Home
Scitech

மிகவும் தொலைதூர கிரகத்தை கண்டறிந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள்!

அதனை இன்னும் குணாதிசயப்படுத்தவோ அல்லது வரையறுக்கவோ இல்லை எனினும்,இது சூரியனில் இருந்து 140 வானியல் அலகுகள் (AU) எனும் மிகப்பெரிய சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகிறது.

சூரியனிலிருந்து மிகவும் தொலைவில், வானியல் ஆராய்ச்சியாளர்கள் சூரிய மண்டலத்தில் இதுவரை கண்டறிந்ததிலேயே மிக தொலைதூர கிரகம் என கருதும் வகையிலான புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளனர்.

மிகவும் தொலைதூர கிரகத்தை கண்டறிந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள்!

அதனை இன்னும் குணாதிசயப்படுத்தவோ அல்லது வரையறுக்கவோ இல்லை எனினும்,இது சூரியனில் இருந்து 140 வானியல் அலகுகள் (AU) எனும் மிகப்பெரிய சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இது ப்ளூட்டோவை விட 3.5 மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முன்னோடியாக கடந்த ஆண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குட்டு கிரகமான 'ஃபார்அவுட்' ஏறக்குறைய 120 வானியல் அலகு சுற்றுவட்டப்பாதையை கொண்டது. எனவே இயல்பாகவே இந்த புதிய கிரகத்தை 'ஃபார்ஃபார்அவுட்' எனலாம்.


கிரெனிஜி இன்ஸ்டியூஷன் ஆஃப் சயின்ஸ்-ஐ சேர்ந்தவரும், மர்ம கிரகமான ப்ளானெட் எக்ஸ்-ஐ தேடும் குழுவின் தலைவருமான ஸ்காட் ஷெப்பர்டால் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் அவருடைய சக ஊழியர்களும் இன்னும் அந்த மிகப்பெரிய கிரகத்தை கண்டுபிடிக்கவில்லை எனினும், வேறு நிறைய விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

மிகவும் தொலைதூர கிரகத்தை கண்டறிந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள்!

அதில் ஒன்று தான் ஃபார்அவுட். மேலும் கடந்த ஆண்டு மற்றொரு குட்டி கிரகமான "தி கோப்ளின்"-ஐ 65வானியல் அலகுகள் தொலைவிலும், இதுவரை கண்டிராத வியாழனை சுற்றி வரும் 12 நிலவுகளையும் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

தரவுகளை ஆராய்ந்து கொண்டிருக்கையில், சூரியனிலிருந்து 20 பில்லியன் கிலோமீட்டர்(12பில்லியன் மைல்கள்) தொலைவில் ஒரு சிறிய பொருளை கண்டறிந்தார். ஃபார்அவுட் பற்றியே இன்னும் அதிகமாக தெரியாது என்ற நிலையில், மிகப்பெரிய சுற்றுவட்டப்பாதையை கொண்ட இந்த ஃபார்ஃபார்அவுட் பற்றி தெரிந்துகொள்ள குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தேவைபடலாம்.

இந்த ஃபார்ஃபார்அவுட் பற்றி குறைவாகவே தெரிந்திருந்தாலும்,அதை பற்றி மேலும் அறியும் வகையில் , இந்த மர்மப் பொருளை மேலும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளது இக்குழு. இந்த நம்பமுடியாத தொலைதூர கிரகங்களை கண்டுபிடிப்பது என்பது மிகச் சிறந்த சாதனை என்றபோதிலும், அவற்றை புரிந்துகொள்வதன் மூலம் 200 வானியல் அலகுகளுக்கு அப்பால் உள்ள பிளானட் எக்ஸ் தேடலில் பயனுள்ளதாக இருக்கும்.

மிகவும் தொலைதூர கிரகத்தை கண்டறிந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள்!

ஏற்கனவே தி கோப்ளின் கிரகத்தில் பார்த்தபடி, இந்த தொலைதூர பொருள்களின் சுற்றுப்பாதைகள் ஒரு கற்பனையான கிரகத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், அது எங்கே இருக்கும் என்பதைக் கண்டறிவதற்கான முன்னோட்டமாக இவை இருக்கலாம்.

"இந்த தொலைதூர கிரகங்கள் நம்மை பிளானட் எக்ஸ்-க்கு அழைத்து செல்வதில் முன்னணி வகிக்கின்றன" என்று ஷெப்பர்ட் கடந்த ஆண்டு தெரிவித்தார். "இதுபோன்ற கிரகங்களை இன்னும் எவ்வளவு அதிகமாக கண்டுபிடிக்கிறோமோ,அந்த அளவிற்கு நாம் வெளிப்புற சூரிய குடும்ப அமைப்பு மற்றும் சாத்தியமான கிரகங்கள் பற்றி புரிந்து கொள்ள முடியும்"

Best Mobiles in India

English summary
Astronomers Just Detected The Most Distant Solar System Object Ever Seen: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X