பழங்கால பால்பெக் கோவில் ஏலியன்களின் தரையிறங்கும் தளமாக விளங்கியதா.?

By Meganathan
|

நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் இன்று நாம் வாழ்வதை விட மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மேலும் பல்வேறு மர்ம நகரங்களும், அங்கு வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய வெண்கல துகள்களும் கண்டெடுக்கப்பட்ட செய்திகள் ஏராளம்.

இவற்றில் பல நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு குறித்த தகவல்கள் இன்றும் மர்மமாகவே இருக்கின்றன. மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டதோடு, மிகவும் பிரம்மாண்டமாகவும் அவற்றில் பல கட்டிடங்கள் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

பழமை என்றால் வரலாறு ஒருபக்கம் இருக்க, அது சார்ந்த பல்வேறு தகவல்களும் உறுதி செய்யப்பட முடியாதவையாகவே இருக்கின்றன. அந்த வகையில் பூமியில் ஏலியன்கள் தரையிறங்கும் தளமாக விளங்கிய பழமை வாய்ந்த கோவில் குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..

லெபனான்

லெபனான்

லெபனான், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் பண்டைய கட்டிடம் தான் பால்பெக். இது கிட்டத்தட்ட 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கடவுள் பெயரான பா'எல் தழுவி வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

வருகை

வருகை

ஃபோனிகன்களை பொருத்த வரை பால்பெக் இடத்தில் தான் முதல் முறை பா'எல் கடவுள் பூமியில் வருகை புரிந்ததாக நம்புகின்றனர். மேலும் இப்பகுதியானது ஏலியன்களின் தரியிறங்கும் தளமாகவும் விளங்கியதாகக் கூறப்படுகின்றது.

கல்

கல்

இந்தக் கோவில் கட்டமைக்க 1,500 டன் எடை மற்றும் 68*14 அளவு கொண்ட கட்டிட தொகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பிரம்மாண்டமான கட்டிடம் கட்டியவர்கள் மற்றும் இதன் பயன்பாடு குறித்த தகவல்கள் ஏதும் இன்றளவும் இல்லை.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இத்தகைய பிரம்மாண்ட கற்களை வெட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் இன்றும் ஆய்வாளர்களை வாய்பிளக்கச் செய்கின்றன.

குறிப்பு

குறிப்பு

பண்டைய குறிப்புகளில் பால்பெக் தரையிறங்கும் இடமாகக் குறிக்கப்பட்டிருக்கின்றது, இருந்தும் இத்தகையை அதி நவீன நாகரீகம் மற்றும் ஏலியன் தொழில்நுட்ப ஆதரவு குறித்த உண்மை இன்று வரை அறியப்படாமலேயே இருக்கின்றது.

ஆதாரம்

ஆதாரம்

பால்பெக் கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட கற்கள் ரோமானிய மற்றும் கிபி காலத்தில் வாழ்ந்த நாகரீகத்தினரால் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ரோமன் தொழில்நுட்பம்

ரோமன் தொழில்நுட்பம்

முன்பு வாழ்ந்த ரோமானிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுமார் 5 டன் எடை கொண்ட கற்களை வெட்ட முடியும், ஆனால் 1500 டன் எடை கொண்ட கற்களை வெட்ட எவ்வித தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Baalbek Ancient Temple and Landing Spot For Aliens Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X