் என்றனர்.

 நானோராக்ஸ் நிறுவனம்

நானோராக்ஸ் நிறுவனம்

நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நானோராக்ஸ் நிறுவனம், கடந்த நவம்பரில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நிறுவப்பட்ட இந்த சிறிய மின்சார சோதனை அடுப்பை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Baked Cookies from Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X