ஆஸ்திரேலிய காட்டுத்தீ ! திகிலூட்டும் விண்வெளி படங்கள்..

|

ஆஸ்திரேலியாவின் கட்டுக்கடங்காத காட்டுத்தீ மிகவும் மோசமானதாக இருப்பதால், பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள்கள் கூட காட்டுத்தீயின் தீப்பிழம்புகள் மற்றும் புகைமண்டலத்தை விண்வெளியில் இருந்து எளிதில் கண்டுபிடித்துவிட்டன.

 காலநிலை சீர்குலைவு

காலநிலை சீர்குலைவு

மனிதனால் ஏற்படும் காலநிலை சீர்குலைவு வெப்பமான, வறண்ட நிலைமைகளை அதிகப்படுத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கருதினாலும், இந்த காட்டு தீ இயற்கையாக தொடங்கியதாகவே தெரிகிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி கிழக்கு ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ 14 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை எரித்ததுடன், அரை பில்லியன் விலங்குகளை கொன்று , நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர வைத்துள்ளதாக தெரிகிறது.

ஹிமாவரி -8

மேலேயுள்ள புகைப்படமானது ஐரோப்பாவின் கிட்டத்தட்ட பாதி பரப்பளவில் நியூசிலாந்து வரை மஞ்சள் நிறத்தில் புகைமண்டலம் பரவியுள்ளதை காட்டுகிறது. இது கடந்த வியாழக்கிழமை ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பின் ஹிமாவரி -8 செயற்கைக்கோளால் எடுக்கப்பட்டது.

மோசமான சூழ்நிலை

அக்டோபர் 2014 இல் விண்ணில் செலுத்தப்பட்ட ஹிமாவரி -8, ஃபோர்டு எஃப் 150 பிக்கப் டிரக்கிற்கு சமமான எடையுடையது. இது தற்போது நமது கிரகத்திலிருந்து 22,300 மைல் தொலைவில் ஒரே இடத்தில் சுற்றிவருகிறது. பலவிதமான உட்புற சென்சார்களைப் பயன்படுத்தி, ஹிமாவரி -8, நாசாவின் சுமோமி-என்.பி.பி செயற்கைக்கோள் மற்றும் இன்னபிற புவி கண்காணிப்பு இயந்திரங்கள் ஆஸ்திரேலியாவின் மோசமான சூழ்நிலையை காண்பிக்கும் அதிர்ச்சியூட்டும் படங்களை பூமிக்கு அனுப்பிவருகின்றன.

புகைமண்டலம்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மிகவும் வெளிப்படையான புகைப்படங்கள், அனிமேஷன்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளை இங்கே தொகுத்துள்ளோம்.


ஹிமாவரி -8 மேற்கு அரைக்கோளத்தை நோக்கி அமைந்துள்ளதால், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியின் இந்த பக்கத்தை புகைப்படம் எடுக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா, அதன் காட்டுத்தீ மற்றும் புகைமண்டலம் எளிதாக தெரிகின்றன.

வறட்சியில் எளிதில் பரவுகின்றன

வறட்சியில் எளிதில் பரவுகின்றன

செப்டம்பரில் தொடங்கிய தீயில் இருந்து நெருப்புள்ள கரித்துண்டுகள் அசாதாரணமாக நீண்ட, வறண்ட மற்றும் விரிவான வறட்சியில் எளிதில் பரவுகின்றன.


இந்த அனிமேஷன், ஜனவரி 1 மற்றும் 2 முதல், பொதுவாக கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு ஒளியில் பல வெப்பமான இடங்களை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக காட்டுத்தீயின் இரண்டு பெரிய பரப்புகள் (மையத்தின் தென்மேற்கே காட்டப்பட்டுள்ளன) டஜன் கணக்கான மைல்கள் நீளமாக உள்ளன.


தரையின் பகல்நேர செயற்கைக்கோள் காட்சிகள் சமமாக இருந்தாலும் இன்னும் வியத்தகு முறையில் இல்லை. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் -2 செயற்கைக்கோள் புத்தாண்டு தினத்தன்று பேட்மேன் விரிகுடாவைக் கடந்து செல்லும் போது பரவி வரும் காட்டுத்தீயின் படத்தை எடுத்தது.

 சுமார் 1.3 பில்லியன் ஏக்கர்

சுமார் 1.3 பில்லியன் ஏக்கர்

இந்த நெருப்பின் நோக்கம் புரிந்து கொள்வது கடினம். நியூ சவுத் வேல்ஸில் மட்டும், பற்றிஎரியும் தீயை ஒரு நேர் கோட்டில் வைத்தலால், சிட்னியில் இருந்து இந்தியப் பெருங்கடல் முழுவதும் தாண்டி ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் அளவிற்கு பரவியுள்ளது காட்டுத்தீ.


புகைமண்டலம் மட்டும் தற்போது சுமார் 1.3 பில்லியன் ஏக்கர் அல்லது ஐரோப்பாவின் பாதி அளவு மற்றும் நியூசிலாந்தில் 1,000 மைல்களுக்கும் அதிகமாக நகர்ந்து, அங்கு வானத்தை மூச்சுத் திணறச் செய்து மஞ்சள் நிறமாக்குகிறது.

2019 ஆம் ஆண்டில் அமேசானின் மழைக்காடுகளில் எரிந்த பகுதிகளை விட, இரு மடங்கிற்கும் அதிகமான பகுதிகளை இந்த காட்டுத்தீ இதுவரை இரையாக்கியுள்ளது.

தீ விபத்தில் குறைந்தது 17 பேர் காணாமல் போன நிலையில், எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரழிவைத் தடுக்க தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் இரவுபகலாக வேலை செய்கிறார்கள். இருப்பினும் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை குறையும் வரை இன்னும் சில மாதங்களுக்கு இந்த காட்டுத்தீ எரியக்கூடும் என தெரிகிறது.

News Source: sciencealert.com

Best Mobiles in India

English summary
Terrifying Images Show The Overwhelming Scale of Australia's Bushfires From Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X