சிக்கியது பிளாக் ஹோல், அங்குமிங்கும் உலவுகிறதாம்; பூமியை நெருங்குமா? விழுங்குமா?
அந்த அறிவிப்பின் படி, ஜூப்பிட்டர் கிரகத்தின் அளவில் உள்ள ஒரு பிளாக் ஹோல் (கருந்துளை) ஒண்டு நமது பால்வெளி மண்டலத்தில் அங்குமிங்கும் சுற்றி அலைந்து திரிந்து கொண்டு உள்ளது.
ஜப்பான் தேசிய வானியல் ஆய்வு மையத்திலிருந்து வானியல் வல்லுநர்கள் குழுவாழ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அரிய மற்றும் குழப்பமான "விண்வெளி பொருள்" சார்ந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜூப்பிட்டர் கிரகத்தின் அளவில் உள்ள ஒரு பிளாக் ஹோல் (கருந்துளை) ஒண்டு நமது பால்வெளி மண்டலத்தில் அங்குமிங்கும் சுற்றி அலைந்து திரிந்து கொண்டு உள்ளது.

இந்த பிளாக் ஹோல் கண்டுபிடிப்பையும் அதன் பரிமாணங்களையும் பார்க்கும் போது, இதுவரை அறியப்பட்ட கருப்பு ஓட்டைகள் பற்றிய "கட்டுக்கதை" ஒன்று உடைக்கப்பட்டு உள்ளது. அதாவது கருந்துளைகள் ஆனது வேறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளன என்பது வெளிப்பட்டு உள்ளது.

முதலில், பிளாக் ஹோல் அல்லது கருந்துளை என்றால் என்ன?
அதன் எல்லைக்குள் செல்லும் (ஒளி உட்பட்ட) எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதி தான் கருந்துளை ஆகும்.

நட்சத்திரத்தின் ஈர்ப்பு வீழ்ச்சி!
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது அளவில் மிகவும் சிறியதாக இருக்கிறது. அதாவது அதன் விட்டம் ஒரு சில கிலோமீட்டர்கள் தான் இருக்கும். ஆனாலும் கூட, இதுவும் வழக்கம் போல நட்சத்திரத்தின் ஈர்ப்பு வீழ்ச்சியின் போது உருவாகி இருக்கலாம் என்றும், அவை பொதுவாக இரட்டை நட்சத்திர அமைப்புகளின் பகுதியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இடைப்பட்ட எடை கொண்ட பிளாக் ஹோல்!
இது வரையிலாக, பிளாக் ஹோல் என்பது மிகவும் பெரியதாக இருக்கும், மில்லியன் அல்லது பில்லியன் கணக்கான சூரிய எடைக்கு சமமான வெகுஜனத்தை கொண்டிருக்கும் என்றும், அவைகள் பெரும்பாலான விண்மீன் மண்டலங்களில் மையத்தில் தான் இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் இப்பொது இடைப்பட்ட எடை கொண்ட பிளாக் ஹோல்கள் கூட உள்ளன என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

மிகவும் அபூர்வமான ஒன்றாகும்!
இந்த கடைசி வகையைச் சார்ந்த கருப்பு துளைகளின் பரிமாணங்கள் ஒரு கிரகத்தின் அளவை ஒத்திருக்கின்றன (கிரகதுடன் ஒப்பிடும் பட்சத்தில் மிகப்பெரிய ஒன்றாகும்) அல்லது நட்சத்திரத்தின் அளவை ஒத்திருக்கின்றன. இது மற்ற இரண்டு பிரிவுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். அதனால் தான் இவைகள் சாகசத்தை விரும்பும் மர்மமான பயணிகள் போன்று இடங்களைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றனவாம்.

அம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்!
இவ்வகை பிளாக் ஹோல்கள் ஆனது பைனரி முறைகளின் பகுதியாகவும் இருக்காது, மேலும் அறியப்பட்ட சில விண்மீன் மையங்களுக்கு மிக அருகிலும் இருக்காது. சில வகையான பொருள் (வாயு மேகம் அல்லது ஒரு துரதிருஷ்டவசமான நட்சத்திரம்) சந்திக்கும் போது அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இவைகளை பார்க்க முடியும். அம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் கீழ் தான் இந்த அரிதான பிளாக் ஹோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில்!
தெளிவாக கூறவேண்டும் என்றால், பால்வெளி மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு கண்ணுக்கு தெரியாத ஈர்ப்பு மூலத்தை சுற்றியுள்ள ஒரு தொடர் வாயு நீரோட்டங்களைக் கண்காணிக்க முடிந்து உள்ளது. சிலியில் உள்ள அடகாமா லார்ஜ் மில்லிமீட்டர் எர்ரே (Atacama Large Millimeter Array - ALMA) தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேகத்தின் வடிவம் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

ஆக பூமிக்கு எந்த ஆபத்தும் வராது!
இந்த வகையான கருப்பு ஓட்டைகள் ஆனது அவைகளை சுற்றியுள்ள வாயுவை ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் மிகவும் வேகமாக நகர்த்தப்படுகின்றன. எனவே அவை சிறிய பகுதியை மட்டுமே உறிஞ்சிக் கொள்கின்றன (ஆக பூமிக்கு எந்த ஆபத்தும் வராது) மற்றும் மிகச் சிறிய வெளிச்சத்தை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. மேலும் இந்த குறிப்பிட்ட கறுப்பு துளைகள் ஆனது அருகில் உள்ள விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டாலன்றி, அவற்றை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications