Home
Scitech

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு?

லேப்டாப் தயாரிப்பில் டெல் மற்றும் ஹெச்பி ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் ஆசஸ் நிறுவனம் புதிய மாடல் லேப்டாப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

லேப்டாப் தயாரிப்பில் டெல் மற்றும் ஹெச்பி ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் ஆசஸ் நிறுவனம் புதிய மாடல் லேப்டாப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஜென்புக் சீரிஸ் லேப்டாப்புகளில் கிராபிக்ஸ் கார்டு உள்பட பல நல்ல அம்சங்கள் அடங்கியுள்ளது.

ஆசஸ் நிறுவனத்தின் புதிய  ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு?

இந்த நிலையில் ஆசஸ் நிறுவனம் ஒரு புதிய சீரீஸ் லேப்டால் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சிறிய அளவில் எடை குறைவான இந்த புதிய மாடல் 13,14,15 ஆகிய இன்ச்களில் டிஸ்ப்ளே உள்ளது. இந்த மாடல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்த நிறுவனங்களில் ரூ.100,990 என்ற விலையில் கிடைக்கின்றது.

முக்கிய அம்சங்கள்:

முக்கிய அம்சங்கள்:

இண்டல்கோர் i7-8565U பிராஸசர்

14-இன்ச் எல்.இ.டி பேக்லிட் FHD டிஸ்ப்ளே

1920 x 1080 பிக்சல் ரெசலூசன்

பிரேம் இல்லாத நானோ எட்ஜ் டிசைன்

92% ஸ்க்ரீன் மற்றும் பாடி விகிதம்

8 ஜிபி LPDDR3 ரேம்

512 ஜிபி PCIe 3.0 x2 SSD

டச்பேட் கீபோர்ட்

டச்பேட் நம்பர் பேட்

ஆசஸ் சோனிக்மாஸ்டர் ஸ்டீரீயோ ஆடியோ சிஸ்டம்

3D IR HD கேமிரா

புளூடூத் 5.0

50 Wh 3-லித்தியம் பாலிமர் பேட்டரி

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

புதிய ஜென்புக் சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பான வடிவமைப்பில் உள்ளது. இதில் 13 அங்குல சேஸ் உள்ள 14 அங்குல நோட்புக் இணைக்கப்பட்டுள்ளது. இதுவொரு 92 சதவீதம் திரையில் இருந்து பாடி விகிதம் வழங்கும் மூலம் ஒரு உச்சநிலை உயர்ந்த வடிவமைப்பு. மேலும் நான்கு பக்கங்களிலும் இயங்கும் பெசல்கள் குறைவானவை. அதிநவீன வெப்கேம் கொண்டது. இதில் உள்ள அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய லென்ஸ் மூலம் தெளிவான படங்கள் மற்றும் குறைந்த சத்தம் கொண்டதாக அமைந்துள்ளது.

இதனை மூடி திறக்கும் போது கீபோர்டின் பாதுகாப்புக்கு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்த லேப்டாப்பில் ஒரு யூஎஸ்பி, ஒரு 3.1 போர்ட், ஒரு யூஎஸ்பி, 2.0 2.0 பொர்ட் மற்றும் ஒரு HDMI மற்றும் ஆடியோ ஜாக், மற்றும் ஒரு மைக்ரோ SD அட்டை இணைந்து ஒரு USB- சி 3.1 Gen 2 போர்ட் ஆகியவை உள்ளது. மொத்தத்தில் இந்த புதிய ஆசஸ் ஜென்புக் 14 சந்தையில் சிறப்பான அல்ட்ரா புக் ஆகும்.

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளே:

இந்த புதிய ஜென்புக் 14 லேப்டாப்பில் 14 இன்ச் எல்.இ.டி பேக்லிட் டிஸ்ப்ளே உள்ளது. இதன் ரெசலூசன் 1920 x 1080 பிக்ச்ல் ஆகும். மேலும் இதில் 157 PPI அம்சமும் உள்ளது. இந்த பெசல் எல்.சி.டி டிஸ்ப்ளே, கேமிரா உள்பட அனைத்தையும் அடங்கியுள்ளது.

