வியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது!

கார்னிஜி இன்ஸ்டியூட் ஆப் சைன்ஸ்-ல் வானியல் அறிஞர்கள் முதலில் இந்த நிலாக்களை மார்ச்2017 கண்டறிந்தனர். அதனுடன் கடந்த ஆண்டு வேறு இரு நிலாவையும் ஏற்கனவே உறுதிபடுத்தினர்.

|

வியாழனின் சுற்றுவட்ட பாதையில் மேலும் பத்து நிலா இருப்பது உறுதிபடுத்தப்பட்டதால், அதன் துணைக்கோள்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சூர்யகுடும்பத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலா உள்ள கோள் என்ற பெயர் பெற்றுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி கற்கள், ஏன் வியாழன் இன்று இருப்பது போல உள்ளது என்று வானியல் அறிஞர்கள் நுண்ணறிய உதவுகிறது.

வியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது!

கார்னிஜி இன்ஸ்டியூட் ஆப் சைன்ஸ்-ல் வானியல் அறிஞர்கள் முதலில் இந்த நிலாக்களை மார்ச்2017 கண்டறிந்தனர். அதனுடன் கடந்த ஆண்டு வேறு இரு நிலாவையும் ஏற்கனவே உறுதிபடுத்தினர். சிலியில் உள்ள பலான்கோ 4மீட்டர் டெலஸ்கோப் பயன்படுத்தி இந்த குழு முதலில் 12 நிலவுகளை கண்டறிந்தாலும், இவற்றை கண்டுபிடிப்பது அவர்களின் முக்கிய நோக்கமன்று. மாறாக தனித்த சிறிய பொருட்கள் அல்லது சூர்ய குடும்பத்தில் ப்ளூட்டோவை தாண்டி இருக்கும் கோள்களை அவர்கள் தேடினர். ஆனால் அவர்கள் விளிம்பு விண்வெளி கற்களை தேடியதால், அதே நேரம் வியாழனைச் சுற்றி என்ன பதுங்கியுள்ளது என்பதை கண்டறியவும் முடிவுசெய்தனர். தற்போது அவர்கள் கண்டறிந்த நிலவுகளை ஏற்கனவே பலமுறை கண்காணித்துள்ளனர் மற்றும்அவற்றின் துல்லியமான சுற்றுவட்டப்பாதையை சர்வதேச வானியல் கூட்டமைப்பின் ஒப்புதலுக்கு சமர்பித்துள்ளனர்.

. வியாழனுக்கு மிக அருகில்

. வியாழனுக்கு மிக அருகில்

இந்த நிலவுகள் அனைத்தும் மிகச்சிறியதாக, ஒரு மைலுக்கு குறைவாக அளவு முதல் 2 மைல் வரை அகலம் கொண்டவை. மற்றும் இவை 3 மூன்று வெவ்வேறு வகையாக பிரிக்கப்படுகின்றன. வியாழனுக்கு மிக அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதைகள் இருக்கும் இரு நிலா, வியாழன் சுற்றும் திசையிலேயே நகர்கிறது. அதிலிருந்து மிக அதிகமாக, சுமார்15.5 மில்லியன் மைல் தொலைவில் ஒன்பது நிலவுகள், வியாழன் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் நகர்கின்றன.

வானியல் அறிஞர்களால்

வானியல் அறிஞர்களால்

ஆனால் அதே தொலைதூர பகுதியில் வானியல் அறிஞர்களால் வாலிடுடோ என்று அழைக்கப்படும் ஒரு விசித்திரமான நிலா, மற்ற இரு உள் நிலவுகளுடன் சேர்ந்து வியாழனுடன் சுற்றி வருகிறது. அப்படியென்றால் அதே பகுதியில் உள்ள மற்ற அனைத்து நிலவுகளுக்கு எதிர் திசையில் இது சுற்றுகிறது. "அடிப்படையில் இது தவறான திசையில் சுற்றி வருகிறது" என்கிறார் இந்த கண்டுபிடிப்பு குழுவை வழிநடத்திய ஸ்காட் ஷப்பார்ட். "இது மிகவும் நிலையற்ற சூழ்நிலை. இது போன்ற சூழ்நிலையில் மோதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது".

ஏற்கனவே வியாழனில் நிலவுகளுக்கு இடையே மோதல்

ஏற்கனவே வியாழனில் நிலவுகளுக்கு இடையே மோதல்

வாலிடுடோ மட்டுமே இப்படி செய்யும் வியாழனின் நிலவு இல்லை. கார்போ என்று அழைக்கப்படும் வியாழனின் மற்றொரு நிலவு, வியாழனில் இருந்து வெகு தொலைவில், அதே பகுதியில் உள்ள மற்ற நிலவுகளுக்கு எதிர்திசையில் தனது சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனினும் வாலிடுடோ நிலவின் சுற்றுவட்டப்பாதை கார்போவில் இருந்து மிகத்தொலைவில் உள்ளது மற்றும் இது தான் வியாழனின் நிலவுகளிலேயே மிகச்சிறியதும் கூட. தற்போதைய இந்த கண்டுபிடிப்புகளின் மூலம், ஏற்கனவே வியாழனில் நிலவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரமாகவே வானியல் அறிஞர்கள் பார்க்கின்றனர். மேலும் இவை தான் தற்போதையை நிலவுகளின் நிலப்பரப்புகளுக்கு காரணம் என்கின்றனர்.

நிலவுகளை காண்பது என்பது அரிதானது

நிலவுகளை காண்பது என்பது அரிதானது

வியாழனைச் சுற்றி நிலவுகளை கண்டறிவது என்பது மிகவும் கடினமானது. இது தான் சூர்ய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் என்பதால், மிகப்பெரிய பரப்பில் ஆதிக்கம் செலுத்தும். எனவே டெலஸ்கோப் வழியாக நிலவை அந்த பகுதியில் கண்டறிவது என்பது மிகக்கடினம். மேலும் வியாழன் மிகப்பெரிய கோளாக இருப்பதால், அது அதிகப்படியான ஒளியை எதிரொளிக்கும். ஆகையால் அதற்கு மத்தியில் நிலவுகளை காண்பது என்பது அரிதானது.

வியாழன் சுற்றும் திசையிலேயே சுற்றும் 9 நிலவுகள்

வியாழன் சுற்றும் திசையிலேயே சுற்றும் 9 நிலவுகள்

அதிர்ஷ்டவசமாக, விஞ்ஞானிகள் பயன்படுத்தும் பாலன்கோ 4 மீட்டர் டெலஸ்கோப் நிலவுகளை கண்டறிய மிகப்பொறுத்தமான கருவி. இந்த உயர்தர டெலஸ்கோப்பில் மிகப்பெரிய கேமரா இருப்பதால், வியாழனைச் சுற்றி உள்ள மிகப்பெரிய பரப்பை மிகக்குறைந்த நேரத்தில் வானியல் ஆய்வாளர்களால் பார்க்க முடியும். மேலும் இந்த டெலஸ்கோப் வியாழனில் இருந்து வரும் ஒளி மற்றும் எதிரொளிப்புகளை சரியாக கையாளும் திறனுடையது.

வியாழன் சுற்றும் திசையிலேயே சுற்றும் 9 நிலவுகள் ஒரு காலத்தில் மிகப்பெரிய நிலவின் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம். அல்லது 3 மிகப்பெரிய நிலவுகளின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இவை எப்படி பிரிந்தன என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அந்த பெரிய நிலவுகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு மோதல்களின் காரணமாக தற்போது நாம் காணும் சிறிய நிலவுகள் உருவாகியிருக்கலாம்.

டக்லஸ் ஹேமில்டன்

டக்லஸ் ஹேமில்டன்

ஆனால் நமக்கு விடை தெரிய வேண்டிய கேள்வி என்னவென்றால்,எப்படி வியாழன் உருவானது மற்றும் எந்த சூழ்நிலையில் இது இவ்வளவு நிலவுகளை கைப்பற்றியது? என்கிறார் டக்லஸ் ஹேமில்டன், இந்த கண்டுபிடிப்பு குழுவில் இடம்பெறாத விண்வெளி ஆய்வாளர்.


ஆனால் இதை விட நிறைய நிலவுகள் வியாழனைச் சுற்றி பதுங்கியிருக்கலாம். அவற்றையும், எப்படி வியாழன் இன்று உள்ளது போல மாறியது என்பதையும் கண்டறிய வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
Astronomers have found a new crop of moons around Jupiter, and one of them is a weirdo : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X