மேலும் இதில் உள்ள மெல்லிய பெசல் காரணமாக தெளிவான திரையும், பளபளப்பான பின்னணி தன்மையும் கிடைக்கும். மேலும் ஷார்ப்பான படம் தெரிய இந்த லேப்டாப்பில் 4K UHD ஆப்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த மாடலின் டிஸ்ப்ளே அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது

ஆடியோ

ஆடியோ

சிறப்பான ஆடியோ வல்லுனர்களின் உதவியால் இந்த ஜென்புக் சீரீஸில் ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் இதன் ஆடியோவை கேட்பதால் புதிய அனுபவம் ஏற்படும். இதில் உள்ள டுவின் ஸ்பீக்கர்கள் குரல்களை தெளிவாக, ஸ்மூத்தாக கேட்க உதவும் நீடித்து உழைக்கும் வகையிலும் எந்தவித அறையாக இருந்தாலும் ஆடியோவின் தரம் பாராட்டும் வகையில் இருக்கும்

கீபோர்டு:

கீபோர்டு:

இந்த ஜென்புக் லேப்டாப்பின் கீபோர்டில் உள்ள ஒவ்வொரு கீயும் 0.2mm இடைவெளி உள்ளதால் பயன்படுத்துவது எளிது. வேகம் மற்றும் பிழையில்லாமல் டைப் அடிக்க இது உதவுகிறது. மூன்று வித பிரைட்னெஸ், மற்றும் ஒவ்வொரு கீக்கும் இடையில் இருக்கும் இடைவெளி ஆகியவை பயன்படுத்துவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். முதலில் டைப் அடிக்கும்போது ஒருசில பிழைகள் ஏற்பட்டாலும் பழக பழக துல்லியமாக டைப் அடிக்கலாம். மேலும் டைப் அடிக்கும்போது அதிக சப்தம் இல்லாமல் ஸ்மூத் அனுபவத்தை கொடுக்கும்,. மேலும் இதில் விண்டோஸ் 10 மல்டி டச் அம்சங்களும் உண்டு. எல்.இ.டி ஒளிரக்கூடிய நம்பர் பேட் கூடுதல் சிறப்பு.

மற்ற அம்சங்கள்

மற்ற அம்சங்கள்

இந்த ஜென்புக் 14 லேப்டாப் 8வது தலைமுறை ஜென் சிப்செட், 8 ஜிபி LPDDR3 ரேம், நான்கு கோர் மற்றும் எட்டு த்ரெட்ஸ் பிராஸசர், ஆகிய அம்சங்களை கொண்டது. மேலும் இதில் லேட்டஸ்ட் கிராபிக்ஸ் உள்ளடங்கியுள்ளது. குரோம் பிரெளசரில் ஒரே நேரத்தில் மல்டிபிள் விண்டோஸ் ஓப்பன் செய்யலாம். கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு கூடுதல் அனுபவம் கிடைக்கும். இதில் உள்ள 50 வாட்ஸ் ஹவர் பேட்டரி தரம் உடையது. 6 முதல் 7 மணி நேரம் சார்ஜ் இருக்கும் வகையில் இதன் பேட்டரியின் தரம் உள்ளது.

முடிவுரை:

முடிவுரை:

மொத்தத்தில் இந்த புதிய ஜென்புக் 14 லேப்டாப் குறைந்த எடையில், எளிய வடிவமைப்பில் , அழகிய டிசைனில் பல சிறப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது. ஸ்பீக்கர்கள், கீபோர்டுகள் இதன் தனித்தன்மை. இதில் உள்ள ஸ்கீரின்கள் நல்ல அனுபவத்தை கொடுப்பதோடு பேட்டரி திறனும் சிறப்பாக உள்ளது. தினசரி பயன்பாட்டுக்கு பயனாளிகளுக்கு முழு திருப்தியை கொடுக்கும் அளவுக்கு இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
new-equipment-to-stop-drunk-and-drive-found-by-chennai-students: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X